பிரம்மாவிற்கும் கோவில்கள் உண்டு தெரியுமா (Temples for Brahma)

கோவில் இல்லாக் கடவுளாக சாபம் பெற்றவர் பிரம்மா.ஆனாலும் ஒரு சில இடங்களில் பிரம்மாவுக்கு சிவன்கோவில்களில் சிறிய அளவில் சன்னிதிகள் (Temples for Brahma) உண்டு.

படைப்புக்கடவுள் பிரம்மா உயிரினங்களை படைக்கும்போதே அவரவர் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப தலை எழுத்தை எழுதி அனுப்புகிறார் எனப் புராணங்கள் கூறுகின்றன. சிவனின் அடி முடி காணும் போட்டியில் இவர் பொய் சொன்னதால், இவரது தலையெழுத்தை சிவன் தீர்மானித்தார்.இதனால் கோவில் இல்லாத கடவுளாக இருப்பதாக ஒரு புராணக் கதை உண்டு.

குறிப்பாக, தென்னகத்தில் இவருக்கென சில சிறிய அளவிலான கோவில்கள் இருக்கின்றன. இதோடு கூடவே   பிரம்மாவிற்கு என பெரிய அளவிலான  ஒரு கோவிலும் உள்ளது.

இக்கோயிலின் சிறப்பு என்னெவென்றால் ,சுமார் 2000 ஆண்டுகளைக் கடந்தும் இன்றும் கம்பீரமாய் நிற்பதே.

இந்தியாவில் உள்ள மூன்று பிரம்மா கோவில்களில் (Temples for Brahma) இதுவும் ஒன்றாகும். மற்ற இரண்டும் தமிழ்நாட்டில் ஸ்ரீரங்கம் அருகிலுள்ள உத்தமர்கோவில் மற்றும் பிரம்மபுரீஸ்வரர் கோவில் ஆகும்.

பிரம்மபுரீஸ்வரர் கோவில் ஸ்ரீரங்கத்திலிருந்து 26 கிலோமீட்டரிலும், உத்தமர்கோவில் ஸ்ரீரங்கத்திலிருந்து 4 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. அங்குப் பிரம்மா,விஷ்ணு ,சிவன் ஆகியவர்களை தனித்தனியே வணங்கும் பழக்கம் உள்ளது.

annaimadi.com,temple for Brahmaa,Pushkar turist place,pushkar temple,Indian famous temple,hindu temple

வடஇந்திய மாநிலங்களில் சுற்றுலாத் தலங்கள் ஏராளமாக உள்ளன. இதில், வரலாற்று சிறப்புமிக்க கோட்டைகளையும், கோவில்களையும் கொண்ட மாநிலம் என்றால் அது ராஜஸ்தான் தான். ராஜஸ்தானின் சுற்றுலாத் தலங்களிலேயே பிரசித்தி பெற்றிருப்பது புஷகர் நகரம். இங்கே தான் பிரம்மாவிற்கான பழம்பெரும் கோவில் (Temples for Brahma) உள்ளது.

ராஜஸ்தானின் அஜ்மேர் நகருக்கு அருகே உள்ள ஊர் தான் புஷ்கர். புஷ்கர கோவிலின் மூலவரே பிரம்மா தான். இந்தப் புஷ்கர் நகரில் ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதத்தில் பெரியளவிலான திருவிழா கொண்டாடப்படுகிறது.

இந்தப் புஷ்கர் நகரில் பிரம்மாண்டமான ஓர் ஏரியும் உண்டு. இது சர்வ தீர்த்தங்களுக்கும் ராஜாவான புஷ்கரர் என பக்தர்களால் போற்றப்படுகிறது.annaimadi.com,temple for Brahmaa,Pushkar turist place,pushkar temple,Indian famous temple,hindu temple

புஷ்கர் ஏரி பிரம்மா, யாகம் செய்வதற்காக இடம் தேடி , ஓரிடத்தில் சிந்தனையில் மூழ்கியிருந்தார்.

அப்போது அவருடைய கையில் இருந்த மலர் தரையில் விழுந்து ஏற்பட்ட அழுத்தத்தால் மூன்று இடங்களில் நீரூற்று பீறிட்டது.

அவற்றில் தோன்றியவை  தான் புஷ்கர் ஏரி, மத்திய புஷ்கர் ஏரி, கனிஷ்ட புஷ்கர் ஏரி என்ற மூன்று தீர்த்தங்கள் ஆகும்.

அவற்றில் ஒன்று தான் பிரம்மா வேள்வி செய்த புஷ்கர்.புனிதமாகக் கருதப்படும் புஷகர் ஏரியில் 52 படித்துறைகள் உள்ளன. இங்கு பக்தர்கள் எந்த நேரமும் புனித நீராடுவார்கள்.

புஷ்கர் தல அமைப்பு (Temples for Brahma)

புஷ்கர் பகுதியில் உள்ள பிரம்மாவின் கோயிலின் வடக்கே நீலகிரி, தெற்கே ரத்னகிரி, கிழக்கே சூர்யகிரி, மேற்கே சோன்சூர் என மலைகள் அரணாக அமைந்துள்ளது.

புஷ்கரில் அமைந்துள்ள பிரம்மா கோவில் சிறப்பு நிறத்தில், கோபுர‌ங்களுடன் காட்சியளிக்கிறது.

நுழைவுவாயிலில் நான்முகனின் வாகனமான அன்னம் அழகுடன் காட்சியளிக்கிறது. மூலவர் கருவறையில் பிரம்மா, காயத்ரி தேவியுடன் அருள்பாலிக்கிறார். பிரம்மா ஆலயத்தின் பின்புறம் உள்ள மலையின் மீது சரஸ்வதிக்கான கோவில் உள்ளது.annaimadi.com,temple for Brahmaa,Pushkar turist place,pushkar temple,Indian famous temple,hindu temple

பிரம்மாவின் முதல் மனைவி சரஸ்வதி தேவிக்கு என பிரம்ம கோவிலின் பின்புறம் உள்ள மலையில் ஒரு கோவில் உள்ளது.

இக்கோவிலுக்கு பக்தர்கள் எளிதாக ஏறிச் செல்லும் வகையில் படிகள் அமைக்கப்பட்டுள்ளன. கோவிலில் இருந்து ஏரியையும், சுற்றியுள்ள பாலைவனப் பரப்பையும் காண்பது ரம்மியமான, மனதைக் கொள்ளை கொள்ளும் அழகாகும்.

புஷ்கர் ஏரிக்கரையில் ஆமெர் மன்னர் முதலாவது ராஜா மான்சிங் கட்டிய பிரம்மாண்டமான மாளிகை தான் இந்த மான்மகால்.

முன்னொரு காலத்தில் சுற்றுலாத் தலமாக இருந்த இக்கட்டிடம் தற்போது தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு பயணிகள் தங்கும் இடமாக பராமரிக்கப்பட்டு வருகிறது.

annaimadi.com,temple for Brahmaa,Pushkar turist place,pushkar temple,Indian famous temple,hindu temple  திருவிழா புஷ்கர் பிரம்மா கோவிலில் கார்த்திகை தீபவிழா பிரசிதிபெற்றது. புஷ்கர் கார்த்திக் பூர்ணிமா மேளா என்னும் இந்த விழாவைக் காண நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருவது வழக்கம்.

திருவிழாக் காலத்தில் ராஜஸ்தானின் அடையாளங்களில் ஒன்றான ஒட்டகச் சந்தை மிகப் பெரிய அளவில் நடைபெறும். வெளிநாட்டினர் கூட இதில் ஆர்வத்துடன் பங்கேற்பர்.

Leave a Reply

Your email address will not be published.