6 வயதில் சமையல், 12 வயதில் கல்விக்கு முற்றுப்புள்ளி.சாதிக்க வயது தேவையில்லை. 65 வயதில் சாண்டர்ஸின் (Colonel Sanders) விடா முயற்சிக்கு கிடைத்த பரிசு KFC (Story of KFC) உணவகம்.
உதாரணமாக வாழ்ந்து காட்டியவர் KFC ஸ்தாபகர். இது ஒரு அமெரிக்கதுரித உணவகம் (FAST FOOD RESTAURANT).இப்போது KFC அனைத்து தரப்பு மக்களுக்கும் தெரிந்த உணவகமாக விளங்குகிறது.சாண்டர்ஸ், இவர் பல பில்லியன் டாலர் மதிப்புள்ள துரித உணவகமான கென்டக்கி ஃபிரைடு சிக்கனின் (KFC) நிறுவனர்.
KFC உரிமையாளரின் துன்பமான இளமைக்காலம் (Story of KFC)
இந்த KFC உணவக சங்கிலியின் நிறுவனர் கர்னல் ஹார்லேண்ட் சாண்டர்ஸ் ஆவார். அவர் செப்டம்பர் 1890 இல் பிறந்தார். அவரது தந்தை அவருக்கு 6 வயதாக இருந்தபோது இறந்தார். அதனால், முழு குடும்பத்தின் சுமையும் சிறிய சாண்டர்ஸின் தாயின் மீது விழுந்தது.
மூன்று பிள்ளைகளில் மூத்தவர் என்பதால் சாண்டர்ஸ் தனது உடன்பிறந்தவர்களை பாதுகாத்து அவர்களுக்காக உணவும் சமைக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டது.
ஏழு வயதிலிருந்தே, அம்மா சாண்டர்ஸுக்கு எப்படி சமைக்க வேண்டும் என்று கற்றுக் கொடுத்தார். சாண்டர்ஸ் சமையல் பற்றி அறிந்து கொண்டது இப்படித்தான்.
இதனால் படிப்படியாக அவர் காய்கறி மற்றும் இறைச்சி சமைப்பதில் நிபுணத்துவம் பெற்றார்.
அவரது மாற்றாந்தந்தை உடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக சாண்டர்ஸ் 12 வயதில் தனது வீட்டை விட்டு வெளியேறினார்.
6 வயதில் சமையல், 12 வயதில் கல்விக்கு முற்றுப்புள்ளி.
சிறு வயதிலேயே சாண்டர்ஸ் பல தோல்விகளை சந்தித்தவர்.
செய்த தொழில்கள்
13 வயதில் வீட்டை விட்டு வேலைக்காக வெளியேறிய சாண்டர்ஸ் பலவிதமான வேலைகளை செய்துள்ளார்.
15 வயது இருக்கும்போது இராணுவத்தில் சேர்ந்தார். அங்கு அவர் கழுதையை கையாளுபவராக இருந்தார். இருந்தும் கர்னல் என்ற படத்தை பெற்றார்.வெறும் 4 மாதங்களுக்கு பிறகு வேலையை விட்டு வீடு திரும்பினார்.
மூன்று ஆண்டுகள் சட்டப் படிப்பு படிப்பதற்கு முன்னர், அவர் ஒரு பண்ணை தொழிலாளியாகவும், ஒரு டிரக் டிரைவராகவும், ஒரு நீராவி இயந்திர பணியாளராகவும் மற்றும் ஒரு இரயில்வே தொழிலாளியாகவும் பணிபுரிந்தார
முடிவடைந்தது.
பின்னர், சாண்டர்ஸ் தனது தாயுடன் தங்கி ஒரு காப்பீட்டு விற்பனையாளராக மற்றும் அவரது சொந்த படகு நிறுவனத்தில் ஒரு செயலாளராகவும் பணியாற்றினார்.
அசெட்டிலீன் விளக்கு உற்பத்திக்கான அவரது அடுத்த முயற்சி டெல்கோ போட்டியிட்டதால் தோல்வியடைந்தது.
கடின உழைப்பு இருந்தபோதிலும், சாண்டர்ஸ் தன் கோபத்தாலும், கீழ்ப்படியாமை குணத்தாலும் தனது வேலைகளில் நிலையில்லாமல் இருந்தார்.
பல வேலைகளும் பல தோல்விகளும் நேர்ந்த பின்பே கென்டக்கி நகரை வந்தடைந்தார் கர்னல்.
15 வேலைகள் மற்றும் 3 தொழில்களில் தோல்வி.
சாண்டர்ஸ் பின்னர் கென்டக்கிக்கு சென்று அங்கு “மிச்செலின்” டயர் கம்பெனிக்கு டயர் விற்பனையாளராக பணியாற்றினார், மேலும் “ஸ்டேண்டர்டு ஆயில் ஆப் கென்டக்கி”யில் எரிவாயு நிலைய இயக்குனராகவும் இருந்தார்.
சாண்டர்ஸின் 39 வயதில், அமெரிக்காவின் பெரும் சந்தை வீழ்ச்சி ஏற்பட்டது. அவர் வேலைசெய்த எரிவாயு நிலையம் மூடப்பட்டது.
சாண்டெர்ஸ் வாழ்க்கையின் மிக முக்கியமான திருப்புமுனையாக இந்த வீழ்ச்சி அமைந்தது.
ஒரு சில மாதங்களுக்குப் பிறகு, ஷெல் நிறுவனம் சாண்ட்ஸருக்கு ஒரு சேவை நிலையத்தை கமிஷனுக்கு குடுத்தது. சாண்டர்ஸ் அவ்விடத்தில் சமைத்த கோழி வகையே இப்போது உலகெங்கிலும் உள்ள ” கேஎப்சீ ” உணவகங்களில் செய்யப்படுகிறது.
சாண்டர்ஸ் தனது சேவை நிலைய சமையலறையில் சமைத்த வறுத்த கோழி, ஸ்டீக்ஸ் மற்றும் நாட்டின் ஹாம் ஆகியவை உலக புகழ்பெற்ற பிறகு கென்டக்கி கர்னல் கௌரவப் பட்டத்தை 1935 ஆம் ஆண்டில் பெற்றார்.
முதல் உணவகம் உருவான கதை(Story of KFC)
1929 இல் தான் சாண்டர்ஸ் தனது முதல் உணவகத்தைத் திறந்தார். இது கென்டக்கி எனும் இடத்தில் ஒரு சேவை நிலையத்திற்கு அருகில் உள்ளது. அவர் சிறுபிள்ளையாக இருந்த போது தனது தாயிடமிருந்து கற்றுக்கொண்ட சிக்கன் ரெசிபியை முதலில் தயாரித்து விற்கிறார்.
1930 யில் 40 வயது இருக்கும்போது Kentucky பகுதியில் Shell Oil நிறுவனத்தின் உணவகத்தை எடுத்து நடத்தினார். அப்பொழுதுதான் பல மூலிகைகள் மற்றும் மசாலாக்களுடன் சமைக்கப்பட்ட Kentucky Fried Chicken (KFC) சிக்கனை தயாரித்தார்.
இந்த சிக்கன் சுவைக்கு இந்த உணவகம் மிகவும் பிரபலமானது, நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் தெருவில் எதிர்பக்கமாக ஒரு பெரிய நிலத்தை வாங்கி உணவகத்தை விரிவுபடுத்தினார்.
இந்த சிக்கன் உணவின் சுவை காரணமாக, அப்போதைய ஆளுநரும் அவருக்கு கென்டக்கி கர்னல் (Kentucky Colonel) என்ற பெயரைக் கொடுத்தார்.
1939 ஆம் ஆண்டு நடைபெற்ற தேங்க்ஸ்கிவிங் நிகழ்ச்சியின் போது அவர் விரிவு படுத்திய மோட்டல் எரிந்துப் போனது.
பின்பு, சாண்டர்ஸ் அவர் 142 இருக்கைகள் கொண்ட ஒரு பெரிய உணவகத்தை மீண்டும் கட்டி,சாண்டர்ஸ் கோர்ட் & கபே ( Sanders Court & Café ) என்ற பெயரில் திறந்து வைத்தார்.
அவர் தனது 49வது வயதில் “இரகசிய ரெசிபி”யை முடிவு செய்து, தனது 65 வயதில் அதனை வணிகமாக்க ஆரம்பித்தார்.
ஆனால் இந்த நிகழ்வுகளுக்கு முன்னால் இவர் வாழ்ந்த வாழ்க்கை அவ்வளவு இனிமையானது அல்ல.
1940 ஆம் ஆண்டில் தான் இன்றளவும் பயன்படுத்தும் அசல் KFC சிக்கன் செய்முறையை (Story of KFC)உருவாக்கினார். இந்த அசல் செய்முறை 11 மசாலாப் பொருட்களுடன் கூடிய மறைக்கப்பட்ட செய்முறையாகக் கூறப்படுகிறது.
எப்படியோ, 1955 ஆம் ஆண்டில் சாண்டர்ஸ் உணவகத்தை விற்று தனது இரகசிய சிக்கன் செய்முறையை உரிமையாக்க முடிவு செய்தார். ஆனால் துரதிஷ்டவசமாக அவரது இந்த செய்முறை பலமுறை நிராகரிக்கப்படுகிறது.
கடைசியாக, ஒரு உணவகம் அவரது செய்முறையையும் இரகசிய மசாலா பாக்கெட் ஒப்பந்தத்தையும் விரும்புகிறது. ஆனால் அவரது இரகசிய சமையல் குறிப்பை யாருக்கும் கொடுக்கவில்லை. மாறாக அந்த செய்முறைக்காக தயாரிக்கப்பட்ட மசாலாப்பொருட்களின் பக்கெட்டுகளைத்தான் தருகிறார்.
KFC உணவகத்தின்உருவாக்கம் (Story of KFC)
பின்னர் அவர் முன்பு தொடங்கிய சாண்டர்ஸ் கோர்ட் & கஃபே உணவகத்தை விற்று, இந்த உரிமையை உலகம் முழுவதும் ஊக்குவிக்க கடுமையாக உழைக்கிறார். அப்படித்தான் முதல் கென்டக்கி ஃபிரைட் சிக்கன் (Kentucky Fried Chicken) அல்லது KFC உணவகம் ஆரம்பிக்கப்பட்டது.
இரண்டு குக்கர், மாவு, மசாலா கலவைகள் போன்றவைகளை அவரின் காரில் எடுத்துச்சென்று ஊருராக சுற்றித்திரிந்து ஒவ்வொரு உணவகங்களுக்கு சென்று அவரின் சிக்கன் செய்யும் முறையை விளக்கி விற்பனை செய்ய முயன்றார்.
ஆனால் அவரின் KFC சிக்கனை விற்பனை செய்ய யாரும் தயாராக இல்லை.
இந்த முதல் வெற்றி பெறுவதற்கு முன்பு அவர் 1009 முறை நிராகரிப்புகளையே சந்தித்தார். 1009 முறை விடாமுயற்சிக்கு பிறகு ஒரு உணவகத்திடம் KFC சிக்கன் உரிமையை விற்றார்.
கேணல் சாண்டர்ஸின் KFC சிக்கன் உரிமையை முதன் முதலில் விற்றபோது அவருக்கு வயது 65.
1964 இல், அதாவது செண்டர்ஸின் 74 வயதில் KFC நெட்வெர்க்கை விற்பனைசெய்ய முடிவு செய்தார். விற்பனை ஒப்பந்தத்தில் அவருக்கு நிறுவனத்தால் ஆயுள் ஓய்வூதியம் செலுத்தப்பட வேண்டும் என்றும் நிறுவனத்தின் பிராண்ட் மற்றும் தர கட்டுப்பாட்டாளராக அவரே தொடர்ந்திருப்பார் என்ற நிபந்தனைகளின் அடிப்படையில் ,அவர் நிறுவனத்தை இரண்டு மில்லியன் டொலர்களுக்கு விற்றார்.
பின் 1971 இல் உரிமையாளர்கள் நிறுவனத்தை விற்றனர்.
KFC சிக்கன் சுவையில் மக்கள் மயங்கியதால் உணவகத்தின் எண்ணிக்கை அதிகமானது.
1956 ல் 105 டாலர்கள் ஓய்வூதியமாக பெற்று அதிலிருந்து விலகினார். 9 வருடங்களுக்குள் 600 உணவகத்தை KFC தொடங்கியது.
1965 யில் Brown என்பவருக்கு $2 மில்லியன் டாலர் தொகைக்கு KFC நிறுவனத்தை கேணல் சாண்டர்ஸ் விற்றார்.
Kentucky Fried Chicken (KFC) 123 நாடுகளில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உணவகத்தை கொண்டுள்ளது. McDonald’s பிறகு விற்பனை அளவில் உலகின் இரண்டாவது பெரிய சங்கிலி உணவகம் இது ஆகும்.
நாம் ரசித்து உண்ணும் KFC இன் இரகசிய ரெசிபி”(Story of KFC)
1940 ஆம் ஆண்டு கோடையில் பதினொரு மூலிகைப் பொருட்கள் அடங்கிய “இரகசிய ரெசிபி” மற்றும் மசாலாக்களை முடிவு செய்தார். அமெரிக்கா 1941 டிசம்பரில் இரண்டாம் உலகப்போரில் நுழைந்தப்போது, சாண்டர்ஸ் வடக்கு கரோலினாவில் நடத்தி வந்த ஹோட்டலை மூடும் நிலை ஏற்பட்டது .
அவர் தனது காதலி (அவரது இரண்டாவது மனைவியாக பின்னர் மாறுபவர்), கிளாடியா லேடிங்டன்-ப்ரைஸை, கென்டக்கி ஹோட்டலின் உரிமையாளராக மாற்றினார்.
அவர் டெண்ணஸியில், உணவு விடுதிகளை நிர்வகித்து, அரசியல் வேட்பாளராக போட்டியிட்டு, மேலும் ஜனாதிபதி ரூஸ்வெல்ட்டின் நிர்வாகத்திற்கு தன்னார்வளராகவும் விளங்கினார்.
தனது “இரகசிய ரெசிபி”யை உலகமும் முழுவதும் கொண்டு சேர்த்தார் :
கென்டக்கி ஃபிரைடு சிக்கன்
இது ஹர்மனின் உணவகத்தின் விற்பனை மூன்று மடங்காக அதிகரித்தது. மேலும் உணவக உரிமையாளர்களை ஈர்க்கவும் ஆரம்பித்தது. கென்டக்கி ஃபிரைடு சிக்கன் என்ற வார்த்தையை ஹர்மன் பணியமர்த்திய ஒரு ஓவியர் உருவாக்கினார்,
அதே நேரத்தில் ஹர்மன் பக்கெட் பேக்கேஜிங் என்ற கருத்துடன் வந்துKentucky Fried Chicken (KFC) என்ற பெயரையும் “It’s finger lickin’ good” என்ற வரியை பயன்படுத்தவும் வலியுறுத்தினார்.வணிகம் வளர்ந்தது.
விற்கப்பட்ட ஒவ்வொரு கோழி துண்டுக்கும் சாண்டர்ஸ்க்கு நான்கு சென்ட்டுகள் வழங்கப்பட்டது, கென்டக்கி உணவகத்திலும் அவரது வணிகம் வளர்ந்து கொண்டிருந்தது.
துரதிருஷ்டவசமாக, மாநிலங்களுக்கு இடையே ஆன நெடுஞ்சாலை அமைப்பு, I-75 காரணமாக, சாண்டர்ஸ் தனது கென்டக்கி வணிகத்தை விற்பதற்கான கட்டாயம் ஏற்பட்டது .
65 வயதில் சாண்டர்ஸின் தொழில் வாழ்க்கை முடிவடைந்தது என்று நினைத்த போது KFC இன் வணிக உரிமம் தொடங்கியது.
சாண்டர்ஸ் வணிக உரிமையை தனது தொழிலாக மாற்றி அவரது வறுத்த கோழி உரிமத்தை விரிவுப் படுத்த நீண்ட தூரம் பயணம் செய்ய முடிவெடுத்தார்.
சாண்டர்ஸ் உணவின் தரம் குறையாமல் இருக்க மேற்பார்வை இடுவதோடு , அவரது உணவின் உரிமம் விற்று அதன் மூலம் ஆதாயம் பெற்றார் (ராயல்டி). சாண்டெர்ஸ்,
தனது 73 வயதில் சாண்டர்ஸ்
600 க்கும் அதிகமான இடங்களுக்கு கேஎப்சீயை விரிவடைய செய்திருந்தார், அதனை அவரால் கட்டுப்படுத்த இயலவில்லை.
1964 வாக்கில் சாண்டர்ஸின் ரெசிபியை விற்கும் உரிமையாளர்களின் எண்ணிக்கையை 600 ஆக உயர்த்த முடிந்தது.
1964 ஆம் ஆண்டில், ஜான் ஒ. பிரவுன், ஜூனியர் மற்றும் ஜாக் சி. மாஸி ஆகியோரால் தலைமை தாங்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு குழுவிற்கு 2 மில்லியன் டாலருக்கு (இன்று $ 15 மில்லியன் மதிப்புள்ள) நிறுவனத்தை விற்றுவிட்டார்.
1964-ல் கேஎஃப்சியை விற்று அதன் தலைமை நிறுவனம் மீது வழக்கு கேஎஃப்சி யை விற்க சாண்டர்ஸ் முடிவெடுத்ததற்கு அதன் வளர்ச்சியே காரணம்.
கனடா, இங்கிலாந்து, ஜமைக்கா மற்றும் மெக்ஸிகோவிலிருந்த உணவகங்களுக்கு பிறகு, கேஎப்சி ஆசியாவில் விரிவுபடுத்தப்பட்டது.
1970 -ல், கேஎப்சீ யின் மார்கெட்டிங் மற்றும் சாண்டர்ஸ்சின் “கர்னல் சாண்டர்ஸ்” என்ற அடைமொழி காரணமாக கேஎப்சீ உலகளவில் 3000 உணவகங்களாகவும் 48 நாடுகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது .
சாண்டர்ஸ் கேஎஃப்சி பிராண்ட் தூதராக ஆன பின்பு, பல தொலைக்காட்சி விளம்பரங்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அவர் எப்போதுமே உரிமையாளர்களால் விற்கப்பட்ட கோழியின் தரத்தை பராமரிப்பதில் கவனம் செலுத்தினார்.
வாழ்வின் இறுதிக் காலத்தில்
தனது 89 வயதில் கூட, அவர் கேஎப்சீ (KFC) உணவகங்கள் எதற்கேனும் திடீர் வருகை தந்து , தயாராகும் உணவை மேற்பார்வை இடுவார்,
அங்கு தயாரிக்கப்படும் உணவு முறை பல தடவை ,அவருக்கு மகிழ்ச்சி தரவில்லை.
அசல் ரெசிபியில் செய்த கோழியை விற்பனை செய்வதற்காக உணவகம் திறக்க சாண்டர்ஸ்க்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இதனால்,அவர் 122 மில்லியன் டாலர் பெற தலைமை நிறுவனமான ஹீயூப்லின் இன்க், மீது வழக்கு தொடர்ந்தார்.
இறுதியில் $ 1 மில்லியனுக்கு வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
1980 ஆம் ஆண்டு சாண்டர்ஸ் தனது 90 வயதில், கடுமையான லுகேமியா நோயால் இறந்தார்.
அவரது இறப்பு நேரத்தில், உலகம் முழுவதும் 6000 கேஎப்சீ உணவகங்களும், ஆண்டுதோறும் $ 2 பில்லியன் மதிப்பிற்கு விற்பனையும் இருந்தன.
அதற்குள், அவர் உருவாக்கிய KFC உணவக சங்கிலி 48 நாடுகளில் 6,000 உணவகங்களாக வளர்ந்தது.
இவரது வாழ்க்கை அனுபவத்தின் மூலம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்
கர்னல் சாண்டர்ஸின் வாழ்க்கை நம் வாழ்க்கையில் தோல்விகள் மற்றும் துணிச்சல் ஆகியவற்றின் பங்கு பற்றி சுட்டிக்காட்டுகிறது. சாண்டர்ஸ் ஒவ்வொரு தோல்வியையும் வாய்ப்பாக கருதினார்.
ஒரு தயாரிப்பு அதன் விளம்பர யுக்தியை பொருத்து வளர்வதும் வீழ்வதும் அமையும் என்பதை உணர்த்துகிறது.
கேஎஃப்சி பொறுத்தமட்டில் பிரான்ச்சைசிங் மற்றும் கர்னல் என்ற தன்னியர்ப்பு பட்டம் வர்த்தக வளர்ச்சிக்கு உதவியாக இருந்தது.
மிக முக்கியமாக, சாண்டர்ஸ் நம்முடைய தொழில் வாழ்க்கையில் தரமான பராமரிப்பின் முக்கியத்துவத்தையும், தனிப்பட்ட வாழ்க்கையில் துணிச்சலோடு செயல் படுவதன் முக்கியத்துவத்தையும் நமக்குக் கற்பித்துள்ளார்.
நம்பிக்கை, கனவு, விடாமுயற்சி, அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பு இருந்தால் எந்த வயதிலும் சாதிக்கலாம் என்பதற்கு கேணல் சாண்டர்ஸ் வாழ்க்கை பயணம் ஒரு உதாரணம்.
KFC துரித உணவுகள் பிடிக்குமோ பிடிக்காதோ ஆனால் கேணல் ஹார்லாந்து சாண்டர்ஸ் (Colonel Harland Sanders) வாழ்க்கை பயணம் எல்லோருக்கும் வெற்றிக்கான தூண்டுதலையே கொடுக்கும்.
வேலை இல்லை,எதுவுமே செய்ய முடியவில்லை என்று அங்கலாய்த்து கொண்டு இருப்பதை விட, எதையாவது அயராது முயற்சி செய்யுங்கள்.