முதுகு தண்டுவட பாதிப்பு எதனால்? (Why spinal cord injury?)
உடல் உறுப்புகளில் தண்டுவடம் என்பது மிக முக்கியமானது. பொதுவாக தண்டுவடம் பாதிக்கப்படுவதால் உடலின் முழுஇயக்கமும் பாதிக்கப்படுகிறது. இதனால் சிறு வேலைகளுக்கு கூட பிறரில் தங்கியிருக்கும் நிலை ஏற்பட்டு விடும். இத்தகைய பெரும் சிரமத்தை உண்டுபண்ணும் முதுகு தண்டு பாதிப்பு (spinal cord injury) எதனால் ஏற்படுகிறது. என்பதைப் பார்ப்போம்.
முதுகு தண்டுவடத்தில் வலி (spinal cord injury) என்பது முன்பெல்லாம் வயதானவர்கள் தான் கூறுவர். ஆனால் இன்று இளம் வயதினரையும் பாதிக்கும் அளவிற்கு சாதாரணமாகி விட்டது. கழுத்து, நடுமுதுகு மற்றும் இடுப்பு வலி என்று ஏதேனும் ஒரு இடத்திலோ அல்லது எல்லா இடத்திலும் வலி ஏற்படுவதாக இளம்பிள்ளைகள் கள் கூட கூறுகின்றனர்.
இதற்கு காரணம் என்ன? வராமல் தடுப்பதற்கான வழிகள் என்ன? வந்தபின் வழியில் இருந்து எப்படி மீள்வது (Back Pain Relief ) என்பதை அறிய வீடியோவைப் பார்போம்.
வந்தபின் சரி செய்வதை விட ,வருமுன் காப்போம். அது தான் புத்திசாலித்தனம்!
வாதம், பித்தம், கபம் எனும் மூன்று தோஷங்கள் உள்ளன.கபம் உடல் பலத்தைத் தோற்றுவிக்கும், பித்தம் வலிமையைக் கிரகித்துக் கொள்ளும், வாதம் என்பது , உடலில் குளிர், சூடு ஆகியவற்றை பரவச் செய்யும். உடல்நிலை சரியாக இருக்க இம்மூன்று தோஷங்களும் நமக்கு உதவுகின்றன.
ஆனால் இம்மூன்றும் சீற்றம் அடைந்து விட்டால் நோய்கள் உருவாகின்றன. உடலில் வலி வருவதற்கு வாதமும், எரிச்சலை தோற்றுவிப்பது பித்தமும், உடல் அரிப்பைத் தருவதில் கபமும் அவைகளின் சீற்றத்தில் முக்கிய குறிகளாக தென்படும்.
தண்டுவட வலி ஏற்படுவதில் வாத தோஷம் முக்கிய பங்கு வகிப்பதை அறிகிறோம். வாதம் எதனால் சீற்றம் கொள்கிறது. என்பதை தெரிந்து கொள்வது, வலியிலிருந்து மீள வழிகிடைக்கும்.
வாதம் எதனால் சீற்றம் கொள்கிறது
- தன் உடல் சக்திக்கு மீறிய செயல்களை செய்தல் (உதாரணம் – மிகுந்த சிரமத்துடன் படிக்கட்டுகளில் பாரத்தை சுமந்து செல்லுதல்)
- அளவுக்கு மீறிய உடற்பயிற்சி
- மிகவும் உயர்ந்த இடத்திலிருந்து கீழே விழுதல்
- ஓடுதல்,குதித்துக் கொண்டே நடத்தல்
- உடலுறுப்புகளை மிகுதியாகத் துன்பறுத்துதல்
- கீழே விழுந்து அடிபடுதல்
- பெருங்குழி முதலியவற்றைத் தாண்டுதல்
- உடலிலிருந்து வெளியேறும் காற்று, சிறுநீர், மலம், வாந்தி, தும்மல், ஏப்பம் துக்கத்தால் தோன்றும் கண்ணீர் முதலியவற்றை வெளியேற்றாமல் அடக்குதல்
- அதிக தூரம் நீந்துதல், இரவு கண் விழித்தல், பளு சுமத்தல், நாற்காலியில் கால்மேல் காலைப் போட்டு அமர்தல்,
- இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கரவாகனங்களில் வெகுதூரம் பயணம் செய்தல், மிகுந்த தூரம் நடத்தல்.
- காரம், துவர்ப்பு, கசப்புச்சுவையுள்ள உணவுகளை அதிகம் சாப்பிடுதல்
- பட்டினி கிடத்தல், அதிகமாகவோ, அளவில் குறைந்தோ,நேரம்தவறி உணவை உண்பது
மேலும் குளிர்காலம், வானத்தில் மேகமூட்டம் ஏற்படுதல், காற்று மிகுதியாக வீசுதல், அதிக மழைபெய்யும் நேரம் ஆகிய காலங்களில் வாதம் சீற்றம் பெறும்.விடியற்காலை, பிற்பகல் நேரங்களிலும், உணவு செரிமானமடைந்த பின்னும் வாதத்தின் சீற்றத்தால் தண்டுவடத்தில் வலி அதிகமாவதை உணரலாம்.
மேற்கூறிய பழக்கங்களை தவிர்த்தல், உணவில் இனிப்பு, புளிப்பு, உப்புச் சுவையை சேர்த்தல், நெய்கலந்த சூடான புஷ்டி தரும் உணவு, சூடான வீர்யத்தினை உடைய உணவு வகைகள், பசி ஏற்பட்டவுடன் அதிகம் பட்டினியில்லாமல் உணவை உண்பது, உஷ்ணம் தரும் விரிப்புகளில் படுத்தல் போன்ற செயல்களாலும், இயற்கை உபாதைகளை அடக்காமல் உடனே வெளியேற்றுதல் போன்றவை மூலம் வாதம் சீற்றமடையாமல் தடுக்கவேண்டும்.
முதுகுதண்டுப் பிரச்சனை உள்ளவர்கள் சித்த ,ஆயுர்வேத முறையில் சிகிச்சையை மேற்கொண்டு நலம் பெறுவதே சாலச் சிறந்தது.