சுவாமியை தரிசிக்கும் முறை (How to do Swami Darshan)

முதலில் கோபுரத்தை அண்ணார்ந்து பார்த்து வணங்க வேண்டும்.(Swami Darshan). கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பார்கள். கோபுரத்தினை ஆண்கள் தலைக்குமேல் இரு கைகளையும் குவித்தும், பெண்கள் மார்புக்கு நேரே கைகளை குவித்தும் வணங்கவேண்டும்.

வேண்டுதல்களை கொடி மரத்தின் அருகே நின்று கேட்க வேண்டும். கொடி மரம் இல்லாத கோவில்களில் பிள்ளையாரை துதித்து விட்டு பிரகாரத்துக்குள் நுழையவேண்டும். 

கோயிலில் சுவாமி தரிசனம் (Swami Darshan) செய்யும் போது கடைப்பிடிக்கவேண்டிய விதிமுறைகள்

ஆண்டவனின் சன்னிதானத்தினுள் நுழையும் போது கோயிலின் வாசலிலேயே நம் காலணியுடன் ‘நான்’ என்னும் அகந்தையையும் கழற்றி விட வேண்டும்.

அமைதியுடன் மனதை ஒருநிலைப்படுத்த வேண்டும்.

கோயிலினுள் நுழையும் போது தான் தானதர்மங்களைச் செய்ய வேண்டும் – திரும்பி வரும் போது செய்யக் கூடாது .

கோயிலை வலம் வரும் முன்பு நமஸ்காரம் செய்ய வேண்டும்.

கோயிலில் தரப்படும் பிரசாதத்தை வலது கையினால் வாங்கி அப்படியே கை மாற்றாமல் வலது கையால் உண்ண வேண்டும்.

மனதை ஒரு நிலைப்படுத்தி தியானம் செய்தபடியே கோயிலை வலம் வர வேண்டும். வேறு சிந்தனைகள் கூடாது.
நியாயமான வேண்டுதல்களை ஆண்டவன் முன் வைக்க வேண்டும். நல்ல மனதுடன் ‘அவனை’ தியானம் செய்தால் நிச்சயம் அவன் தேடி வந்து நம்முள் குடிபுகுவான். நல்ல மனம் தானே நாளும் ‘அவன்’ தங்கியிருக்கும் கோயில்!

நாம் கோயிலுக்கு சென்றால் பொதுவாக சுவாமியை மூன்று முறை வலம் வந்து வணங்குவதை வாடிக்கையாக வைத்துள்ளோம். ஆனால் எந்த சுவாமியை எத்தனை முறை வலம் வந்து வணங்குதல் வேண்டும் என்பதை தெரிந்து கொண்டு அதன்படி வணங்கி இறைவனின் அருளைப் பெறுவோம்.

நாம் சுவாமியை தரிசித்து வலம் வரும் போது தெய்வசிந்தனையும், சுவாமியின் போற்றியை சொல்லிக் கொண்டே சுற்றுதல் வேண்டும்.
பிள்ளையாரை ஒரு முறை வலம் வந்து வணங்குதல் வேண்டும்.
சிவன் பெருமானை மூன்று முறை வலமாக சுற்றி வந்து வணங்க வேண்டும்
அம்பாள் ஐந்து முறை வலமாக சுற்றி வந்து வணங்கவேண்டும்.
பெருமாள் ஐந்து முறை வலமாக சுற்றி வந்து வணங்க வேண்டும்.
நவகிரகத்தை ஒன்பது முறை சுற்ற வேண்டும்.

  

கோயிலில் சுவாமி தரிசனம் (Swami Darshan) செய்யும் போது தவிர்க்கவேண்டியவை

கோயில் உள்ளே அமர்ந்து தேவையில்லாமல் விவாதம் செய்வது, மார்பிலோ, தலையிலோ அடித்துக் கொள்வது போன்றவைகள் கூடாது.

கோயிலினுள் பிற மனிதர்களை வணங்குவதும் – வாழ்த்துவதும் கூடாது. தவறு செய்தவர்களைத் தண்டிப்பதும் கூடாது.

பேசுவதை அதிலும் அபசகுனமாகப் பேசுவதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

தலையை விரித்துப் போட்டுக் கொண்டு கோயிலினுள் செல்லக்கூடாது. ஆண்களாக இருந்தால் தலைப்பாகையைத் தவிர்க்க வேண்டும்.

நெற்றியில் பொட்டு ஏதும் இடாமல் செல்வதோ, வெறுங்கையுடன் செல்வதோ கூடாது.

சன்னதியில் நின்று ஒருபோதும் கண்ணீர் விடுவதோ அழுவதோ கூடாத ஒன்று. ஆண்டவன் முன்பு நின்று அழுதுதான் கேட்க வேண்டுமென்பது தவறான கருத்து.

கர்ப்பகிரகத்தில் சுவாமி அலங்காரத்துக்காகத் திரை போட்டிருக்கும் நேரத்தில் சுவாமி தரிசனம் செய்யக்கூடாது.ஆலய ஆகம விதிப்படி கர்ப்ப கிரகத்தில் உள்ள மூலவருக்கும், எதிரில் உள்ள நந்திக்கும் இடையில் விழுந்து வணங்குவதோ, குறுக்கே செல்வதோ கூடாது. 

அரசமர வழிபாடு ஏன்

அரசமரத்தை ஏழு முறை சுற்றி வந்து வணங்குதல் வேண்டும். அதுவும் காலை 9 மணிக்கு மேல் அரச மரத்தை சுற்றக் கூடாது என முன்னோர்கள் ஒவ்வொரு தெய்வத்தையும் வலம் வந்து வணங்கும் முறையை வகுத்து வைத்தனர்.

காலை 9 மணிக்கு மேல் அரச மரத்தை சுற்றக் கூடாது. அப்படி சுற்றினால் நமக்கு இருக்கும் ஞாபக சக்தி குறையுமாம்.
அதனால் காலை 9 மணிக்கு மேல் பிள்ளையார் கோயிலில் அரசமரம் இருக்கும். நாம் பிள்ளையாரை மட்டும் வணங்கி வந்து விடுவதே போதுமானது. அரசமரத்தைச் சுற்ற வேண்டாம்.

அரசமரத்தை காலையில் சுற்றி வருவது தான் உன்னதமானது. ஏனெனில் அரசமரத்திலிருந்து செரிட்டோன் என்ற வாயு வெளி வரும். அதை நாம் சுவாசித்தால் நம் ஞாபக சக்தி அதிகரிக்கும். அதே போல் பெண்களுக்கு கர்ப்பப்பை வலுசேர்க்கும் வாயுவும் அரசமரம் வெளியிடுவதாக கூறப்படுகிறது.

அம்மன் கோவிலில் பலி பீடத்தில் சிறிது உப்பு, மிளகைக் கொட்டி பிராத்தனை செய்தால் நோய்கள் தீரும் என்பது ஐதீகம். பலி பீடத்தை குறைந்தது மூன்று முறை அல்லது ஐந்து முறை நமஸ்காரம் செய்ய வேண்டும்.
 
தெய்வ வாகனங்களில் மூக்கில் இருந்து வரும் காற்று மூலவருக்கும் போய் உயிர்நிலை தருவதாக ஐதீகம். தெய்வ வாகனங்களின் வாலை பக்தியிடன் தொட்டு கண்களில் ஒற்றிக் கொள்ள வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *