கீரைகளின் பெறுமதியை அறிந்து உண்போம் (Medicinal value of spinach)

கீரைகளில் எத்தனை மருத்துவம் (Medicinal value of spinach) இருக்கின்றது தெரியுமா!

கீரைகள் (Medicinal value of spinach) இயற்கையின் அருள்கொடைகள் என்றே சொல்லலாம். நம் அன்றாட உணவில் கீரைகளின் பங்கு மிகவும் மகத்தானது. நோயை விரட்டி உடலுக்கு சக்தி அளித்து, ஆரோக்கியத்தை அள்ளி தருபவை.

கிராமத்தில் பின்பற்றப்படும் பாட்டி வைத்தியத்தில் கீரைகள் (Medicinal value of spinach) முக்கிய பங்கு வக்கின்றன.

கீரைகளில் பலவகைகள் உள்ளன. ஆனாலும் அதிகமானோர் பயன்படுத்துவது அரைக்கீரை, சிறுகீரை, முளைக்கீரை மட்டுமே.

தெருவில் கீரை விற்பவர்கள் முதல்கொண்டு காய்கறி சந்தை வரை அதிகமாக நாம் காண்பதும் இந்த வகை கீரைகள் தான்.

பண்டைய காலம் முதலே பலவகையான கீரைகளை தங்கள் சாப்பாட்டில் சேர்த்து வந்துள்ளனர் நம் முன்னோர்கள். அதன் பலனும் அலாதியானது.


அரைக்கீரை, சிறுகீரை, முளைக்கீரை, முருங்கைக்கீரை, பொன்னாங்காணி, வாதநாராயணி, அகத்தி,சண்டி கீரை , குறிஞ்சா பசலை, கறிவேப்பிலை,புளிச்சக்கீரை , தண்டுக்கீரை, முள்ளங்கிக்கீரை, கொத்தமல்லி தழை, புதினா,மணத்தக்காளி கீரை, வெந்தயக்கீரையுடன் கிராமங்களில் ஆங்காங்கே புல்பூண்டுகளுடன் முளைத்துக்கிடக்கும் முடக்கற்றான், குப்பைமேனி, வல்லாரை, தூதுவளை, குப்பைக்கீரை, முள்ளுக்கீரை, தாளிக்கீரை,சக்ரவர்த்திக்கீரை, தொய்யாக்கீரை, ஆரைக்கீரை, முசுமுசுக்கை, கோவை, கரிசலாங்கண்ணி, வெள்ளைக்கீரை,  போன்ற பல்வேறு கீரை வகைகள் உள்ளன.

இன்றைக்கு நம்நாட்டில்  மட்டுமல்லாது உலக நாடுகளிலும் பெரிய பிரச்சனையாக இருப்பது நீரிழிவு, ரத்தக்கொதிப்பு போன்ற நோய்கள் தான்.

இத்தகைய நோய்கள் அதிகரித்திருப்பதற்கு முக்கிய காரணம் முறையான உணவு உண்ணாமையும் வாழ்வியல் மாற்றங்களும் தான்.

தினமும் ஒரு கீரை வகையை உணவில் சேர்த்துக் கொண்டு வந்தோமானால், விரைவிலேயே உடல் ஆரோக்கியத்தையும் பலமடங்கு நோய் எதிர்ப்பு சக்தியையும் பெற்றுவிடலாம்.

கீரைகளைப் பயிர் செய்யும் விவசாயிகள் கீரைகள் விரைவாக வளரவும், பூச்சி தாக்குதல்கள் இல்லாமல் இருக்கவும் பல்வேறு ரசாயன உரங்களை பயன்படுத்துகிறார்கள்.

ஆனால் இத்தகைய கீரைகள் நமக்கு எந்த அளவில் பலன் தரும் என்பது கேள்விக்குறியே.இயற்கை முறையில் பயிர் செய்யப்படும் கீரைகளை வாங்கி பயன்படுத்துவதே நல்லது.

அல்லது  முடிந்தவர்கள் வீட்டிலேயே கிடைக்கும் குறைவான இடத்திலும் மற்றும் தொட்டிகளிலும் கீரைகளை வளர்த்து சமையலுக்குப் பயன்படுத்துவது சிறந்தது.

சிறுதோட்டங்களில் கோவை, மூக்கற்றை, துத்தி, குப்பைக்கீரை, முள்ளுக்கீரை, குப்பைமேனி போன்றவை ளைச்செடிகளாகவே முளைத்து கிடக்கும்.

இவற்றை வளர்ப்பது எளிதானது. தொட்டிகளில் வெந்தயக்கீரை,முளைக்கீரை,தூதுவளை, கரிசலாங்கண்ணி, முடக்கற்றான் போன்றவற்றை வளர்க்கலாம்.

Medicinal value of spinach,அன்னைமடி,கீரைகளில் மருத்துவம்,கீரைகளின் பயன்கள்,கீரை வகை,annaimadi.com,lettuce,medicine in spinach
வல்லாரை

கீரைகளை சமைக்கும் முறை

கீரைகளை வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வேக வைத்து சிறிது தேங்காய்ப்பால் சேர்த்து கடைந்து, ஆறியதும் சிறிது தேசிப்புளி சேர்த்து சாதத்துடன் உண்ணலாம். மூடி போட்டு  வேக வைக்க கூடாது. அதிக நேரமும் வேக வைக்க கூடாது.

பருப்புடன் கீரைகளை சேர்த்து குழம்பு மற்றும் கூட்டாகவும் பல கீரைகளை ஒன்றாக சேர்த்து, புளி, பூண்டு, மிளகாய், வெங்காயம், உப்பு சேர்த்து வேகவைத்து மசியலாக கடைந்தும் சாப்பிடலாம்.

கீரையைப் பொரித்துச் சாப்பிடுவதால் பலனில்லை.

Medicinal value of spinach,அன்னைமடி,கீரைகளில் மருத்துவம்,கீரைகளின் பயன்கள்,கீரை வகை,annaimadi.com,lettuce,medicine in spinach
சண்டி இலை

கீரைகளின் மருத்துவ பயன்கள் (Medicinal value of spinach)

அகத்திக்கீரை- ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளியவைக்கும்.

காசினிக்கீரை- சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும்.

சிறுபசலைக்கீரை- சருமநோய்களைத் தீர்க்கும் பால்வினை நோயை குணமாக்கும்.

பசலைக்கீரை- தசைகளை பலமடையச் செய்யும்.

மஞ்சள் கரிசலை- கல்லீரலை பலமாக்கும், காமாலையை விலக்கும்.

குப்பைகீரை- பசியைத்தூண்டும்.வீக்கம் வத்தவைக்கும்.

அரைக்கீரை- ஆண்மையை பெருக்கும்.

புளியங்கீரை- சோகையை விலக்கும், கண்நோய் சரியாக்கும்.

பரட்டைக்கீரை- பித்தம், கபம் போன்ற நோய்களை விலக்கும்.

பொன்னாங்கன்னி கீரை- உடல் அழகையும், கண்ஒளியையும் அதிகரிக்கும்.

வெள்ளை கரிசலைக்கீரை- ரத்தசோகையை நீக்கும்.

முருங்கைக்கீரை- நீரிழிவை நீக்கும், கண்கள், உடல் பலம்பெறும்.

வல்லாரை கீரை- மூளைக்கு பலம் தரும்.

முடக்கத்தான்கீரை- கை, கால் முடக்கம் நீக்கும் வாயு விலகும்.

புண்ணக்கீரை- சிரங்கும், சீதளமும் விலக்கும்.

புதினாக்கீரை- ரத்தத்தை சுத்தம் செய்யும், அஜீரணத்தை போக்கும்.

தும்பைகீரை- அசதி, சோம்பல் நீக்கும்.

முள்ளங்கிகீரை- நீரடைப்பு நீக்கும்.

பருப்புகீரை- பித்தம் விலக்கும், உடல் சூட்டை தணிக்கும்.

புளிச்சகீரை- கல்லீரலை பலமாக்கும், மாலைக்கண் நோயை விலக்கும், ஆண்மை பலம் தரும்.

மணத்தக்காளி கீரை- வாய் மற்றும் வயிற்றுப்புண் குணமாக்கும், தேமல் போக்கும்.

முளைக்கீரை- பசியை ஏற்படுத்தும், நரம்பு பலமடையும்.

சக்கரவர்த்தி கீரை- தாது விருத்தியாகும்.

வெந்தயக்கீரை- மலச்சிக்கலை நீக்கும், மண்ணீரல், கல்லீரலை பலமாக்கும். வாத, காச நோய்களை விலக்கும்.

தூதுவளை- ஆண்மை தரும். சருமநோயை விலக்கும். சளித்தொல்லை நீக்கும்.

தவசிக்கீரை- இருமலை போக்கும்.

துத்திக்கீரை- வாய், வயிற்றுப்புண் அகற்றும். வெள்ளை மூலம் விலக்கும்.

(Medicinal value of spinach)
வாதநாராயணி
புதினா

கீரைகளில்  கைமருத்துவம்  (Medicinal value of spinach)

குழந்தைகளுக்கு விற்றமின் குறைபாடு காரணமாக வாயின் ஓரங்களில் புண்கள் ஏற்படும். அத்துடன் உள்தாடைப்பகுதிகள் மற்றும் நாக்கில் வெண்ணிற புண்கள் உண்டாகும். இதற்கு கிராமங்களில் கல்யாண முருங்கை துளிர் இலைகளை பறித்து வெறுமனே மென்று தின்னச்செய்வார்கள்.

மேலும் துளிர் இலைகளை பருப்பு சேர்த்து கூட்டுச் செய்து சாப்பிடக் கொடுப்பர். இதனால் வியக்கும் வகையில் நல்ல பலன் கிடைக்கும்.

வளரும் குழந்தைகளுக்கு பருப்பு சேர்த்த கீரை கடையல் நிறைந்த சத்துக்களை தரும்.

பசி இல்லாமலும் சாப்பிட பிடிக்காமலும் இருப்பவர்களுக்கு, இந்த மசியல் பசியை உருவாக்கிச் சாப்பிடும் ஆவலைத் தூண்டும் வல்லமை பெற்றவை. கொத்தமல்லிதழையும் பசியின்மைக்கு அருமருந்து.

சளித்தொல்லையால் அவதிப்படுபவர்கள் முசுமுசுக்கை கீரையை அரைத்து தோசைமாவில் கலந்து தோசையாக வார்த்து சாப்பிடலாம்.

Medicinal value of spinach,அன்னைமடி,கீரைகளில் மருத்துவம்,கீரைகளின் பயன்கள்,கீரை வகை,annaimadi.com,lettuce,medicine in spinach
தூதுவளை

அல்லது ஊறவைத்த பச்சரிசி, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், கைப்பிடி முசுமுசுக்கை இலை, பெருங்காயம், உப்பு சேர்த்து கரகரப்பாக அரைத்து அடை செய்து சாப்பிடவும். சளித்தொல்லை பறந்துபோகும்.

வறட்டு இருமலுக்கு தூதுவளை சிறந்த மருந்து. இதைத் துவையலாகச் செய்து சாப்பிட்டு வர இருமல் காணாமல் போகும்.

கிராமங்களில் மட்டுமல்லாது நகரங்களிலும் முருங்கையை வீட்டிற்கொரு மரமாக வளர்த்திருப்பார்கள். அதன் பயன் மிக மிக அதிகம். முருங்கை உடலுக்கு இரும்புச்சத்து அளித்து ரத்த விருத்தியை உண்டாக்கும்.

கருப்பை கோளாறுகளை துத்திக்கீரை நீக்கும். மூட்டில் தேங்கும் வாயுப் பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வருவது முடக்கற்றான். சிறுநீர் நன்றாக வெளியேற முள்ளங்கிகீரை உகந்தது.

Medicinal value of spinach,அன்னைமடி,கீரைகளில் மருத்துவம்,கீரைகளின் பயன்கள்,கீரை வகை,annaimadi.com,lettuce,medicine in spinach
முடக்கற்றான்

பசலையில் சிவப்பு, பச்சை என இரு வகைகள் உள்ளன. இரண்டுமே இரத்த விருத்தியையும் உடலுக்கு வலுவும் அளிக்கின்றன. வயலில் தேங்கும் தண்ணீரில் நான்கு இலைகளுடன் மிதக்கும் ஆரைக்கீரை சமைத்து சாப்பிட சுவையானது. குடலுக்கும் நல்லது.

இரும்புச்சத்து கொண்ட தண்டுக்கீரை பெண்களின் கருப்பை தொந்தரவுகளைத் தவிர்க்கக் கூடியது. கரிசலாங்கண்ணிகளில் மஞ்சள் நிறப்பூக்கள் கொண்டது உணவுக்கு ஏற்றது. வெள்ளை பூக்கள் கொண்ட கரிசலாங்கண்ணியை கலவைக் கீரையில் சேர்த்துக் கொள்ளலாம்.

Medicinal value of spinach,அன்னைமடி,கீரைகளில் மருத்துவம்,கீரைகளின் பயன்கள்,கீரை வகை,annaimadi.com,lettuce,medicine in spinach
வெந்தயக்கீரை

தலைமுடி பாதுகாப்பிற்கு

தலைமுடி பாதுகாப்பிற்கு காய்ச்சப்படும் எண்ணெயில், கறிவேப்பிலை, கரிசலாங்கண்ணி, பொன்னாங்காணி, சிறுகீரை, மருதாணி இலை ஆகியவற்றை சம அளவு எடுத்து அரைத்து சிறு அடைகளாகத் தட்டி, நிழலில் உலர்த்தி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சவும்.

பின் ஆற வைத்து வடிகட்டி எடுத்து கூந்தல் தைலமாக பயன்படுத்திவரலாம். இதனால்  கூந்தல் கருமையாக செழித்து வளர செய்வதுடன் முடி  உதிர்தலையும் தடுக்கும்.

தலையில் பொடுகு இருந்தால் பொடுதலை கீரையை அரைத்து தலையில் தடவி, சீயக்காய் தேய்த்துக் குளித்துவர விரைவில் நிவாரணம் கிடைக்கும். மேலும் பொடுதலை கீரையை துவையலாக அரைத்துச் சாப்பிட்டுவந்தால் பொடுகிலிருந்து சீக்கிரமே விடுதலை கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *