பெண்களின் உடல்வாகுக்கு ஏற்ப ஆடைத்தெரிவு (Suitable clothing for women)

பருமனான அல்லது மெலிந்த உடல்  தோற்றத்தை கொண்ட பெண்கள் எந்த வகை வகையான ஆடை அணிந்தால் (Suitable clothing for women) அழகாக இருக்கும் என்பதை பற்றி  அறிந்து கொள்வோம்.

மனிதர்களின் அழகையும், கம்பீரத்தையும் அதிகரித்துக் காட்டுபவை ஆடைகள். நாம் அணியும் ஆடைகள் தரமானதாக இருந்தால் மட்டுமே அது உடலுக்கும் தீங்கு விளைவிக்காது, நமக்கும் அழகை தரும். என்ன மாதிரி­யான உடைகள் நமக்கு ஏற்றது என்று தெரியாமலேயே ஒரு சிலர் ஆடை அணிவார்கள்.

ஆள் பாதி ஆடை பாதி என்பார்கள்

பெண்கள் அணியும் ஆடைகள் அவர்களுக்கு அழகாக இருக்க வேண்டும் என்பதில் மிகுந்த கவனம் கொள்வாரகள். ஆனால் பெண்களில் ஒருபகுதியினர் தங்கள் உடைகளில் திருப்தியடைவதில்லை. 

அதற்கு காரணம் அவர்களது உடல் அமைப்பு. ஒல்லியாகவோ அல்லது குண்டாகவோ இருக்கும் பெண்கள் தங்கள் உடல் அமைப்புக்கு ஏற்ற உடையை (Suitable clothing for women) கண்டு பிடிப்பதற்கு பெரும் சிரமப்படுகிறார்கள்.

எந்த ஒரு ஆடை அணிந்த உடன் அது நமக்கு ஏற்றதாக இருக்கிறதா?இது பிட் ஆகிறதா? என்று கண்ணாடியின் முன் நின்று உங்களுக்கு நீங்களே சுய விமர்­சனம் செய்துகொள்ளுங்கள்.

suitable clothinfg for women,annaimadi.com,suitable clothing for obess women,choice of dress,selection of dress, 

சரி­யான உள்ளாடைகள் அணிவது தன்­னம்­பிக்­கையை அதிகரிக்கும். அள­வான நகைகள் அதேபோல் அணியும் ஆடை­களுக்கு ஏற்ற நகைகள் அணிய­­வேண்டும்.

ஹேர்­பேண்ட், காதணி, காலணி போன்­றவை மேட்சாக இருந்தால் கூடு­தல் அழகுதான். அதற்கேற்ப பொருட்­களை நாம் தெரிவு செய்ய­வேண்டும்.

வயதிற்கு ஏற்ற உடையை அணிய உடலின் வடிவத்தை அறிந்து வைத்திருக்க வேண்டியது இன்றியமையாததாகும். முழு தோற்றத்தையும் தெரிய வைக்கும் கண்ணாடி முன் நின்று பிரத்யேக அறையில் அனைத்து ஆடைகளையும் அணிந்து பார்ப்பது நல்லது.

அதிகமாக இறுக்கத்துடன் அல்லது உடலை வெளிப்படுத்தும் உடைகளை கழித்து விடவும்.

தனிச்சிறப்பு வாய்ந்த ஆடைகளை பயன்படுத்தவும். நன்கு தைக்கப்பட்ட பல்வேறு ஸ்டைல்களில் உள்ள சல்வார் கம்மீஸ் அல்லது ப்ளவுசுடன் கூடிய சேலை  பழக்கத்தில் பின்பற்றப்பட்டு வருகிறது.

சில பெண்களின் ஒட்டுமொத்த உடல்வாகு ஒல்லியாகத் தோன்றும். ஆனால் கால்கள் மற்றும் சற்று தடித்த நிலையில் அமைந்திருக்கும்.

அப்படிப்பட்டவர்கள் லெகின்ஸ் அணிய விரும்பலாம். அவர்கள் அடர்ந்த நிறத்திலான லெகின்ஸை தேர்ந்தெடுக்கவேண்டும்.

சற்று குண்டான கால்களை இது ஓரளவு ஒல்லியாக காட்டும். இவர்கள் பொதுவாகவே உடலை இறுக்கிப்பிடிக்கும் உடைகளை தவிர்ப்பது நல்லது. சற்று கெட்டியான மெட்டீரியலில் தயார் செய்யப்பட்ட லெகின்ஸ்களை அவர்கள் தேர்ந்தெடுத்து அணியவேண்டும்.

காபி பிரவுன், அடர் பச்சை, கறுப்பு, நேவி ப்ளூ, பர்பிள்.. போன்ற நிறங்கள் அவர்களுக்கு பொருத்தமானது. இளம் நிறத்திலான குர்தியை இதற்கு மேலாடையாக அணியலாம்.

 புடவையில், செதுக்கிய சிற்பம் போன்ற உடல் அமைப்புடன் தோன்ற எல்லா பெண்களும் விரும்புகிறார்கள். அவர்களது ஆசை நிறைவேற வாய்ப்பிருக்கிறது.

பொருத்தமான ஆடையை எவ்வாறு தெரிவு செய்யலாம் (Suitable clothing for women)

மெல்லிய உடல் தோற்றம் கொண்ட வர்கள் ஜூட் சில்க், டஸ்ஸர், ஸ்டிப் காட்டன், ஆர்கண்டி போன்ற மெட்டீரியல் புடவைகளை உடுத்தலாம். சில்க் புடவைகளை பிளட் செய்யாமல் ஒன் லேயராக உடுத்தலாம்.

ஒல்லியாக, உயரமாக தோன்றுகிறவர்கள் சற்று கெட்டியான புடவையை பயன்படுத்தலாம். இவர்களுக்கு இளம் நிறங்கள், போல்ட் பிரிண்டுகள், அகலமான பார்டர் கொண்ட புடவைகள் பொருத்தமாக இருக்கும்.

குள்ளமான, தடிமனான உடல்வாகு கொண்டவர்களுக்கு சாப்ட் சில்க், மட்கா, மால்குடி மெட்டீரியல்கள் ஏற்றது. அவர்கள் சரும நிறத்துக்கு ஏற்ற அடர்நிறங்களை தேர்ந்தெடுக்கவேண்டும்

. இதனை நன்றாக பிளட் செய்து உடுத்தினால், உடலுக்கு பொருத்தமாகவும், சற்று உயரம் கூடுத லாகவும் தெரியும்.

பெரிய பதவிகளில் இருப்பவர்களின் உடை அலங்காரம், மேக்-அப் போன்ற அனைத்துமே யதார்த்தமாக, மிதமானதாக அமைந்திருக்க வேண்டும்.

உடைகளை பொருத்தவரையில் புடவையும், குர்த்தியும் ‘செமி பார்மல் லுக்’ கொடுக்கும். மெஜந்தா, லெமன், மஞ்சள் போன்ற பளிச் நிறங்களை தவிர்க்கவேண்டும்.

suitable clothinfg for women,annaimadi.com,suitable clothing for obess women,choice of dress,selection of dress,

 

உயரமாக, தன்னம்பிக்கையோடு தலைநிமிர்ந்து நிற்பவர் களுக்கு ‘லாங்க் ஸ்கர்ட்ஸ்’ பொருத்தமாக இருக்கும். கால் பாதம் வரை மறைக்கும் ‘போஹோ ஸ்கர்ட்’ அதிக அழகுதரும்.

சிங்கிள் கலர் ஸ்கர்ட் வித் பிராட் பார்டர் வகை இப்போது இளம் பெண்களால் அதிகம் விரும்பி அணியப்படுகிறது.

அடுக்கடுக்காக தோன்றும் ‘டயர்ஸ் ஸ்கர்ட்டும்’ நன்றாக இருக்கும். இத்தகைய ஸ்கர்ட்டுகள் அணியும்போது சிங்கிள் கலர் டாப் அணிவது பொருத்தமானது. ஸ்லீவ் லெஸ் டாப்பும் அழகுதரும்.

இந்த ஸ்கர்ட், டாப் அணியும்போது சில்வர் அல்லது பழங்குடியின மக்கள் அணிவது போன்ற ஆபரணம் அணிவது மெருகேற்றும்.

ஆடை உடுத்துவது அழகோடு தொடர்புடையது மட்டுமல்ல உடல் நலத்திற்கும் ஏற்றது. காலத்திற்கு ஏற்ற ஆடைகள் உடுத்துவது மனதையும் மகிழ்ச்சிப்­படுத்­தும். கோடை­யில் உடலை இறுக்காத பருத்தி ஆடைகள் அணிவது உடலையும் உள்­ளத்தையும் உற்சாகப்படுத்தும்.

சூரிய ஒளியை உள்வாங்கும் கறுப்பு, சிவப்பு வண்ண ஆடைகளை இக்காலங்களில் தவிர்க்க வேண்டும். ஆடைகளின் வண்ணங்கள் மென்மை கலந்ததாக இருப்பது நல்லது.

எந்த ஒரு ஆடையாக இருந்தாலும் அணிந்த உடன் அது ஏற்ற இருக்கிறதா என்று சரி பார்த்துவிட்டு புறப்படுங்கள்.

ஆடைகள் என்பது நம் மதிப்போடு தொடர்­புடையது. ஏனோ தானோ என்று உடுத்துவதை விட நமக்கு ஏற்ற உடைகளை தேர்ந்தெடுத்து அணிவதே அழகையும், மதிப்பையும் அதிகரிக்கும்.

வயது,பருவகாலம்,நாகரீகம்,வருமானம்,சிறப்பு நிகழ்ச்சி  போன்ற காரணிகள் தீர்மானிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published.