கரும்புச்சாறு பொங்கல் (Sugarcane Pongal)
இந்த பொங்கல் பண்டிகைக்கு சற்று வித்தியாசமாக சர்க்கரைப் பொங்கலுக்கு (Sugarcane Pongal) பதிலாக கரும்புசாறு பொங்கல் செய்து சூரியனுக்கு படைத்து உண்போம். சுவையும் வித்தியாசமாக அருமையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
- கரும்புச்சாறு – 500 மில்லி
- சவ்வரிசி – 150 கிராம்
- பால் – 200 மில்லி
- முந்திரி – 20
- உலர்திராட்சை – 20
- பாதாம் – 20
- ஏலக்காய் – 4 (பொடிக்கவும்)
- நெய் – 75 மில்லி
- பயத்தம்பருப்பு – 50 கிராம்
கரும்புச்சாறு பொங்கல் செய்முறை (Sugarcane Pongal)
கடாயில் 2 டீஸ்பூன் நெய்விட்டு, சவ்வரிசியை வறுத்து எடுத்துக்கொள்ளவும். பின்னர் அதே கடாயில் பயத்தம்பருப்பைப் பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.
வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய்விட்டு உடைத்த முந்திரி, உலர்திராட்சை, உடைத்த பாதாம் ஆகியவற்றை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
குக்கரில் பால், கரும்புச்சாறு சேர்த்துக் கொதிக்கவிடவும். நன்கு கொதித்ததும் வறுத்து வைத்துள்ள பயத்தம்பருப்பு, சவ்வரிசியை சேர்த்து நன்கு கிளறி குறைந்த தீயில் வைத்து மூடவும்.
ஏழு நிமிடங்கள் கழித்து வறுத்த முந்திரி, பாதாம், திராட்சை, பொடித்த ஏலக்காய் எல்லாவற்றையும் நன்கு கலந்து, மீதமுள்ள நெய்யை விட்டு மூடி, வெயிட் போட்டு, ஐந்து நிமிடங்கள் `சிம்’மில் வைத்து இறக்கினால், சுவையான கரும்புச்சாறு பொங்கல் (Sugarcane Pongal) தயார்.
வெல்லம் சேர்த்து செய்யும் பொங்கலை விட கரும்புச்சாறு பொங்கலின்(Sugarcane Pongal) சுவை கூடுதலாக இருப்பதுடன், நீரிழிவாளர்களுக்கும் உகந்தது.
கரும்புச்சாறு தொற்று நோய்களை குணப்படுத்த உதவுவதோடு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. மேலும் இதில் உள்ள மருத்துவ பலன்களை அறிந்து கொள்ளலாம்.
இனிப்பு சுவையில் கரும்பை மிஞ்ச வேறு எந்த ஒரு பொருளாலும் முடியாது. இது தொற்று நோய்களை குணப்படுத்த உதவுவதோடு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.
இரும்பு, மக்னீசியம், கல்சியம் மற்றும் பிற சத்துக்கள் நிறைந்திருக்கும், எனவே இது நீரிழப்புக்கு நல்லது. இது பொதுவான சளி மற்றும் பல தொற்று நோய்களை குணப்படுத்த உதவுகிறது.
மிகவும் தாகமாக இருந்தால் கரும்பு சாறு அருந்தும் போது அது உங்களுக்கு புத்துயிர் அளித்து உங்கள் மன நிலையை புதுப்பிக்கிறது.
சிறுநீரகங்களின் செயல்பாட்டை உறுதி செய்வதற்கு உதவுகிறது. ஒரு நாளைக்கு இரண்டு முறை எலுமிச்சை மற்றும் தேங்காய்த் தண்ணீரில் கலந்த கரும்பு சாறு எடுத்துக் கொண்டால் உடலில் தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை நீக்கி, உடலை தூய்மைப் படுத்துகிறது. இதனால் உடல் எடை படிப்படியாக குறைய வழி பிறக்கிறது.
செரிமான பிரச்சினை நீங்க, மன அழுத்தம் இல்லாத வாழ்க்கைக்கு கரும்பு சாறு பருகுவது நல்லது. கரும்பு சாற்றில் உள்ள பொட்டாசியம் செரிமான சாறுகள் சுரக்கவும் உதவுகிறது. வாய் துர்நாற்றம் மற்றும் பல் சிதைவு போன்றவற்றை சரி செய்கிறது.
கரும்பு, கல்சியம் மற்றும் பொஸ்பரஸ் போன்ற கனிமங்களை கொண்டிருக்கிறது. இது பற்சிதைவை தடுத்து பற்கள் வலுவடைய உதவுகிறது. மேலும் உடலில் உள்ள நீர்ச்சத்து குறையாமல் பாதுகாக்கிறது.