தேமல் ஏற்படக் காரணம் என்ன (Themal)

 
முகத்தில் பவுடர் அப்பியது போல இருக்கும் தேமல் (Themal) அடையாளங்களால் அழகான முகம் அழகு குலைந்து காணப்படும்.
தோலில் ஏற்படுகிற காளான் நோய்களில் முதல் இடம் பெறுவது தேமல் நோய். ‘மலேசேசியா பர்பர்’ (Malassezia furfur) எனும் கிருமியால் இந்த பாதிப்பு உண்டாகிறது.
மக்கள்தொகை பெருக்கம், பொது சுகாதார குறைவு, உடலில் அதிகம் வியர்ப்பது போன்ற காரணங்களால் காளான் நோய்கள் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவும் வாய்ப்பு ஏற்படுகிறது.

தேமல் ஏற்படக் காரணம் (Causes)

இதற்கு காரணம் பூஞ்சை தொற்று தான். வியர்வை, வெப்பம் அதிகமாகும் போது இவை வேகமாக வளரும். எண்ணெய்பசை அதிகம் இருக்கும் சருமத்தில் இவை அதிகம் இருக்கும்.
குளித்து முடித்து வரும் போது ஈரத்தில் உணர முடியாது. ஆயினும் சருமம் உலர்ந்ததும் அந்த இடத்தில் தொட்டாலே அந்த தேமல் உதிர தொடங்கும்.
தேமலை தொட்டு தேய்க்கும் போது பொடி பொடியாக உதிர தொடங்கும்.
ஒருவித பூஞ்சைதொற்றால் வரும் இந்த தேமலை கண்டதும்  சரிசெய்யாவிட்டால் முகம், உடல் முழுக்க பரவிவிடும்.
 
மார்பு, முதுகு, கழுத்து, முகம், தோள், கை, கால் போன்ற இடங்களில் தோல் சிறிது நிறம் குறைந்து அல்லது அதிகரித்து மெல்லிய செதில்களுடன் வட்ட வட்டமாக, திட்டுத்திட்டாகப் படைகள் போன்று காணப்படுவது இந்த நோயின் முக்கிய அறிகுறி.
தேமல் (Themal) படையைச் சுற்றி ஓர் எல்லைக்கோடு காணப்படுவதும் சிறிதளவு அரிப்பு ஏற்படுவதும் இயல்பு.
வியர்வை அதிகம் சுரப்பவர்களுக்கும் ,சர்க்கரைநோய் உள்ளவர்களுக்கும், ஸ்டீராய்டு மாத்திரைகளை நெடுங்காலம் சாப்பிட்டு வருபவர்களுக்கும், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கும் தேமல் (Themal) அடிக்கடி தொல்லை தரும்.  

அழகு தேமல்

தேமல் (Themal) நோய்கள் ஏற்படக் காரணம் என்ன Some skin diseases like eczema,அன்னைமடி,சரும நோய்கள்,தேமல் நோய்களுக்கான சிகிச்சை,annaimadi.com, skin diseases,themal,causes of themal,treatment for themal ,அழுக்குத் தேமல் Pityriasis versicolor,அழகு தேமல்

தெளிவற்ற ஓரங்களையுடைய அடையாளங்களாக இருக்கும். நல்ல வெளிச்சத்தில் உற்றுப் பார்த்தால் நுண்ணிய செதில்கள் போல சற்று சொரப்பாக இருக்கும். சற்று செம்மை படர்ந்த அடையாளங்களாக ஆரம்பிக்கும் இவை பின்னர் வெளிறிவிடும்.

எனவே இவை செம்மை படர்ந்தவையாகவோ, வெள்ளை நிறமாகவோ அல்லது சில வேளைகளில் சரும நிறத்தவையாகவோ இருக்கும்.

முகத்தில் அதுவும் பெரும்பாலும் கன்னங்களிலேயே இது தோன்றும். இருந்த போதும் தோள் மூட்டு, கைகளின் மேற்பகுதி, கழுத்து போன்ற இடங்களிலும் வரக்கூடும்.

இது ஏன் தோன்றுகிறது என்பது பற்றி தெளிவற்ற தன்மையே நிலவுகிறது.

பொதுவாக இது ஒரு வகை சரும அழற்சி என்றே கருதப்படுகிறது. அதாவது ஒரு வகை எக்ஸிமா எனலாம் என்றபோதும் கடுமை அற்ற வகையானது என்றே சொல்ல வேண்டும்.

இது ஒரு ஆபத்தற்ற நோய். ஒருவரிலிருந்து மற்றவருக்குத் தொற்றுவதில்லை. அத்துடன் காலப்போக்கில் தானாகவே குணமடைந்துவிடும். சருமத்தை ஊறுபடுத்தாது கவனமாகப் பேணி வந்தாலே போதுமானது. எந்தவித சிகிச்சையும் தேவைப்படாது.

சொரசொரப்பு அல்லது அரிப்பு தொல்லையாக இருந்தால் மருத்துவரின் அனுமதியுடன் சருமத்தை மிருதுவாக்கும் கிறீம் வகைகளைச் (Emollient cream)  பயன்படுத்தலாம்.

அழுக்குத் தேமல் (Pityriasis versicolor)

அழுக்குத் தேமலும் ஏறத்தாள அழகு தேமல் போலவே பார்வைக்கு இருக்கும். இருந்தபோதும் இது தோல் அழற்சி நோயல்ல. கிருமியால் ஏற்படுகிறது.

பெரும்பாலானவர்களின் உடலில் இக்கிருமி இயற்கையாகவே இருக்கிறது. இருந்தபோதும் சிலரது உடலில் மட்டும் அவை பெருகி சரும நோயை ஏற்படுத்துகின்றன.

அழுக்குத் தேமலானது (Themal) நெஞ்சு, கழுத்து மற்றும் மேற் புஜங்களிலேயே பெரும்பாலும் ஏற்படுகிறது. வயிறு, முதுகு, தொடை போன்ற இடங்களிலும் இது பரவுவதுண்டு.

சரும நிறத்திலேயே சற்று வெளிறலாகவும் சொரசொரப்பாகவும் இருப்பதால் அழுக்குப் படர்ந்தது போல தோன்றலாம். எனவே தான் அழுக்குத் தேமல் என்கிறார்கள்.

மருத்துவ சம்பூக்களை (medicated shampoo) வெளிப் பூச்சு மருந்தாக உபயோகிக்கலாம். தேமல் உள்ள இடங்களில் மட்டுமின்றி அருகில் உள்ள சருமத்திலும் பூசுவது அவசியம். 5 முதல் 10 நிமிடங்கள் கழிந்த பின்னர் உடலைக் கழுவுங்கள்.

வாரம் ஓரு முறையாக நான்கு வாரங்கள் வரை பாவிக்க நோய் மறைந்து விடும்.

தேமலைப் போக்கும் ​சிகிச்சை(Treatment for Themal)

தேமல் (Themal) பிரச்சனை இருப்பவர்கள் எண்ணெய்  அதிகம் எடுத்துகொள்ள வேண்டாம். எண்ணெய் தேய்த்து ஊறவைத்து குளிப்பது  அந்த பூஞ்சையை வளர்ப்பது போல் ஆகிவிடும் என்கிறார்கள் சரும பராமரிப்பு நிபுணர்கள்.

அதிகப்படியான தேமல் இருப்பவர்கள் தேமல் சிகிச்சை முடிந்து அவை மறையும் வரை ஆயிலை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.

தேமல் பிரச்சனை இருப்பவர்கள் கண்டிப்பாக சுத்தம், சுகாதாரம் என்ற விஷயத்தை கடைபிடிக்க வேண்டும்.

இயன்றவரை வியர்வையை உறிஞ்சும் பருத்தி ஆடைகள் அணிவது நல்லது.

சரும பராமரிப்பில் கூடுதலாக மஞ்சள் சேர்த்து பயன்படுத்துங்கள். மஞ்சள் பூஞ்சை தொற்றை அழிக்கும் வல்லமை கொண்டது.

தினமும் இரு வேளை குளித்து, தோல் மருத்துவரின் ஆலோசனைப்படி களிம்பு, பவுடர்களில் ஒன்றை சில வாரங்களுக்குத் தொடர்ந்து பூசிவந்தால், தேமல் (Themal) விடைபெற்றுக் கொள்ளும்.

Leave a Reply

Your email address will not be published.