சூர்ய நமஸ்காரம் (Surya namaskar)

நம் முன்னோர்கள் நமக்கு தந்த ஒரு அற்புத பயிற்சி தான் இந்த சூர்யநமஸ்காரம் (Surya namaskar) .

நாம் இயற்கையை விட்டு விலகி இருக்கும் இந்த நவீன காலத்தில், சூரிய நமஸ்காரம் நமது உடல்,மனம் போன்றவற்றினை நன்கு செலுமைப்படுத்த உதவுகிறது. சூரிய நமஸ்காரம் என்பது சூரியனை வணங்குதல் என்று பொருள்.

சூரிய நமஸ்காரம் (Surya namaskar) சுவாசம், உடல் மற்றும் மனம் ஆகிய மூன்றையும் ஒருங்கிணைத்து செய்யும் பயிற்சிமுறை.

சில காரணங்களால் உடல் பயிற்சியோ அல்லது யோகாவோ செய்ய முடியாதவர்கள், சூர்ய நமஸ்காரம் செய்வதன் மூலம் சிறந்த பலனை பெறலாம். 

சூர்ய நமஸ்காரத்தில் உள்ள ஆசனங்கள் உடலில் உள்ள பெரும்பாலான உறுப்புகளின் சீரான செயல்பாட்டுக்கு உதவுகிறது.

சூரிய நமஸ்காரம் (Surya namaskar) செய்யும் முறை

சூர்ய நமஸ்காரம் பன்னிரென்டு ஆசனங்கள்(நிலைகள்) ஒருங்கிணைந்த ஆசனமுறை ஆகும்.

சூரிய நமஸ்காரம் (Surya namaskar) எவ்வளவு நேரம் செய்யலாம்? எப்பொழுது செய்யவேண்டும்?

சூரிய நமஸ்காரம் என்பது  பண்டைய காலம் முதலே, சூரியனை வழிபடுதல் முறைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. ஆசனம், பிராணயாமம், மந்திரம் மற்றும் சக்கர தியானம் ஆகியவற்றை ஒன்றிணைத்து பல்வேறு விதங்களில் உடல் பயிற்சிகளின் எல்லைகளைக் கொண்ட ஒரு முழுமையான உடற்பயிற்சியாக சூர்ய நமஸ்காரம் உள்ளது. 

மேலே குறிப்பிட்ட பனிரெண்டு நிலைகள் செய்த பின்னர் சாதாரன நிலைக்கு வர வேண்டும்.

ஆண், பெண், சிறுவர், சிறுமியர்  என அனைவரும் தனியாகவோ  அல்லது கூட்டாகவோ இதனைச் செய்யலாம்.

உடம்பு முழுமைக்கும் பயிற்சி அளிக்கும்  சூரிய நமஸ்காரம் செய்வதற்கு, ஒரு நாளில் மூன்று முதல் பத்து நிமிடங்களே போதும். கின்றது.

சூரிய நமஸ்காரத்தைப் பழகப் பழக இன்பம் அதிகரிக்கும். முதலில் சுலபமான ஆரம்ப நிலைகளைப் பழக வேண்டும்.ஆரம்பத்தில் பூர்ண வெற்றியை எதிர்பார்க்கக் கூடாது.

ஆரம்பத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை செய்யலாம்.பின் உங்களால் இயன்ற முறை செய்யலாம்.ஆனால் அதிக வலியுடன் அல்லது மிகவும் சிரமப்பட்டு செய்வது மிகவும் தவறு.

கர்ப்பிணிகள் 3 மாதங்கள் வரை செய்யலாம். பிறகு நிறுத்தி விட வேண்டும்.

குழந்தை பிறந்த பின் தக்க ஆலோசனையுடன் சிறிது சிறிதாகப் பயிற்சியை அதிகரிக்க வேண்டும்.

காலை நேரம் சிறந்தது.முடியாதவர்கள் மாலையிலும் செய்யலாம்.

சாப்பிட்ட பின் குறைந்தது இரண்டு மணி நேரமாவது கழித்து தான் செய்ய வேண்டும்.

அலுவலக வேலையால் களைத்துப் போனவர்களுக்குக் கூட பத்து பன்னிரெண்டு நமஸ்காரங்கள் டானிக் போல உயிரூட்டும்.

தனி அறையில் அமைதியில் செய்வது புத்துணர்வை வளர்க்கும்.

எச்சரிக்கை:

மிகவும் நிதானமாக, மெதுவாக, பொறுமையுடன் யோகாசனங்களை செய்ய வேண்டும்.

முதுகுப் புறத்தில் பிரச்சினை , இடுப்பு எலும்புப் பிரச்சினை இருப்பவர்களும் இந்த ஆசனத்தை செய்ய வேண்டாம். சூரிய நமஸ்காரம் செய்வதற்கு முன்பு தெளிவான அறிவுரையைப் பெற வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *