ஏழைகளின் ஆப்பிள் (The apple of the poor)

கொய்யாப்பழத்தினை “ஏழைகளின் ஆப்பிள்” (The apple of the poor) என்று சொல்வார்கள்.

நோய் ஏற்படுவதற்குக் காரணம், பாக்டீரியா, பூஞ்சைகள் போன்ற நோய்கிருமிகள் மட்டுமல்ல. நமது உடலில் நோயினை எதிர்த்துப் போராடும் திறனும் குறைவாக இருப்பதும் ஆகும்.

இவ்வாறு நோய் எதிர்ப்புத் திறனை அதிகப்படுத்த உணவில் அதிக அளவில் பழங்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு சேர்க்கப்படும் பழங்களில் முக்கியமான ஒன்று கொய்யாப்பழம்.பழங்களில் மிகவும் முக்கியமான ஒன்று கொய்யா. கொய்யாப்பழத்தில் எண்ணற்ற நன்மைகள் உள்ளன. 

 

benefits og guava,koyyaapalaam,medicinal benefits of guava,fruit for diabetes,annaimadi.com

கொய்யாவின் வியக்க வைக்கும் பல  மருத்துவ‌ பயன்கள்

நீரிழிவு நோய்க்கு மருந்து

கொய்யாவானது உடலில் சர்க்கரையின் அளவு திடீரென உயர்வதைத் தடுக்கிறது.மேலும் அதிக அளவில் நார்ச்சத்தினை உள்ளடக்கி உள்ளதால் சர்க்கரையின் அளவு நன்கு ஒழுங்குபடுத்தப்படுகிறது. எனவே நீரிழிவு நோயினால் பதிக்கப்பட்டவர்களுக்குக் கொய்யாப் பழம் சிறந்த பழமாக இருக்கும்.

கொய்யாப் பழச்சாறு இரத்த சர்க்கரையின் ஏற்ற இறக்கத்தினை அதிக அளவிலிருந்து குறைந்த அளவிற்கு குறைக்க உதவுகிறது.

இதயத்தை ஆரோக்கியமாக்குகிறது

benefits og guava,koyyaapalaam,medicinal benefits of guava,fruit for diabetes,annaimadi.com

கொய்யாப்பழம் சோடியம் மற்றும் பொட்டாசியத்தின் அளவினை மேம்படுத்துகிறது. இதன்மூலம் உயர் இரத்த அழுத்தம் கொண்ட நோயாளிகளுக்கு இரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படுகிறது. மேலும் இந்த அற்புதமான கொய்யாப்பழம் உடலின் கெட்ட கொழுப்பினைக் குறைத்து ,நல்லகொழுப்பினை அதிகரிக்கச் செய்கின்றது.

மலச்சிக்கலைத் தடுக்கிறது

மற்ற பழங்களுடன் கொய்யாவினை ஒப்பிடும் போது நார்ச்சத்துக்கு ஆதாரமாக விளங்கும் பழங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இவ்வாறு உடலில் சேரும் நார்ச்சத்து உங்கள் செரிமான ஆரோக்கியத்திற்கு மிகுந்த பலனைத் தருகிறது. உண்ணும் போது கொய்யாவின் விதைகள் முழுமையாகவோ அல்லது மென்று உண்டால் ஆரோக்கியமான மலம் வெளியேற்ற இயக்கத்தை உருவாக்க உதவுகிறது.

benefits og guava,koyyaapalaam,healthy young skin,fruit for diabetes,annaimadi.com

கர்ப்ப காலத்தில் உண்ண வேண்டியது

கொய்யாப்பழத்தில் விற்றமின் ‘பி‍ 9’ அல்லது போலிக் அமிலம் நிறைந்துள்ளது. இந்த விற்றமின் ‘பி 9’ மற்றும் போலிக் அமிலம் கர்ப்பிணிப் பெண்களுக்கு மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில் இவை குழந்தையின் நரம்பு மண்டலத்தை வளர்க்க உதவுகிறது.

பல்வலியை எதிர்க்கிறது

கொய்யா மரத்தின் இலைகளில் அழற்சியை எதிர்த்துப் போராடும் சக்தி மற்றும் பாக்டீரியாவிற்கு எதிராகப் போராடும் திறனும் உள்ளது. இவை தொற்று நோய்களுடன் போராடிக் கிருமிகளைக் கொல்கிறது. பல்வலிக்கு  கொய்யா இலையைச் சாப்பிடுவது சிறந்த வீட்டு மருத்துவமாக இருக்கிறது.

இதன் மூலம் கொய்யா இலைகளிலிருந்து எடுக்கப்படும் சாறு பல்வலி, வீங்கிய ஈறுகள் மற்றும் வாய்வழிப் புண்கள் ஆகியவற்றைக் குணப்படுத்துவதாக அறியப்படுகிறது.

மன அழுத்தத்தைக் குறைக்கிறது

கொய்யாப்பழத்தில் நிறைந்துள்ள மெக்னீசியம் உடல் தசைகள் மற்றும் நரம்புகளை ஓய்வடையச் செய்ய உதவுகிறது. எனவே கடினமான உடல் உழைப்பு அல்லது நீண்டநேரம் அலுவலகத்தில் வேலைசெய்த பிறகு நீங்கள் உட்கொள்ளும் ஒரு கொய்யாப்பழம் உங்களுக்குத் தேவையான ஓய்வை தருகிறது.

அதோடு கூட மட்டுமல்லாமல் மன அழுத்தத்தினையும் குறைத்து உங்கள் உடல் மற்றும் மனதிற்கு நல்ல ஆற்றலையும் ஊக்கத்தினையும் கொடுக்கிறது.

benefits og guava,koyyaapalaam,healthy young skin,fruit for diabetes,annaimadi.com,iron content

மூளைக்கு நலம் தருகிறது

கொய்யாப்பழத்தில் விற்றமின் ‘பி 3’ ,விற்றமின் ‘பி 6’ ஐக் கொண்டுள்ளது.மூளையின் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. அறிவாற்றல் செயல்பாட்டினையும் தூண்டுகிறது. மேலும் கொய்யாப்பழம் நரம்புகளுக்கு ஓய்வினை அளிக்கிறது.

இருமல் மற்றும் சளிக்கு மருந்து

மற்ற பழங்களை ஒப்பிடும்போது கொய்யாப் பழத்தில் விற்றமின் ‘சி’ மற்றும் இரும்புச்சத்து அதிக அள்வில் உள்ளது.

பழுத்த அல்லது பழுக்காத கொய்யாவிலிருந்து எடுக்கப்படும் சாறு அல்லது கொய்யா இலைகளின் சாறு ,இவை இரண்டும் சளி மற்றும் இருமலிற்கு மருந்தாக பயன்படுகிறது.

மேலும் கொய்யாவானது சுவாச மண்டலம், தொண்டை மற்றும் நுரையீரலை சுத்தப்படுத்தவும் செய்கிறது.

உடல் அழகை பேணுகிறது

இளமையான  தோற்றத்தினை கொடுக்கிறது

கொய்யாப்பழத்தில் விற்றமின் ‘ஏ’, விற்றமின் ‘சி’ மற்றும் ,ஆண்டிஆக்ஸிடண்ட்,கரோட்டின் (Carotene) மற்றும் லைக்கோபீனே (Lycopene) போன்றவை அடங்கியுள்ளன. இவை வயதான பின் ஏற்படும் சுருக்கங்களிலிருந்து தோலைப் பாதுகாக்க உதவி செய்கிறது.

தினம் ஒரு கொய்யாப்பழம் சாப்பிட்டால், தோல் சுருக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம். கொய்யாவானது சருமத்தின் பொலிவு மற்றும் புத்துணர்ச்சியை மீண்டும் பெறுவதற்கு உதவுகிறது

உடல் எடையைக் குறைக்கிறது

அதற்குச் சரியான வழி கொய்யாப்பழம்  (The apple of the poor) தான். நீங்கள் உட்கொள்ளும், புரதம், வைட்டமின் மற்றும் நார்ச்சத்து போன்றவற்றில் எந்த ஒரு கட்டுபாட்டினையும் கொண்டு வராமல் கொய்யாப்பழம் உங்கள் வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம் மட்டுமே உடல் எடையை இழக்கச் செய்கிறது. இதன் மூலம் நீங்கள் ஒரு சில கிலோ எடையைக் குறைக்க முடியும்.

benefits og guava,koyyaapalaam,healthy young skin,fruit for diabetes,annaimadi.com,iron content

ஆப்பிள், ஆரஞ்சு மற்றும் திராட்சை போன்ற மற்ற பழங்களுடன் கொய்யாப்பழத்தை ஒப்பிடும் போது கொய்யாவில் அதுவும் முழுக் கொய்யாப் பழத்தில் குறைந்த அளவு சர்க்கரையே உள்ளது.

இப்பழத்தில் கொழுப்புகள் எதுவும் இல்லை மேலும் எளிதில் செரிமானமைடையக் கூடிய கார்போ ஹைட்ரேட்டுகள் மிகக் குறைந்த அளவில் உள்ளன.

உங்களுடைய மதிய உணவில் நடுத்தர அளவிலான கொய்யாப் பழத்தைச் சேர்த்துக் கொண்டால் மாலை வரை உங்களுக்குப் பசி உணர்வே ஏற்படாது.

முரண்பாடாக  இப்பழம் மெலிந்து இருப்பவர்களை  உடல் எடை பெறவும் உதவுகிறது. இந்தக் கொய்யாப்பழத்தில் நிறைந்துள்ள ஊட்டச் சத்துக்களின் காரணமாக உடல் எடை பெறலாம்.

மேலும் இப்பழம் வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்தி முறையான ஊட்டச்சத்தினை உடல்மூலம் உறிஞ்சுதலை ஊக்குவிக்கிறது.

வயிற்றுப் போக்கினை நீக்குகிறது

கொய்யா இலைகளை சாப்பிட வயிற்று போக்கு உடனடியாக சரியாகிவிடும்.

benefits og guava,koyyaapalaam,healthy young skin,fruit for diabetes,annaimadi.com,iron content,remedy for diarrhea

தைராய்டு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

கொய்யாக்கள் செப்பு சத்துக்கு (Copper) நல்ல ஆதாரமாக விளங்குகிறது. இதனால் ஹார்மோன் உற்பத்தி மற்றும் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதைக் கட்டுப்படுத்தி வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்துகிறது.

உடலில் உள்ள ஆற்றல் ,கட்டுப்பாடு மற்றும் வளர்சிதை மாற்றத்தில் தைராய்டு ஹார்மோன்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இவ்வகையில் கொய்யாப்பழமானது தைராய்டுநோய்க்கும் நல்ல மருந்தாகிறது.

இரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்துகிறது

இரத்தத்தில் உள்ள கொழுப்பினை கொய்யாப் பழம் குறைக்கிறது. இரத்தம் கடினமாவதைத் தடுத்து இரத்தத்தின் திரவத் தன்மையைப் பாதுகாக்கிறது. இதன் மூலம் இரத்த அழுத்தம் குறைக்கப்படுகிறது.

நார்ச்சத்து உள்ள உணவுகள் இரத்த அழுத்தத்தை குறைக்கின்றது என்று ஆய்வுகள் கூறுகின்றன. கொய்யாவானது மிகுதியான நார்ச்சத்தினையும் குறைவான சர்க்கரையையும் இயற்கையாகவே கொண்டுள்ளது. இதன்மூலம் இரத்த அழுத்தம் குறைக்கப்படுகிறது.

அதோடு ,கொய்யாபழத்தில் விற்றமின் ‘ஏ’ இருப்பதால் ,ஆரோக்கியமான பார்வைத் திறன் கிடைக்கிறது.கொய்யா, புற்றுநோய்க்கான செல்கள் உருவாவதைத் தடுக்கிறது. கொய்யாப்பழம் சாப்பிடுவதனால் மார்பகப் புற்றுநோய் செல்களை அழிக்கப்படுன்றது.

அப்பிள்பழம் தொடர்ந்து சாப்பிட்டால், மருத்துவரிடம் போகத் தேவையில்லை என்ற பழமொழிக்கு ஏற்ப . நம்மூர் கொய்யாபழம் கொண்டுள்ள எண்ணற்ற மருத்துவ குணங்ங்களால் ஏழைகளின் அப்பிள் (The apple of the poor) என அழைக்கப்படுகிறது போல!!

Leave a Reply

Your email address will not be published.