கால்வீக்கம் நீங்க தீர்வுகள் (The swelling feet)
கால்வீக்கம் (The swelling feet) பொதுவாக எல்லா வயதினருக்கும் பற்பல காரணங்களால் ஏற்படுகின்றது.சில வீக்கங்கள உடலில் ஒரு உறுப்பு பாதிப்பின் அல்லது ஒரு நோயின் அறிகுறியாகாவும் இருக்கலாம். சில ஊட்டச்சத்துக்கள் குறைபாட்டாலும் ஏற்படலாம்.
கர்ப்பிணிகள் காலில் வீக்கம் ஏற்பட்டால் தவறாது மருத்துவரை அணுக வேண்டும்.இக்கால கட்டத்தில் குழந்தையின் எடை அதிகரிப்பதால் இந்த வீக்கம் ஏற்படுகின்றது. இது இயல்பானது.
கால்வீக்கம் நீக்கும் எளிய வழிகளை வீடியோவில் பார்க்கலாம்,
கால் வீக்கம் ஏற்பட பொதுவான காரணங்கள்
ஊட்டச்சத்து குறைபாடு இருந்தாலும், கால்களில் வீக்கம் ஏற்படும். குறிப்பாக, புரதச்சத்து குறைபாடு, ரத்தசோகை இருந்தால், குழந்தைகள், பெரியவர்கள் அனைவருக்கும், கால் வீக்கம் வரும்.
கால்களில் அடிபட்ட காயம் அல்லது புண் இருந்தால், அதன் வழியே பாக்டீரியா தொற்று நுழைந்தாலும், வீக்கம் ஏற்படும்.
நிணநீரில் தொற்று ஏற்பட்டாலும், கால்கள் வீங்கும். இதில், கால்களில் கட்டிகள் ஏற்பட்டு, சிவந்து காணப்படும். இவையெல்லாம், வலி இல்லாமல், வீக்கம் மட்டும் இருக்கும்.
எந்த வகையான புற்று நோயாக (cancer) இருந்தாலும், அவை உடம்பில் சில வகையான வேதிப் பொருட்களை உற்பத்தி செய்வதால், வீக்கம் ஏற்படலாம்.
சிலருக்கு, கால்களை தொங்கப் போட்டு உட்கார்ந்தால், வீக்கம் ஏற்படும்.
யானைக்கால் நோய் கால்களில் பெரிய அளவில் வீக்கத்தை உண்டு பண்ணும் ,
உறுப்பு செயலிழப்பால் ஏற்படும் வீக்கதை விட, எதிர்பாராமல் கால்களில் ஏற்படும் வீக்கத்திற்கு, ‘டீப் வெயின் திராம்போசிஸ் (deep vein thrombosis) – டிவிடி’ என்று பெயர். அதிகம் பேரை பாதிக்கும் பிரச்சனை இது.
வெகு நேரம் நிற்க நேர்ந்தால் கூட இந்த வீக்கம் ஏற்படும். பாதமும் கணுக்காலும் கீழ் கால்களில் அதிக நீர் தேக்கம் ஏற்படும் பொழுது ஏற்படுகின்றது.
இதே போல கால்களை வெகு நேரம் தொங்க போட்டவாறு உட்காருபவர்களுக்கும் இதே பாதிப்பு ஏற்படும்.
இதனை தவிர்க்க 30 நிமிடங்களுக்கொருமுறை 5 நிமிடங்கள் நடக்க வேண்டும். அப்பொழுது தான் ரத்த ஓட்டம் சீராய் இருக்கும்.
இறுக்கமாக காலணிகளை அணிவதால் கால்களில் கொப்பளம் ஆகுவதோடு கணுக்காலில் வீக்கம் ஏற்படும்
உணவில் அதிக உப்பு சேர்ப்பவர்களுக்கு உடலில் நீர்தேக்கம் இருக்கும். இது பாதம் கணுக்கால் மட்டுமல்ல, உடல் முழுவதுமே வீக்கத்தினை உண்டாக்கும்.
உடல் எடை கூடும் பொழுது கால், பாதங்களின் மீது அதிக அழுத்தம் ஏற்படுவதால் காலில் வீக்கம் ஏற்படலாம்.
இத்தகையோர் தகுந்த உணவு முறை மூலம் உடல் எடையை குறைக்க வேண்டும்.
முறையான உடல் பயிற்சியினையும் மேற்கொள்ளுதல் அவசியம்.
எலும்பு முறிவு, மூட்டு முறிவு போன்றவை ஏற்பட்டால் வீக்கம் இருக்கவே செய்யும். மருத்துவ சிகிச்சையே இதற்குத் தீர்வு.
பாக்டீரியா, பூஞ்ஞை பாதிப்புகளும் கணுக்கால், பாதத்தில் இருந்தால் வீக்கம் இருக்கும். மருத்துவ சிகிச்சை அவசியம்.
காரில், ரயிலில், விமானத்தில் வெகு நேரம் பயணம் செய்யும் போது கால்கள் வீங்கலாம். இது பின்னர் எழுந்து நடக்கும் பொழுது தானே சரியாகி விடும்.இல்லையெனில் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.
உடம்பில் பல்வேறு பகுதிகளில் திரவம் தேங்குவதால் ஏற்படும் வீக்கத்திற்கு மருத்துவத்தில் ’எடீமா’ என்று பெயர். சில சமயங்களில் வீக்கம் தன்னால் மறைந்து விடும். அப்படி மறையாமல் நெடுநாட்கள் வீக்கம் நீடித்தால் மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.
எடீமா பொதுவாக கால்கள் அல்லது பாதங்களை பாதிக்கும்.
கால்களில் வீக்கம் (The swelling feet) குறைய செய்ய வேண்டியவை
திரவம் தேங்குவதால் வீக்கம் ஏற்படுகிறது இதற்கு தண்ணீர் குடித்தால் வீக்கம் குறையும். நாளொன்றுக்கு 8-10 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும்.
காயம் காரணமாக கணுக்கால் மற்றும் பாதத்தில் ஏற்படும் வீக்கத்திற்கு ஐஸ் பேக் வைக்கலாம் அல்லது கம்ப்ரெஷன் பேண்டேஜ் அணிந்துகொள்ளலாம். குளிர்ந்த நீரில் கால்களை ஊறவைக்கலாம்.
உட்காரும் போது அல்லது படுக்கும் போது கால்களை உயர்த்தி வைக்கலாம். இப்படி செய்யும் போது கால்களில் மீது எந்த சுமையும் வைக்கக் கூடாது. சுவற்றில் கால்களை வைத்து முதுகில் சாய்ந்துக்கொண்டும் இருக்கலாம்.
மதுவானது உடலில் நீர் வற்றச் செய்து வீக்கத்தை அதிகரிக்கும். மது அருந்துவதை நிறுத்தி இரண்டு நாட்கள் கடந்தும் வீக்கம் நீடித்தால் மருத்துவரை அணுகவும்.
வெதுவெதுப்பான நீரில் கல்லுப்பு கலந்து காலை ஊறவைத்தால் வீக்கம் மற்றும் வலி குறையும்.
உடலில் உள்ள நச்சுப்பொருட்கள் மற்றும் மிகுதியான திரவங்களை நீக்க எலுமிச்சை ஜூஸ் பருகலாம். எலுமிச்சை ஜூஸை தினமும் குடிக்கலாம்.
உடலில் நீர் தேங்க மக்னீசியம் குறைபாடு காரணமாக இருக்கலாம். எனவே, மக்னீசியம் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். டோஃபூ, கீரை, முந்திரி, பாதாம், டார்க் சாக்லேட், புரொக்கோலி மற்றும் அவகேடோ ஆகிய உணவுகளில் மக்னீசியம் அதிகம் உள்ளது.
உணவில் உப்பு குறைவாக எடுத்துக் கொண்டால் திரவம் தேங்குவதை குறைத்து, வீக்கத்தை குறைக்கலாம். பாக்கெட் உணவுகள் துரித உணவுகளை தவிர்க்கவும்.
கால் வீக்கத்திற்கு நிவாரணம் தர மசாஜ் உதவும். தேங்கிய திரவத்தை அகலச் செய்து வீக்கத்தை குறைக்கும்.
கால்களில் வீக்கம் (The swelling feet) ஏற்பட்டால், உடனடியாக ஏதாவது ஒரு எண்ணெய் தடவி, மசாஜ் செய்வது பொதுவான வழக்கம். சாதாரணமான வீக்கத்திற்கு இது சரி.ஆனால், முக்கிய உறுப்புகள் செயலிழப்பின் அறிகுறியாக, கால் வீக்கம் இருக்கலாம். இந்நிலையில், மசாஜ் செய்வது தவறு.மருத்துவ ஆலோசனையின் பின்னர் செய்து கொள்ளலாம்.
உடலில் திரவம் தேங்க பொட்டாசியம் குறைபாடு காரணமாக இருக்கலாம். சக்கரைவள்ளிக்கிழங்கு, வாழைப்பழம், போன்ற பொட்டாசியம் அதிகம் உள்ள உணவுகளை உண்பது நல்லது.
கால் வீக்கம் எந்தெந்த நோய்களின் அறிகுறி
இதயத்தின் வலது பக்க வால்வுகள் உட்பட, பல்வேறு இதய கோளாறுகளால், கால்களில் வீக்கம் ஏற்படலாம்.
கல்லீரல் செயலிழப்பிற்கு காரணம், மது பழக்கம், வைரஸ் தொற்று போன்றவை. அதன் வெளிப்பாடாகவும், வயிற்றுடன் சேர்ந்து, கால்கள் வீங்கலாம்.
சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டால், சிறுநீர் முழுவதுமாக வெளியேறாமல், உடல் முழுவதும் நீர் தேங்கி, முகம் உட்பட பல பாகங்கள் வீக்கத்துடன் காணப்படலாம். ஆனால், வெளிப்படையான அறிகுறியாக, கால்களின் வீக்கம் இருக்கும்.
எந்த நிலையிலும், கால்களில் வீக்கம் ஏற்பட்டால் அலட்சியப்படுத்தாமல், காரணத்தை தெரிந்து கொள்ள வேண்டும்.