எளிய ஆசனம் சுகாசனம் (Simple asana sukhasana)

இடுப்பு, முதுகுத்தண்டை வலிமையாக்கும் சுகாசனம்

உட்கார்ந்து செய்யும் ஆசனங்களில் சுகாசனம் சுலபமானது.எளிமையானது. கீழே சம்மணம் போட்டு உட்காருவது யோகாசனத்தில் சுகாசனம் (Sukhasana) என அழைக்கப்படுகிறது.இப்போது இந்த ஆசனம் எப்படி செய்யும் முறையை பார்ப்போம்.

சுகாசனம் (Sukhasana) செய்யும் முறை

கீழே ஒரு விரிப்பை (Yoga mat) விரித்துக்கொள்ள வேண்டும். நேராக அமர்ந்து வலது காலின் குதியை இடது தொடையின் மேல் இருக்கும்படி செய்யவேண்டும். இடது காலின் குதிகால் வலது தொடையின் அடியில் செருக வேண்டும். இரண்டு கைகளையும் இரண்டு முழங்கால்களில் வைக்க வேண்டும்.

Simple yoga Sukhasana,annaimadi.com,easy,knee ,back pain

சுவாசம் இயல்பாய் போய்க்கொண்டிருக்க வேண்டும். முதுகுத்தண்டு, கழுத்து, தலை மூன்றும் ஒரே நேர்கோட்டில் இருக்க வேண்டும். கண் பார்வை மூக்கு நுனியை பார்க்க வேண்டும்.

உடம்பை மிகவும் விறைப்பாக வைக்க வேண்டாம்.

சோர்வாக உணர்ந்தால் ,கால்களை மாற்றி திரும்பவும்  அமர்ந்து கொள்ளலாம்.

பூஜை, தியானம், உணவு உண்ணும் போது  இந்த ஆசனத்தை செய்யலாம்.

ஐந்து நிமிடத்திலிருந்து மூன்று மணிநேரம் வரை அமர்ந்து இருக்கலாம்.

ஜபம் செய்யும்போது மூன்று மணிநேரம் வரை காலை மாற்றாமல் சோர்வின்றி அமர முடிந்தால் இந்த ஆசனம் சித்தியாகிவிட்டது என்று யோகிகள் கூறுவார்கள்.

இந்த ஆசனத்தை அவ்வளவு நீண்ட நேரம் செய்யத் தேவையில்லை. வசதிக்கு ஏற்றவாறு காலை மாற்றி மாற்றி செய்யலாம். ஆனால் முதுகுப்பகுதி நேராக இருப்பது அவசியம்.

நாம் சுகமாக அமர்ந்துள்ளோம் என்று மனதில் உணர வேண்டும்.

காலைத் தொடையில் போட முடியாதவர்கள், இவ்வாறு உட்கார்ந்தும் செய்யலாம்.

Simple yoga Sukhasana,annaimadi.com,easy,knee ,back pain

இந்த ஆசனத்தால் தேகம், மனம், பிராணன், புலன்கள் ஆகியவை அதிகம் சோர்வடையாது.

உடலின் கீழ் பகுதி, இடுப்பு நரம்புகளும் உறுதிப்பட்டு பலப்படுகின்றன.முதுகுத்தண்டு உறுதி அடைகின்றது. தியானத்தால் மனம் ஒரு நிலைப்படும்.

இப்படி இருந்து பின் எழுந்தால் முதுகெங்கும் நல்ல ஆயுர்வேத மசாஜ் செய்தது போன்ற  இனிய உணர்வு ஏற்படும்.

நடுத்தர வயதினரில் பலருக்கு கால்களை மடக்கி தரையில் இருப்பது, இருந்திட்டு எழும்புவது என்பது ரொம்ப தற்போது சிரமமான விடயம். இதனாலேயே பலர் யோகாசனங்கள் செய்வதைத் தவிர்த்து வருகின்றனர்.

அப்படியானவர்கள் இந்த  வீடியோவை பதிவைப் பாருங்கள்.உங்களாலும் யோகாசனம் செய்யமுடியும்.பலன் பெற்று நலமாக வாழ முடியும்.

நாளடைவில் உங்களாலும் கால்களை மடக்கி அமர முடியும்.இலகுவானது தான்.

முயன்று பாருங்கள்.

அதனால் இதுநாள்வரை கீழே உட்கார்ந்தது இல்லை எனில் இனி உட்கார்ந்து பழங்குங்கள். அப்படி உட்கார்கையில் முட்டி அந்தரத்தில் தொங்குவது போல உயரமாக இருந்தால் அவ்வபோது கையை வைத்து கீழே அமுக்கி விடுங்கள்.

சுகாசனம் செய்வோம். சுகமாக வாழ்வோம்!

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *