குடி பழக்கத்தை இலகுவாக நிறுத்த (Stop drinking alcohol)

குடிப்பழக்கதை நிறுத்த வில்வஇலை கசாயம் Decoction of bay leaf
வில்வ இலை ஒரு அற்புத மருந்து. வில்வ இலை கஷாயத்தை மதுவிற்கு அடிமையானவர்கள் அருந்தினால் குடியை வெகு விரைவில் நிறுத்திவிடலாம்(Stop drinking alcohol).
தேவையானவை
வில்வ இலை – ஒரு கைப்பிடி அளவு
ஏலக்காய் – ஒன்று
கொத்தமல்லி விதை – ஒரு ஸ்பூன்
பனை வெல்லம் – தேவையான அளவு
தண்ணீர் – 200 மில்லி
கசாயம் செய்முறை
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அவற்றில் 200 மில்லி தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். பின் ஒரு கைப்பிடியளவு வில்வ இலையை கொதிக்கும் நீரில் சேர்க்க வேண்டும்.
பிறகு ஏலக்காய் மற்றும் கொத்தமல்லி விதை ஆகிய இரண்டையும் ஒன்றாக உரலில் இடித்து கொதிக்கும் நீரில் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும்.
சரி பாதி alavu யாக கொதித்த பிறகு இறக்கி வடிகட்டி தேவையான அளவு பனை வெல்லம் சேர்த்து குடிப்பழக்கம் உள்ள நபர்கள் டீ, காபி குடிப்பது போல தொடர்ந்து 48 நாட்கள் அருந்தி வர குடிப்பழக்கத்தை எளிதாக நிறுத்திவிடலாம். இதனை மறைமுகமாகவும் கொடுத்து உதவலாம்.
பசுமையான வில்வ இலை கிடைக்காத பட்சத்தில் நிழலில் உலர்த்தி இலையை சுத்தம் செய்து பொடி செய்தும் மேற்கண்ட முறையில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு தொடர்ந்து இந்த கசாயத்தை குடிப்பதனால் அல்லது குடிக்க கொடுப்பதினால் மது அருந்தும் பழக்கத்தை அவர்களே மறந்துவிடுவார்கள்(Stop drinking alcohol).
இதையும் மீறி மது அருந்தினால் அவர்கள் அருந்திய மதுபானம் வாந்தியாக வெளியேறிவிடும். திரும்ப மது அருந்தவேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு அறவே வராது.
குடியை நிறுத்த சித்த வைத்தியம் (Siddha remedies to stop drinking alcohol)
- ஒரு டம்ளர் தண்ணீரில் 5 பேரிச்சம்பழங்களை ஊறவைத்து தினந்தோறும் காலை வேளையில் குடித்து வந்தால் குடி பழக்கத்தை கை விடவும் முடியும். அதோடு ஆரோக்கியமும் மேம்படும்.
- பாகற்காயை நன்றாக அரைத்து ஒரு குழி கரண்டி சாறு எடுத்துக்கொள்ளவும். ஒரு டம்ளர் மோரில் அந்த சாற்றை கலந்து வெறும் வயிற்றில் குடித்தால் நல்ல பலன் இருக்கும்.
- அதிகமான குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு உடம்பில் உள்ள ரத்தத்தில் விஷத்தன்மை கொண்ட நச்சுப்பொருட்கள் அதிகமாக சேர்ந்து கொண்டே வரும். ஆப்பிள் பழச்சாறு குடித்து வந்தால் உடலில் இருக்கும் நச்சுத்தன்மை நீங்கும்.
- மதுபானத்தை குடிக்க வேண்டும் என்ற எண்ணம் வரும்போதெல்லாம் கரட் ஜூஸ் (Carrot juice) குடிக்கலாம். அல்லது எலுமிச்சை பழ ஜூஸ், ஆரஞ்சு ஜூஸ் குடிப்பதை பழக்கமாக கொள்ளலாம்.