திருப்பதி லட்டு பற்றிய சுவாரசியம் (thirupathi laddu)

திருப்பதி லட்டின் (thirupathi laddu) சுவை,மகிமை தனியோ தனி தான்!

லட்டு என்றால் சிறுவர் முதல் பெரியோர் வரை எலோருக்குமே பிடிக்கும்.

என்னதான் நெய், முந்திரி, ஏலக்காய் என எல்லாம் போட்டு செய்யும் லட்டுகள் பல இருந்தாலும், உண்மையிலேயே

அதனை ஒருமுறையேனும் சுவைத்தவர்களுக்குத்தான் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் நாக்கில் எச்சில் ஊறும்.

அவ்வளவு அருமையாக இருக்கும்!

 tirupati laddu

வெங்கடாஜலபதி ஏழுமலையான் ஒருபுறம் இருக்கட்டும்.அப்படி என்னதான் இருக்கு அந்த லட்டில் ? என்று தெரிந்து கொள்வதற்காகவே திருப்பதி சென்றவர்கள் பலர் உண்டு.

ஒரு கவளமேனும் அந்த லட்டை உள்ளங்கையில் வைத்து விழுங்கிச் சுவைக்காமல் மலையேறாதவர்கள் இருந்தால் ஆச்சர்யம்தான்.

பெருமாள் நினைத்தால் தான் கிடைக்குமாம்  இந்த லட்டு (thirupathi laddu) 

திருமலை திருப்பதியில் ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கில் தயாரிக் கப்படும், லட்டு பிரசாதம் வெறும் உணவுபொருளாக  மட்டும், பார்க்காது, வெங்கடாஜலபதியின்  பரிபூரண அருளாகவும் இந்த  பிரசாதம் கருதப்படுகின்றது.

அதில், சர்க்கரை, முந்திரி, திராட்சை ஆகியவற்றுடன் பெருமாளின் அருளும் கலந்திருப்பதாக காஞ்சி பெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சாமிகள் பலமுறை குறிப்பிட்டுள்ளார்.

ஒருவர் வெறுமனே ஆசைப்பட்டால் மட்டும், அவரது கைக்கு திருப்பதி லட்டு வந்து விடாது. அந்த பிரசாதம் அவரது கைக்கு கிடைக்க வேண்டும் என்று பெருமாள் நினைக்க வேண்டும். அப்போதுதான் எவ்வளவு தொலைவில் இருந்தாலும் அவரது கைக்கு லட்டு வந்து சேரும் என்பது பக்தர்களது நம்பிக்கையாக உள்ளது.

திருமலையில் பெருமாளுக்கு நிவேதனமாக  பொங்கல், தயிர்சாதம், புளிசாதம், சித்ரான்னங்கள், வடை, முறுக்கு, ஜிலேபி, அதிரசம், போளி, அப்பம், மனோகரம், பாயாசம், தோசை, ரவா கேசரி, பாதாம் கேசரி, முந்திரிப் பருப்பு கேசரி….

இப்படி எண்ணற்ற நைவேத்தியங்கள் தயாராகின்றன. இவை அனைத்திலும் லட்டு தான் முதலிடம்.

திருப்பதி கோவிலில் சம்பங்கி பிரதாக்‌ஷணம் என்னும் இடத்தில் லட்டுகள் தயாரிக்கும் பொட்டு என்னும் மடப்பள்ளி உள்ளது.

சுமார் 200 பணியாளர்கள் லட்டு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்த லட்டு பணியாளர்கள் பொட்டு கார்மீகலு என அழைக்கின்றனர்.

தற்போது ஒரு நாளைக்கு 2.80 லட்சம் லட்டுக்கள் தயாரிக்கப் படுகிறது. திருப்பதி பிரம்மோற்சவம் மற்றும் விழாக்காலங்களில் 5 லட்சம் லட்டுகள் வரை தயாரிக்கப்படும்.

நாள் ஒன்றுக்கு 8 லட்சம் லட்டுக்களை செய்யும் திறன் கொண்டதாக லட்டு கூடம் அமைக்கப்பட்டுள்ளது.

அட, திருப்பதிக்கு போயிட்டு வந்தவர்களிடம் நாம கேட்பது என்னவா இருக்கும்?

‘ திருப்பதி போயிட்டு வந்தாயே.. லட்டு எங்கப்பா?’ என்று. திருப்பதி போனதற்கு சான்றாக இருக்கும் ஒரே ஆவணப் பொருள், இந்த லட்டுப் பிரசாதம்தான்.

ஸ்ரீவாரி லட்டு (thirupathi laddu) என்றழைக்கப்படும் இந்த லட்டினை லட்டு பொட்டு என்கிற இடத்தில் வைத்துதான் தயாரிக்கிறார்கள்.

அதை எப்பிடி தயாரிக்கிறாங்க என்று பார்க்க ஆவலாக இருக்குமே.இதோ பாருங்கள்.

லட்டு தயாரிக்க பயன்படும் பொருட்கள்

கடலை மாவு, முந்திரி, ஏலக்காய், நெய், சர்க்கரை, கற்கண்டு மற்றும் உலர்ந்த திராட்சை ஆகியவை லட்டு தயாரிக்க பயன்படுத்தபடும் மூலப்பொருட்கள்.

நாளொன்றிற்கு  இலட்சக்கணக்கில் திருப்பதி லட்டுகள் தயாரிக்கப்படுவதால் அதிகளவு மூலப்பொருட்கள்  பயன்படுத்தப்படுகிறது.

திருப்பதி தேவஸ் தானத்தால் இந்த பொருட்களுக்கு டெண்டர் விடப்பட்டு கொள்முதல் செய்யப்படுகிறது.

திருப்பதியில் ஆஸ்தான லட்டு, கல்யாண உற்சவ லட்டு, புரோகிதம் லட்டு என்ற 3 வகையான லட்டுகள் தயாரிக்கப்படுகிறது.

ஆஸ்தான லட்டு முதன்மையான விழா நாட்களில் மட்டும் தயாரிக்கப்பட்டு முக்கிய பிரமுகர் களுக்கு வழங்கப் படுகிறது. இது 750 கிராம் எடையுடனும், பிற லட்டுக்களைவிட மிகுதியான அளவில் முந்திரி, பாதாம், குங்குமப்பூ போன்றவை சேர்த்து தயாரிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *