இலங்கை முறையில் தொதல் ( Sri Lankan thothal )

தொதல் (Sri Lankan thothal) மிகவும் தித்திப்பான சுவையுடையது. சாப்பிட்டவர்கள் அடிக்கடி செய்து சாப்பிட நினைப்பார்கள்.பிறந்தநாள்,கிறிஸ்துமஸ், புதுவருடபிறப்பு ,தீபாவளி என எந்தவிதமான கொண்டாட்டத்திற்கும் ஏற்றது இந்த இனிப்பு பலகாரம்.

இலங்கையில் மிகவும் பிரபலமான  ஒரு பலகாரம்.

லட்டு, பயத்தம் பலகாரம், அரியதரம், அல்வா,போன்ற பலகாரங்களில் இது சிறப்பானது.தொதல் (Sri Lankan thothal), அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியது.

இலங்கை முறையில் எப்படி தொதல் செய்வது  என வீடியோவில் பார்ப்போம்.

செய்து சாப்பிடுங்கள்! அருமையாக இருக்கும்.

சர்க்கரைநோய், இனிப்பு சாப்பிடக்கூடாது என்றெல்லாம் தவிர்க்க வேண்டாம்.ஒருநாள் செய்து சாப்பிடுவதால் எதுவும் ஆகப் போவதில்லை.அளவாக சாப்பிடுங்கள்.

இலங்கை இஸ்லாமியர்களின் சமையலில் இடம்பெறும் இனிப்பு வகை உணவுகளில் தொதல் மிகவும் முக்கியமான உணவு. இது பச்சரிசி, தேங்காய், சீனி, முந்திரி, ஏலக்காய் உட்பட்ட பொருட்களைப் பயன்படுத்திச் செய்யப்படுகிறது.

தொதல் செய்ய தேவையான பொருட்கள்

பச்சரிசி – 1 கிலோ 

தேங்காய் – 5 

சர்க்கரை 1 – கிலோ 

பனை வெல்லம் – 250 கிராம் (அல்லது அதே அளவுசர்க்கரை)  

 ஜவ்வரிசி – 4 மேசைக் கரண்டி (அல்லது அதே அளவு வறுத்த பாசிப்பருப்பு) 

ஏலக்காய்

 

செய்முறை

தேவையான அளவு பச்சரிசியை ஊறவைத்து இடித்து அரித்து மாவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

தேங்காயைத் துருவி அதன் பாலைத் தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு அகன்ற சட்டியில் பச்சரிசி மாவு, தேங்காய்ப் பால் (6 டம்ளர்), சீனி, பனை வெல்லம், பாசிப்பருப்பு இவற்றை ஒன்றாக ஊற்றி இரண்டு மணி நேரம் கிளர வேண்டும்.

பின்னர் 2 டம்ளர் தேங்காய்ப் பாலை ஊற்றிக் கலவை திரண்டு அல்வா போன்ற வடிவம் வரும் வரையிலும் கிண்ட வேண்டும்.

ஏலக்காயைப் பொடியாக்கித் தூவ வேண்டும்.

விரும்பினால், முந்திரிப் பருப்பை மேலே தூவலாம்.

அல்வா வடிவத்தில் கையில் ஒட்டாத பதம் வந்ததும் சட்டியை அடுப்பில் இருந்து இறக்கி ஆற வைக்கவும். நன்றாக ஆறிய பின்னர் கேக்குகள் போன்று வெட்டிப் பரிமாறலாம்.

 

thothal receipe,Sri lankan sweet, Sri Lankan method thothal

சுவையான தொதல் (Sri Lankan thothal) தயார்!

ஆறியதும் துண்டுகளாக்கி பரிமாறவும்.

தொதல் செய்வதற்கு முக்கியமாக நல்ல கடாய் (Kadhai) தேவை.ஏனெனில் அதிக நேரம் கிளறி செய்யப்படும் பலகாரம் இது.கிண்டிக் கொண்டிருக்கும் போது சட்டி ஆடிக் கொண்டிருந்தால்  சிரமம் ஆகிவிடும்.

அதற்கு இப்படியான, ஏதாவது ஓர் பாத்திரத்தை  பாவிக்கலாம்.

Sri lankan thothal receipe,Aluminium Kadhai for thothal makingCheck Price

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *