சுண்டைக்காய் பொரித்த குழம்பு (sundaikai kulampu)

சுண்டைக்காய் (Sundaikai) கைப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டது. இதனால் வயிற்று பூச்சிகள் அழிக்கும் தன்மை கொண்டுள்ளது. அதோடு குடலும் வயிறும் சுத்தமாகும்.

ஒரு நாளில் மூன்று வேளையும் சாப்பிடுவதற்கு முன்பாக வயிற்றில் பசி உணர்வு ஏற்படுவதே உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு சிறந்த அறிகுறியாகும்.

சிலருக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்பட்ட காலத்தில் பசி உணர்வு குறைந்து விடும்.இவர்கள் சுண்டைக்காய்களை சமைத்து சாப்பிட்டு வர பசி உணர்வு அதிகமாகி உடல் ஆரோக்கியம் மேம்படும்.

நுண்ணுயிரிகள் நிறைந்த உணவுகளை சிலர், அதிலும் குறிப்பாக குழந்தைகள் சாப்பிடுவதால் அவர்களின் வயிற்றில் பூச்சி தொல்லை ஏற்படுகிறது.

Sundaikai

சுண்டைக்காய் (Sundaikai) சற்று உஷ்ண தன்மை கொண்ட ஒரு காய் வகையாகும்.இதனை

ஜலதோஷம் அல்லது சளி பாதிப்புகள் ஏற்பட்டவர்கள் பிஞ்சு சுண்டைக்காயைச் சமைத்து சாப்பிட்டு வந்தால் தொண்டை, நெஞ்சில் ஏற்படும் சளிக்கட்டு குறையும்.

தினமும் நாம் சாப்பிடுவது, குடிப்பது, அருந்துவது என அனைத்து பொருள்களிலும் மாசு நிறைந்துள்ளன.

இந்த மாசு அல்லது நச்சுகள் அனைத்தும் நமது ரத்தத்தில் சேர்ந்து கொண்டு எதிர்காலத்தில் நமது உடல்நலத்திற்கு பல பாதிப்புகளை ஏற்படுத்தும்.

சுண்டக்காய் குழம்பு (Sundaikai) , வதக்கல் ஆகியவற்றை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் இருக்கும் நச்சுகள் நீங்கி இரத்தம் சுத்தம் பெறும்.உடற்சோர்வு நீங்கும்.

இதனை பச்சையாக பறித்து தொக்கு செய்தோ, கூட்டு செய்தோ சாப்பிடலாம்.

Sundaikai plant
  • சுண்டைக்காய் சிறியதாக இருந்தாலும் இதில் அதிக மருத்துவகுணம் உள்ளது.
    ஆஸ்துமா, வறட்டு இருமல், மார்புசளி, காசநோய் தொந்தரவு இருப்பவர்கள், தினம் இருபது சுண்டைவற்றலை சிறிது  நல்லெண்ணெயில் வறுத்து சாப்பிடவேண்டும். நோய் கட்டுப்படும்.
  • மூலத்தில் ஏற்படும் கடுப்பு, மூலச்சூடு மற்றும் வயிற்று கோளாறுகளுக்கும் சிறந்த மருந்தாகின்றது. 
  • மூல நோய் உள்ளவர்கள் ஒரு கைபிடி அளவு சுண்டைக்காயை நெய்யில் வதக்கி சாப்பிட்டால், மூலத்தில் உள்ள கடுப்பு நீங்கும். மூல நோயால் உண்டாகும் ரத்தக் கசிவும் நீங்கிவிடும்.
  • புளித்த ஏப்பம், உடல் சோர்வு, மூட்டுவலி போன்றவைகளுக்கு சுண்டைக்காய் சிறந்த மருந்து. உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ளவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published.