குழந்தைகளிடம் தினமும் பேச வேண்டியவை (Talk with your children daily)

உங்கள் குழந்தைகளுடன் தினமும் பேசுங்கள் (Talk with your children daily).வளர்ந்த பிள்ளைகளைக்
காட்டிலும் சிறு குழந்தைகளின் நாளாந்த நடவடிக்கைகளில் பெற்றோருக்கென மிகப் பெரிய பொறுப்பு உண்டு.

குழந்தைகள் எவ்வளவு சண்டையிட்டாலும், அடம் பிடித்தாலும் எல்லாவற்றையும் உடனே மறந்து விட்டு,சின்னசின்ன பிரச்சனைகளையும் சந்தோஷங்களையும் தமது பெற்றோரிடமும்,குடும்பத்தினரிடமுமே  பகிர்ந்து கொள்கிறார்கள்.

முக்கியமாக பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் நம்பிக்கையை வளர்க்கும் வகையில் தொடர்பு கொள்ள வேண்டும்.கற்றுக்கொடுக்க வேண்டும். அவர்கள் உங்களைப் பார்த்து கற்றுக் கொள்ளும் விதமாக உங்கள் நாளாந்த நடவடிக்கைகள் அமைய வேண்டும்.

ஏனெனில் சுற்றுசூழலில் இருந்தே குழந்தைகள் அதிகம் கற்றுக்கொள்கிறார்கள். குழந்தைகளுடனான சிறிய  தொடர்பு பேச்சு பழக்கம், அவர்களுக்கு அளவற்ற மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் கொடுக்கும்.

தினமும் சிறிதுநேர உரையாடல்

தினமும் குழந்தைகளுக்கான நேரம் கட்டாயம் உங்கள் நாளில் இருக்க வேண்டும்.

உதாரணத்திற்கு அவர்களது அன்றைய நாள் எப்படி கழிந்தது பற்றி  ஒவ்வொரு நாளும் கதையுங்கள் (Talk with your children daily).நீங்கள் கேட்கும் இந்த சிறிய கேள்வி அவர்களுக்கு  பெறுமதி வாய்ந்தது.உங்களுக்கு குழந்தகளிடம் உள்ள அக்கறையை அது காட்டும். 

அன்றைய நாளில் நடந்த சில முக்கிய சம்பவங்களை அம்மா அப்பாவுடன் பகிர்வதன், பேசுவதன் மூலம் பெற்றோர்களும் குழந்தைகளும் நெருக்கத்தை  வளர்த்துக் கொள்ளலாம்.

Talk with your children daily,annaimadi.com,healthy family,happy children,fiber daily,multivitaminCheck Price

 

சில முக்கியமான தவல்கள் கூட கிடைக்கும். இந்த பழக்கத்தைப் பழக்கி வர ,கொஞ்ச நாட்களில் தாமாகவே ஒவ்வொருநாளும் சொல்லத் தொடங்கி விடுவார்கள். இது எதையும்  தாய்தந்தையரிடம் சொல்லலாம் என்ற நம்பிக்கையைக் கொடுப்பதோடு, எதையும்  மறைக்கும்  பழக்கம் உருவாகாது.ஏனென்றால், பள்ளி நண்பர்களுக்கு இடையில் நடந்த சின்ன சின்ன சண்டைகள் ,உடலில் ஏதாவது அடிபட்டிருக்கலாம், அவர்களை சுற்றியுள்ள பிரச்சனைகள் அல்லது  பெரியவர்களின் தவறான நடத்தை என்பன தெரிய வரும்.

எனவே உங்கள் குழந்தைகளின் நாள் பற்றி தினமும் அவர்களிடம் கேட்டு அறிந்துகொள்வது (Talk with your children daily) மிக அவசியம்.

மன்னிப்பு கேட்கும் பழக்கம்

பெரியவர்கள் ஏதாவது  தவறு செய்தால்  அடுத்தவரிடமோ அல்லது உங்கள் குழந்தைகளிடமோ  கட்டாயம் மன்னிப்புக் கேட்க வேண்டும். அப்போது தான் அந்த பழக்கத்தை குழந்தைகளும் வளரும் காலத்திலிருந்தே கற்றுக் கொள்வார்கள்.

தாய் தந்தையாக நீங்கள் மன்னிப்பு கேட்கிறீர்கள் என்பதை குழந்தை உணரும்படி  நடந்து  கொள்ளுங்கள்.

ஒரு சிறு விடயத்துக்கும் பாராட்ட வேண்டும்

குழந்தைகள் என்ன செய்தாலும் அதனை தவறாக பார்க்காது, அதிலுள்ள நல்ல விடயத்தைக் கண்டு பிடித்து பாராட்ட வேண்டும். 

ஒரு விளையாட்டு வீடு அவர்களால் கட்டப்பட்டால், அது பொருட்களை வீணடிக்கும் வேலை என்ற மனப்பான்மையைத்  தவிர்க்க வேண்டும்.

சில பெற்றோர் தமது அன்றாட வேலைப்பளு, மன அழுத்தத்தை வெறுப்பாக குழந்தைகளிடம் வெளிக்காட்டுவார்கள். ஆனால் அது குழந்தையின் வாழ்க்கையில்  எவ்வளவு மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது பற்றி சிந்தித்துப் பாருங்கள்.

ஏதாவது ஒரு ஆக்கத்தையோ வரைந்த படத்தையோ கொண்டுவந்து காண்பிக்கும்போது அதைப் பற்றி வெகுவாக பாராட்டும் பழக்கத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். மற்றைய பிள்ளைகளின் ஆக்கத்துடன் ஒப்பிட்டு குறைவாக பேசுவது அறவே செய்யக் கூடாது.

பெரியவர்களுக்கு மரியாதை கொடுத்து பேசுவது, விலங்குகளின் மீது அன்பும் காட்டுவது, மற்றவர்களுக்கு உதவுவது போன்ற எல்லவாற்றையும் குழந்தை உங்களிடம் இருந்தே கற்றுக் கொள்கிறது என்பதை ஞாபகத்தில் இருத்தி செயற்படுங்கள்.

அவர்கள் குழந்தை தானே, என்ன பெரிதாக விளங்கப் போகுதென்று பெரிது படுத்தாமல் விட்டுவிட வேண்டாம்.

நாம் செய்வது தான் வரும்காலத்தில் நமக்கு கிடைக்கும்.

பிழைவிட்டால் அதிகம் பாராட்டுங்கள்

எந்த விடயத்தையும் சரியாக செய்து முடிக்கும் போது பாராட்டுவதை விட ,அவர்கள் முயற்சி செய்து தோல்வியடையும் சந்தர்ப்பத்தில்  அதிகமாக பாராட்டவது, அவசியம். அது அடுத்த முறை அவர்களிச் சரியாக செய்ய தூண்டும்.

இல்லையெனில் அவர்கள் ஒருபோதும் தோல்வியடைந்த விடயத்தில் முயற்சிக்க மாட்டார்கள். சில நேரம் ,ஒரு போட்டியில் தோல்வியுறும் போது, அவர்கள் மனதில் பயம் உண்டாகலாம்.

அச்சந்தர்ப்பத்தில் பெற்றோர்கள் இதனை வெற்றி தோல்வி என்பது வாழ்வில் சகஜமான ஒன்று  என்பதை  புரிய வைத்து, அரவணைக்க வேண்டும்.

Talk with your children daily,annaimadi.com,healthy family,happy children,good habbits for kids

இதன் மூலம் தோல்வியைத் தாங்கக்கூடிய ஒரு மனப்பாங்கை அவர்களிடம் உருவாக்க முடியும்.

அதேபோல தோல்விகளை அறிந்து கொள்ள, என்ன  தவறு நடந்தன என்பது பற்றி சிந்திக்க கற்றுக் கொடுப்பதும், மீண்டும் அவற்றை சரியாக முயற்சிக்க அவர்களை ஊக்குவிப்பதும் அவசியம்.

தவறுகளை விளங்கப்படுத்துங்கள்

உரிய இடங்களில் தவறுகளை சுட்டிக்காட்டுங்கள். உதாரணமாக, வீட்டுப்பொருட்களை இழுத்துப்போட்டு, விளையாடும் நேரங்களில், பக்குவமாக அதனை எடுத்துச்சொல்லவேண்டும். விளையாட்டு பொருட்களை விளையாடி முடிந்தவுடன் அவற்றை எடுத்து வைக்கவும்பழக்கவேண்டும்.

மகிழ்விக்கும் சொற் பிரயோகம் அடிக்கடி பயன்படுத்தவும்

ஒரு வேலையை செய்து தர “தயவு செய்து ” (please) என்கிற வார்த்தையை உபயோகிக்கவும், அந்த வேலையை செய்து முடித்ததும்  அதற்கு “நன்றி”சொல்லி பழகுங்கள்.

சிறு வயதிலிருந்தே, மற்றவர்களின் மனதை மகிழ்விக்கும் வகையில் விடயங்களை எப்படிச் சொல்வது, கேட்பது என்பதை உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் கட்டாயம் கற்பிக்க வேண்டும்.

அது சொல்லால் மட்டுமன்றி செயலாலும், பெற்றோர்கள் குழந்தைகளின் பார்வைக்கு நடந்து கொள்ளவேண்டும். அதாவது பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும்.

அன்பு, பாசத்தை  வெளிப்படையாககாட்டுங்கள் 

Talk with your children daily,annaimadi.com,healthy family,happy children,good habbits for kids  

சிறு குழந்தைகளுக்கு அன்பு, பாசம் என்பது ஒரு அற்புதமான விடயம்.

குறிப்பாக உங்களை மிகவும் நேசிக்கும் மற்றும் உங்களுக்கு மிக நெருக்கமான தந்தை மற்றும் தாயின் அன்பு மிகவும் அவசியம். உண்மையான பாசம் கிடைக்காதவர்களே  சமூகத்தில் தீயவர்களாக்கப்படுகிறார்கள்.

எனவே ஒவ்வொரு நாளும், முடிந்த போதெல்லாம் உங்கள் குழந்தைகளை நீங்கள் எவ்வளவு நேசிக்கிறீர்கள் என்று அவர்களிடம் சொல்லுங்கள். நன்றாக வெளிப்படையாக உணர வையுங்கள்.

அதனால் தங்கள் அன்பை வெளிக்காட்டுவது மட்டுமல்லாமல் சிறுவயது முதல் அவர்களுக்கு வாய்மொழி மூலமாகவும் சொல்லுங்கள்.

இன்றைய ஆரோக்கியமான  நற் குழந்தைகள் தான் ,நாளைய சமுதாயம்.

எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் …….

Leave a Reply

Your email address will not be published.