பலரும் அறியாத ஆன்மீக அமானுஷ்யங்கள் (Spiritual occult)

நம் அறிவுக்கு எட்டாமல் ஆன்மீக நற்சக்தி (Spiritual occult) இவ்வுலகில் உள்ளது என்பதை, ஆங்காங்கே அவ்வப்போது  உறுதிப்படுத்தப்பட்டுக் கொண்டு இருக்கிறது. அவற்றில் சில முக்கியமானவை பற்றி தெரிந்து கொள்வோம்.

1.. திருப்பூரில் உள்ள குண்டடம் வடுகநாத பைரவர் கோவிலில் குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும் பொழுது, ஒவ்வொரு மாதமும் எந்த வடிவத்தில் எந்த விதமானநிலையில் இருக்கும் என்பதை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கல்லில் சிற்பங்களாக வடித்து வைத்துள்ளார்கள்.

2.காசியில் கருடன் பறப்பதில்லை. மாடு முட்டுவதில்லை. பிணம் எரிந்தால் நாற்றம் எடுப்பதில்லை. பூக்கள் மணம் வீசுவதில்லை.

3. தென்காசி அருகில் புளியங்குடியில் சுயம்பு நீரூற்று வற்றி தண்ணீா் இல்லாமல் இருக்கும் போது, பிராா்த்தனை செய்து பால் அல்லது இளநீா் விட்டால் மறுநாள் ஊற்றில் நீர் வந்துவிடுகிறது.

4. தூத்துக்குடி மாவட்டம் செட்டியாபத்து கிராமத்தில் பொியசாமி கோவிலில் கோவிலுக்கு நோ்ந்துவிடப்படும் பன்றி கொடை விழாவின்போது அங்குள்ள நீருள்ள தொட்டிக்குள் தலையை தானாகவே மூழ்கி இறந்துவிடுகிறது.

5. குளித்தலை அருகில் ரத்தினகிாி மலை மேல் காகங்கள் பறப்பதில்லை.

6.திருநெல்வேலி பாளையங்கோட்டை அருகே திருச்செந்தூா் சாலையில் உள்ள சிரட்டை பிள்ளையாா் கோவிலில் விநாயகருக்கு விடலை போடும் போது சிரட்டையும், தேங்காயும் பிரிந்து சிதறுகிறது.

7.  கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே கோட்டையூரில் நூற்றி ஒன்று சாமிமலை குகையில் ஓரடி உயரம் கொண்ட கல்லால் ஆன அகல் விளக்கில் இளநீர் விட்டு தீபமேற்றினால் பிரகாசமாக எரியும் அதிசயம் (Spiritual occult) நடக்கிறது.

சிவன்கோவிலில் நிகழும் ஆன்மிக அமானுஷ்யங்கள் (Spiritual occults in Shiva temple)

 • தஞ்சைபிரகதீஸ்வரர் கோவிலில் 72 தொன் எடையுள்ள கல், கோபுர உச்சியில் வைக்கப்பட்டுள்ளது. கருவறை குளிர்காலத்தில் வெப்பமாகவும் வெயில் காலத்தில் குளிராகவும் இருக்கிறது.சுசிந்திரம் சிவன் கோவிலில் ஒரு சிற்பத்தின் காதில் குச்சியை நுழைத்தால் மறு காதுவழியாக வருகிறது.
 • வட சென்னையில் ஐயாயிரம் ஆண்டுகள் பழமையான வியாசர்பாடி ரவீஸ்வரர் சிவன்கோவிலில் 3 வேளையும் சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது மாலை போல் வந்து விழுகிறது.
 • தாராபுரம் ஐராவதீஸ்வரர் கோவிலில் உள்ள இசைப்படிகளில் தட்டினால் சரிகமபதநி என்ற  ஏழு இசை வருகிறது.

ஆலயங்களும் அறியாத ஆன்மிக அமானுஷ்யங்களும் ,Spiritual occult,Indian temples,piritual occult in indian temples,annaimadi.com,அன்னைமடி,meenakshi amman, Srirangam,தஞ்சை பெருங்கோவில்,Thanjai periya kovil,ஸ்ரீ ரங்கம்,மீனாட்சி அம்மன்

 • வெள்ளியங்கிரி மலையில் கடலுக்கு 3500 அடி உயரத்தில் சிவனின் பஞ்சவாத்ய ஒலி கேட்கிறது.
 • நாகர்கோவில் கேரளபுரம் சிவன் கோவிலில் உள்ள ஒரு விநாயகர் ஆறுமாதகாலம் கருப்பாகவும், ஆறுமாதம் வெண்மைநிறமாகவும் காட்சி தருகிறார்.
 • ஈரோடு காங்கேயத்துக்கு அருகில், மடவிளாகம் சிவன்கோவில் குளத்தில், பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு மண் பானை நிறைய விபூதி தோன்றுகிறது.
 • தேனி அருகில் உள்ள சிவன்கோவிலில் அவரவா் உயரத்தில் சிவலிங்கம் காட்சி தருகிறது.
 • திருமந்திரநகா் (தூத்துக்குடி) சிவன்கோவிலில் சித்திரைத் தோ்த்திருவிழாவின் போது தோ் ஓடும் ரதவீதி மட்டும் சுடுவதில்லை.
 • திருநாகேஸ்வரம் சிவன் கோவிலில் ராகுகாலத்தில் சிவபெருமானுக்கு செய்யப்படும் அபிஷேக பால் நீலநிறமாகிறது.
 • திருநல்லூர் கல்யாணசுந்தரேஸ்வரர் (பஞ்சவர்ணேஸ்வரர்) திருக்கோவிலில் சிவலிங்கம் 6 நாழிகைக்கு ஒரு வர்ணத்திற்கு மாறுகிறது.
 • ஜெயங்கொண்டத்தில் உள்ள கங்கை கொண்ட சோழபுரம் கோவிலில் உள்ள கிணற்றிற்கு அருகில் ஒரு சிங்கத்தின் சிற்பம் இருக்கும். சிங்கத்தின் வாயில் ஒரு கதவு தென்படும்.அதன் மூலம் கீழே இறங்கினால் கிணற்றில் குளிக்கலாம். ஆனால் மேலேயிருந்து பார்த்தால் நாம் குளிப்பது தெரியாது.
 • திருநெல்வேலி கடையநல்லூர் அருகில் சுந்தரேஸ்வரபுரம் சுந்தரேஸ்வரர் கோவிலில் பிரகாரத்தில் உள்ள விளக்குகளை அணைத்துவிட்டால் வெளியே உள்ள ஒளி மூலவர் மீது விழுவதைக் காணலாம்.
 • ஸ்ரீவில்லிபுத்தூரில் சிவராத்திரியன்று கொதிக்கும் எண்ணெயில் கையைவிட்டு வடை சுடுகிறார் ஒரு பாட்டி.
 • திருக்கழுக்குன்றத்தில் தெப்பக்குளத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்கு தோன்றுகிறது. சிவனுக்கு படைக்கப்பட்ட பிரசாதத்தை கழுகு உண்ணும் அதிசயம் நடைபெறுகிறது.ஆலயங்களும் அறியாத ஆன்மிக அமானுஷ்யங்களும் ,Spiritual occult,Indian temples,piritual occult in indian temples,annaimadi.com,அன்னைமடி,

பெருமாள் கோவில்களும்  நிகழும் ஆன்மிக அமானுஷ்யங்களும் (Perumal temples and Spiritual occults)

1.  ஸ்ரீரங்கம் கோவிலில் ஸ்ரீராமானுஜரின் உடல் 1000 வருடங்களாக கெடாமல் அப்படியே உள்ளது.

2.சென்னை முகப்போில் காிவரதராஜப்பெருமாள் கோவிலில் விளக்குகளை அணைத்துவிட்டால் பெருமாள் நம்மை நோில் பாா்ப்பது போல் (Spiritual occult) இருக்கிறது.

3. சேலம் தாரமங்கலம் பெருமாள் கோவிலில் ஸ்ரீராமா் சிற்பம் இருக்கும் இடத்திலிருந்து வாலி சிற்பம் இருப்பதை பாா்க்க முடியும். ஆனால் வாலி சிற்பம் இருக்கும் இடத்திலிருந்து ஸ்ரீராமரைப் பாா்க்க முடியாத வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.ஆலயங்களும் அறியாத ஆன்மிக அமானுஷ்யங்களும் ,Spiritual occult,Indian temples,piritual occult in indian temples,annaimadi.com,அன்னைமடி,meenakshi amman, Srirangam,தஞ்சை பெருங்கோவில்,Thanjai periya kovil,ஸ்ரீ ரங்கம்,மீனாட்சி அம்மன்
4. நாகா்கோவில் நாகராஜா கோவிலில் கொடுக்கப்படும் மண் கருப்பாகவோ வெள்ளையாகவோ இருக்கிறது. (Spiritual occult).

அம்மன் அருள் தலங்களும் அமானுஷ்ய சக்திகளும் (Goddess temples and Spiritual occults)

1. மதுரை மீனாட்சி அம்மன்கோவில் தெப்பகுளத்தில் மீன்கள் வளராது.

2. திருப்புவனம் (சிவகங்கை மாவட்டம்) அருகில் கல்லுமடை திருநாகேஸ்வரமுடையாா் கோவிலில் மீனாட்சி அம்மன் உருவம் 2 மாதங்களுக்கு ஒரு முறை நிறம் மாறுகிறது.

3. செங்கம் ஊரில் உள்ள, ஸ்ரீ அனுபாம்பிகை உடனுறை ரிஷபேஸ்வரர் கோயிலில் ஆண்டுக்கு ஒருமுறை, பங்குனி மாதம் மூன்றாம் நாள், மாலை சூரிய அஸ்தமனத்தின் பொழுது, நந்தியம் பெருமான் மீது சூரிய ஒளி விழும் பொழுது, அவர் தங்க நிறத்தில் ஜொலிப்பார்.

முருகன் ஆலயங்களில் ஆன்மிக அமானுஷ்யங்கள்(Spiritual occults in Murugan temple)

 • சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் சூரசம்ஹாரத்திற்காக முருகன் அம்பிகையிடம் வேல் வாங்கும் போது முருகனின் திருமேனி முழுவதும் வியர்வை பெருகுகிறது. அா்ச்சகா் பட்டுத்துணியால் ஒற்றி எடுக்க துணி தொப்பலாக நனைந்துவிடுகிறது.
 • திண்டுக்கல் அருகே திருமலைக்கேணி முருகன் கோவிலில் அருகருகே உள்ள தெய்வானை சுனையின் நீர் எப்போதும் குளிர்ந்த நீராகவும், வள்ளிசுனையின் நீர் இரவுபகல் எந்நேரமும் வெந்நீராகவும் இருக்கிறது.
 • சென்னி மலை முருகனுக்கு அபிஷேகம் செய்யப்படும் தயிா் புளிப்பதில்லை.
 • விருதுநகாில் மகான் திருப்புகழ்சாமி கோவில் திருவிழாவின்போது சுவாமிக்கு படைக்கப்பட்ட சாதத்தில் வேல் வைத்து பூஜை செய்கின்றனா்.

  அதன் பின் எவ்வளவு பக்தா்கள் வந்தாலும் உணவு குறையாமல் வந்துகொண்டே இருக்கிறது. (வேலை எடுத்தவுடன் குறைந்து காலியாகிவிடும்) இதுபோல் உணவு குறையாமல் வருவது அத்திாி மலையிலும் நடைபெறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *