திருமணத்திற்கு பின் ஏற்படும் மன அழுத்தம்(Stress after marriage)

திருமணத்திற்கு பிறகு ஆண், பெண் இரு பாலரும் மன அழுத்தத்திற்கு (Stress after marriage)ஆளாகிறார்கள். அதிலும் பெண்கள் தான் அதிக பாதிப்பை எதிர்கொள்கிறார்கள்.

திருமணத்திற்கு பிறகு பெண்ணின் மன மற்றும் உணர்ச்சி ரீதியில் மாற்றங்களை சந்திக்க நேரிடும். இந்தியா போன்ற நாடுகளில் புதுப்பெண் தன் மாமியாரின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப பழக முயற்சிப்பது கடினமானதாக இருக்கும்.

புதிய குடும்பத்தில் தன்னை இணைத்துக் கொள்வதும், புதிய குடும்பத்தின் ஒரு அங்கமாக தன்னை நிலை நிறுத்திக்கொள்வதும் எளிதான காரியமல்ல.

மாமியார் தன் மீது வைத்திருக்கும் எதிர்பார்ப்புகளையும், தான் நிறைவேற்ற வேண்டிய பொறுப்புகளையும் அறிந்து அதற்கேற்ப செயல்பட வேண்டியிருக்கும்.

கணவரின் விருப்பு, வெறுப்புகளை புரிந்து கொண்டு நடக்க வேண்டியதும் இருக்கும். ‘‘திருமணமான உடனேயே, புதிய வீட்டில் குடியேறுவதும், புதிய குடும்ப உறுப்பினர்களுடன் இணைவதும் எளிதானது அல்ல.

மேலும் இந்தியா போன்றநாடுகளில் கணவனும் அவனது குடும்பமும் தான் ஒரு பெண்ணின் மீது அதிக கட்டுப்பாட்டை திணிக்கின்றன.

இதுநாள் வரை சுதந்திரமாக இருந்துவிட்டு மாமியார்களின் கண்காணிப்பு கீழ் வாழ்வதும், புதிய குடும்பத்தை சார்ந்திருப்பதும் ஒரு பெண்ணை மனச்சோர்வுக்கு இட்டு செல்லும். 

திருமணத்திற்கு பிந்தைய மனச்சோர்வுக்கான காரணங்கள்? (Causes of depression after marriage)

Ways to avoid stress after marriage,annaiamadi.com,திருமணத்திற்கு பின் ஏற்படும் மன அழுத்தத்தை தவிர்க்கும் வழிகள்,திருமணத்திற்கு பின் ஏற்படும் மன அழுத்தம்,Marriage Husband Wife Family Depression ,திருமண மன அழுத்தம் குடும்பம் ,திருமணத்திற்கு பிந்தைய மனச்சோர்வுக்கான காரணங்கள்?,மனச்சோர்வால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன?,What are the causes of depression after marriage? What are the effects of depression?

திருமணத்திற்குப் பிறகு மனச்சோர்வு (Stress after marriage)ஏற்படுவது பொதுவானது அல்ல.திருமணத்திற்கு பிறகு ஒருசில தியாகங்களை செய்வதற்கு சில பெண்கள் தயாராக இருப்பதில்லை.

புதிய வாழ்க்கைக்கு தயாராகுவதற்கு முன்பு நீண்ட காலமாக நேசித்து வரும் சுதந்திரமான வாழ்க்கையை கைவிடுவது அவர்களுக்கு கடினமானதாக இருக்கும்.

அப்படிப்பட்ட சூழலில் திரு மணத்திற்கு பிந்தைய மனச்சோர்வு புதுமண தம்பதிகள் இருவரிடத்திலும் வெளிப்படும். இருவரும் அன்றாட செயல்பாடுகளில் ஆர்வமின்றி இருக்கலாம். பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் மன நல பிரச்சினைகளுக்கு ஆளாகலாம்.

வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை சமநிலைப்படுத்துவது கடினமாக இருக்கலாம். ஆண்கள் வருமானம் ஈட்டித்தரும் நபராகவும், பெண்கள் வீட்டு வேலை செய்பவர்களாகவும் பார்க்கப்படும் சூழலில் நிதி சார்ந்த பிரச்சினையையும் சந்திக்க நேரிடும்.

அத்தகைய அழுத்தம் மன ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தும்.

மனச்சோர்வால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன?(Effects of stress after marriage)

புதிய கூட்டுக்குடும்பத்தை அனுசரித்து செல்ல வேண்டிய பொறுப்பு புதுமணப் பெண்களுக்கு இருக்கிறது. அதனை எப்படி கையாளப் போகிறோம் என்பதை நினைத்து பதற்றத்திற்கு ஆளாகும்

போது மனநலப் பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். பணிபுரியும் பெண்களுக்கு வீடு, வேலை ஆகிய இரட்டை பொறுப்புகளை நிர்வகிப்பது கடினமாக இருக்கும்.

ஆண்களை பொறுத்தவரை நிரந்தர வேலை இல்லாத நிலை கடும் மன உளைச்சலுக்கு ஆளாக்கும். அதிலும் திருமணத்திற்கு பிறகு வேலையை இழந்தவர்கள் கடும் மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும். அதனை சமாளிக்க, பலர் போதை பழக்கம், மது பழக்கத்தை நாடுகிறார்கள்.

அது குடும்ப உறவுக்குள் கடும் விரிசலை ஏற்படுத்திவிடும். திருமணத்திற்கு பிறகு புதிய பொறுப்புகள் மற்றும் சவால்களை உணர்ந்து செயல்படும் போது மனச்சோர்வின் அறிகுறிகளை அனுபவிக்கலாம். ஒருவித மன நெருக்கடியை உணரலாம்.

அத்தகைய அழுத்தம் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பாதிப்பதை உணர்ந்தால், தூக்கக் கோளாறுகள், பசியின்மை, ஆர்வமின்மை போன்ற பிரச்சினைகளை அனுபவிக்க நேரிடும்.

அந்த சமயத்தில் மன நல நிபுணரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியமானது. அது உடல் ஆரோக்கியத்திற்கும், உறவுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.Ways to avoid stress after marriage,annaiamadi.com,திருமணத்திற்கு பின் ஏற்படும் மன அழுத்தத்தை தவிர்க்கும் வழிகள்,திருமணத்திற்கு பின் ஏற்படும் மன அழுத்தம்,Marriage Husband Wife Family Depression ,திருமண மன அழுத்தம் குடும்பம் ,திருமணத்திற்கு பிந்தைய மனச்சோர்வுக்கான காரணங்கள்?,மனச்சோர்வால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன?,What are the causes of depression after marriage? What are the effects of depression?

கையாள முடியாத அளவுக்கு மன அழுத்தம் அதிகமாக இருப்பதாக உணர்ந்தால், அதிலிருந்து மீளும் வரை மருத்துவரின் ஆலோசனையை பின்பற்றி நடக்க வேண்டும்.

திருமணத்திற்கு பின் ஏற்படும் மன அழுத்தத்தை தவிர்க்கும் வழிகள்(Ways to avoid stress after marriage)

திருமணம் என்பது ஆண் பெண் இருவரின் பூரண சம்மதத்துடன் நடை பெற வேண்டும்.

மற்றவர்களின்,பெற்றவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப விருப்பமின்றி திருமண பந்தத்தில் இணையும் போது மன அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *