திருப்பதி ஏழுமலையானின் சுவாரஷ்யமான வரலாறு(Thirupathi)
காக்கும் கடவுளான மகா விஷ்ணுவின் அம்சமான திருப்பதி ஏழுமலையானை (Thirupathi) காண கண் கோடி வேண்டும் என்பார்கள். திருப்பதி உலக அளவில் மிகப் பிரசித்திப் பெற்ற தலம்.
திருப்பதி (Thirupathi) ஏழுமலையானைக் கண்கண்ட தெய்வமாக ஏற்றுக்கொண்ட அவன் அடியார்களுக்கு, அவனுடைய திருநாமமே உயிர் மந்திரம்.அவன் கோயில்கொண்டிருக்கும் திருமலையே உலகம்.
இப்போதும் வழக்கமான நாட்களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும், விடுமுறை மற்றும் விசேஷ தினங்களில் லட்சோபலட்சம் பக்தர்களும் திருமலையில் குவிகிறார்கள் என்றால், திருவேங்கடவனின் அருட்கருணையே அதற்குக் காரணம்!
வருடத்தின் 365 நாட்களில் 450 திருவிழாக்களும், உற்சவங்களும் இவருக்கன்றி வேறு எந்த தெய்வத்துக்கும் நடைபெறுவதில்லை. அதனால் தான் என்னவோ திருப்பதியை, ‘பூலோக வைகுண்டம்’ என்றும் சிறப்பித்திருக்கிறார்
திருப்பதி ஏழுமலையான் கோயிலின் வரலாறு பல நூற்றாண்டு களைக் கடந்ததாகும். திருவேங்கடமுடையான் குடிகொண்டுள்ள இத்திருமலை, திருவேங்கடமலை யாக அழைக்கப்பட்டு வந்தது.
இந்த திருவேங்கடமலை சப்த மலைகள் எனப்படும் ஏழுமலைகள் அடங்கிய திருமலையாக விளங்குகிறது. தொண்டைமான் சக்ரவர்த்தி முதன்முதலில் ஏழுமலையானுக்கு கோயில் கட்டி வழிபட்டான் என கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.
திருப்பதி ஏழுமலையான் (Thirupathi) கோயில் உருவான வரலாறு
கி.மு.1-ம் நூற்றாண்டில் திருமலையில் ஒரு புற்றிலிருந்த ஏழுமலையானின் சுயம்பு சிலையை தொண்டைமான் சக்கரவர்த்தி முதன்முதலில் தரிசித்துள்ளார்.
பின்னர் அவர் அபிஷேகங்கள் செய்து, அந்த சிலையைச் சுற்றிலும் ஒரு மண்டபத்தை நிறுவியுள்ளார். கி.பி 8-ம் நூற்றாண்டு வரை பக்தர்கள் சாமிக்கு பூஜைகள் செய்து வந்ததாக சரித்திரங்கள் தெரிவிக்கின்றன.
கி.பி. 8-ம் நூற்றாண்டுக்கு பின்னர் அரசர்கள், ஆழ்வார்கள் பலர் ஏழுமலையானின் மகிமைகளை உலகுக்கு தெரியப்படுத்தினர்.
இதில் குலசேகராழ்வார், எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் திருப்பதி ஏழுமலையானின் வாசற் படியாக வோ அல்லது பீடமாகவோ இருக்கவே ஆசைப்படுவதாக தனது பாசுரத்தில் பாடியுள்ளார்.
இதனால் இப்போதும், திருப்பதி ஏழுமலையான் (Thirupathi) கோயில் வாசற்படிக்கு குலசேகரப்படி எனும் பெயர் உள்ளது. திருவேங்கட மலை மீது செல்ல மிகுந்த சிரமாக இருப்ப தால், திருப்பதிக்கு அருகே உள்ள திருச்சோழினூரில் (திருச்சானூர்) ஏழுமலையானின் வெள்ளி உருவத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டனர்.
கி.பி. 9-ம் நூற்றாண்டில் அதாவது 945-ம் ஆண்டில் ஏழுமலையானின் கற்ப கோயில் கட்டப்பட்டதாக கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. மேலும் சுற்றுப்புறச் சுவர்களும் எழுப்பட்டன.
பின்னர் 10-ம் நூற்றாண்டில், 2-வது சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டுள்ளது. பின்னர் கி.பி. 1262-ம் ஆண்டில் சுந்தர பாண்டிய அரசன், தற்போதைய கற்ப கோயில் கோபுரத்தின் மீது தங்கக் கலசங்களை நிறுவி உள்ளார்.
கி.பி.13-ம் நூற்றாண்டில் கோயிலுக்கு மராமத்து பணிகள் நடைபெற்றுள்ளன. கி.பி 1417-ம் ஆண்டில் மல்லண்ணா என்பவர், கற்ப கோயில் முன்பு 16 தூண் கள் அடங்கிய திருமாமணி மண்ட பத்தை கட்டி உள்ளார்.
மேலும், வாயிலின் இருபுறமும் ஜெயா, விஜயா சிலைகளும், கருடாழ்வார் சிலைகளும் நிறுவப்பட்டன.
கி.பி. 1209-ம் ஆண்டு கோயி லின் முகப்பு கோபுர பணிகள் தொடங்கப்பட்டன. மேலும் கோயிலுக்குள் பிரசாதங்கள் தயாரிக்கும் அறையும் கட்டப்பட்டது.
கி. பி.16-ம் நூற்றாண்டில் பரகாமணி மண்டபம், வரத ராஜர் சன்னதி, ராமானுஜர் சன்னதிகள் கட்டப்பட்டன. 13-ம் நூற்றாண்டிலேயே கிருஷ்ண தேவராய மண்டபம், கண்ணாடி மண்டபம், ரங்கநாயக மண்டபம் போன்றவை கட்டப்பட்டன.
கி.பி. 15-ம் நூற்றாண்டில், கொடிகம்ப மண்டபம் கட்டப்பட்டது. கி.பி. 1470-ல் விஜயநகர சக்ர வர்த்தி சாளுவ நரசிம்மராயுலு தன்னுடைய மனைவி, இரண்டு மகன்களின் பெயரில் சம்பங்கி மண்டபம் உட்பட மேலும் சில கட்டிடங்களைக் கட்டினார்.
இப்படி திருப்பதி ஏழுமலையான் (Thirupathi) கோயில் படிப்படியாக கட்டப்பட்டு, நடைபாதை, வாகனப் பாதைகள், விடுதிகள், தேவஸ்தான அலுவலகங்கள் என வளர்ந்து நிற்கிறது.