சிதறு தேங்காயில் ஒளிந்திருக்கும் தெய்வீகம் (The divinity hidden in the coconut)

தேங்காய் தன்னுள்ளே நிலம் , நீர் , ஒளி , காற்று, விண் ஆகிய பஞ்ச பூதத் தன்மைகளை கொண்டுள்ளது. இது உடைபடும் இடங்களில் இந்த பஞ்ச பூத சக்திகள் (The divinity hidden in the coconut) குவிக்கப்படுகிறது என்பது சித்தர்கள் விஞ்ஞானத்தில் நிரூபிக்கப் பட்டுள்ளது.

சும்மா இல்லை நம் முன்னோர் எவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறார்கள் . நமது சமயத்தில்  தேங்காய் உடைக்கும் சாஸ்திரம் வைத்தது எதற்காக என்று இப்பதிவு சொல்லும். தொடர்ந்து வாசியுங்கள்.

தேங்காய், சிவனின் மூல சக்தியாக உள்ளது இதிலுள்ள முக் கண்களில் வழியே பஞ்ச பூத சக்திகள் இழுக்கப்பட்டு சேமிக்கப்படுகிறது.

The divinity hidden in the coconut,coconut energy,annaimadi.com

தேங்காயின் உட்புறத்தில் பஞ்சபூத சுழற்சி சுழன்று கொண்டே இருக்கும்.

கோவில் விக்கிரகத்தின் முன் தேங்காய் உடைக்கும் போது அது இறைசக்தியை வெளிக்கொணரும் ஆற்றல் சக்தியாக உள்ளது . இதனால் மூலஸ்தானத்தில் பக்தர்களுக்கு உடனடி இறை ஆற்றல் கிடைக்கிறது.

ஒரே இடத்தில் தேங்காய் சிதறு காய் இடும்போது அங்கே பஞ்சபூத க்தி (The divinity hidden in the coconut) சுழன்று கொண்டே இருக்கும்.

முச்சந்தியில் மாலைநேரத்தில் சிதறுகாய் இடும்போது அங்கே துர்சக்திகள் விலக்கியடிக்கப்படுகிறது .

ராகு கேது தோஷம் உடையோர் ஞாயிற்றுக்கிழமையின் பிற்பகலில் , திங்கள் கிழமையின் முற்பகலில் , முச்சந்தி விநாயகருக்கு வாரம் தோறும் சிதறு காய் இட்டால், காலசர்ப்ப தோஷம் கூட சரியாகி விடும் என்பது நம்பிக்கை.

வீட்டில் தினம் ஒரு தேங்காய் உடைத்து பூஜை செய்தால் ,பிணிகள் நீங்கி லக்ஷ்மி கடாட்சம் பெருகும்.

மாந்திரீகத்தில் சண்ட காளிவேர் , நரபூதாளம் , சூலநாசவேர் , இவற்றுடன் வேண்டாதவரின் காலடி மண் , இந்த நான்கையும் நவமி திதியில் வேங்கை மரத்தின் கீழ் பதித்தால் சம்மந்தப்பட்டவர் நிலை அதோ கதிதான்.

இதனால் பாதிக்கப்பட்ட நபருக்கு மறு நவமீ வரை அந்தியில் தேங்காய் உடைத்து, உடன் நுகரச் செய்தால் குணமாகி விடும் . இது சித்தர்கள் முறையாகும்.

முள்ளம் பன்றி முள் , எட்டிமர வேர் இரண்டையும் வீட்டில் வைத்துவிட்டால் சண்டை சச்சரவு வந்து கொண்டே இருக்கும்.

இதற்கு நல்ல விளைந்த தேங்காயை உடைத்து வாசலில் ஒரு நாள் முழுக்க வைத்து விட்டால் சுபிட்சம் ஏற்படும். மாலையில் அந்த தேங்காயின் உட்புறம் வியர்த்து பிசு பிசு வென்று இருப்பதைக் காணலாம்.

அம்மாவாசையில் பிறந்த குழந்தைகள் கெட்ட பெயரெடுக்கும். அவர்களுக்கு அடிக்கடி தேங்காய் உடைத்து நுகரச் செய்தால் குணம் மாறும்.

குழந்தைகளுக்கு தேங்காய் பால் அடிக்கடி( சாறு ) கொடுத்தால் உடல் பலமாகும். ஞபக சக்திகூடும்.

வீட்டில் திருஷ்டிக்கு நவமி திதியில் பறித்த தேங்காய் மஞ்சள் தடவி முக்கண்ணில் திலகம் இட்டு வீட்டு வாசல் முன் கட்டி விட்டால் எப்பேர்ப்பட்ட திருஷ்ட்டியும் கழிந்து விடும் .

The divinity hidden in the coconut,coconut energy,annaimadi.com,coconut receipes
தேங்காய் முக்கண்ணுடன்

வெளிநாடு செல்ல தடை ஏற்பட்டால் , ரோகினி , ஹஸ்த்தம் , திருவோணம் நட்சத்திர நாளில் விநாயகருக்கு சிதறுகாய் இட்டு வழிபட்டால் காரியம் சித்தியாகும்.
அக்கால ராஜாக்கள் அந்நிய தேச பயணத்திற்கு முன் இந்த நட்சத்திர நாளில் தேங்காய் முக்கண் வழிபாடு செய்தே சென்று வந்தனராம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *