கண்திருஷ்டி போக்க (Thirushti)
ஒருவர் எதிர்பார்த்தது மற்றவர்களுக்குக் கிடைக்கும்போதோ, அல்லது ஒருவருக்கு ஏதேனும் நல்லது நடக்கும்போதோ… அதனால் மனஉளைச்சல், ஆற்றாமை, எரிச்சல், பொறாமை போன்றவை உண்டாகும்.இதுவே பொருமல். இதனால் ஏற்படுவதே கண் திருஷ்டி (Thirushti).
கண்பார்வை மூலமாகவே பார்க்கப்படும் பிற மனிதனி ன் மனநிலையையோ, உடல் நலத்தையோ, வாழ்க்கை நிலையையோ, மேன்மையாக்கிவிட முடியும் அல்லது சீா் குலைத்துவிட முடியும்.
கண் பார்வை மூலமாகப் பிறா்க்கு பாதிப்பு ஏற்படுவதைக் கண்திருஷ்டி (Thirushti)என்று கூறுவா்.
கல்லடி பட்டாலும் கண்ணடி படக் கூடாது
என்பார்கள்.
நம் முன்னோர்கள் எதையும் சும்மா சொல்லிவிட்டு செல்லவில்லை. அது முற்றிலும் உண்மை தான்.
ஒரு மனிதனின் கண் ஒளிக்கு, வீட்டை எரிக்கும் சக்தி உண்டு. மற்றவன் வாழ்க்கையையும் எரிக்கும் சக்தி உண்டு. மனிதனின் கண்பார்வைக்குத் தனித்த மகத்துவம் உண்டு. மனத்தின் உணா்ச்சிகளை வெளிப்படுத்துவதில் கண்களுக்கு அதிகமான பங்கு உண்டு.
வாழ்வில், ஏதேனும் ஒருநல்லது நடந்தாலும் கெட்டது நடந்தாலும் நம் வீட்டில் சொல்லும் விஷயம்… ‘திருஷ்டி (Thirushti) சுத்திப் போடுங்க…’ என்பது இதனால் தான்!
சித்தா்கள், யோகிகள், ஞானிகள் இவா்களின் அருட் பார்வை பெற்ற ஒருவா் மேன்மையடையலாம்.
அதே போல தீய எண்ணம் கொண்டவர்கள் பார்வையால் ஒருவனது உடல் நலம், தொழில், வியாபாரம் பாதிக்கப்படும்.
துர்சிந்தனைகளின், கெட்ட எண்ணங்களின் தாக்குதல் தான் கண்திருஷ்டி என்கிறார்கள் ஆச்சார்யர்கள். இதை கண்ணேறு என்றும் சொல்லுவார்கள்.
திருஷ்டி (Thirushti) சுத்தி போடுவது எப்படி?
திருஷ்டி என்பது சம்ஸ்கிருத சொல். தமிழில் கண். திருஷ்டி கழித்தலை தமிழர்கள் கண்ணேறு கழித்தல் என்று கூறுவார்கள்.
குழந்தை திருஷ்டி
பிறக்கும் குழந்தை எல்லாம் அழகுதான். அழகோ அழகுன்னு எல்லாரும் கொஞ்சும் போது ஏற்படுற திருஷ்டிக்கு பரிகாரம் தான் கறுப்பு திருஷ்டி பொட்டு.
எளிமையான இது எல்லோராலும் செய்யக்கூடிய ஒன்று. நெற்றியி லும் கன்னத்திலும் இடப்படும் மைப்பொட்டு குழந்தையின் திருஷ்டியை போக்கும். கோயில்கள் தருகின்ற ஹோம ரட்சையை வைத்தால் இன்னும் கூடுதல் பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
வாலிப திருஷ்டி
ஒருகைப்பிடி உப்பை எடுத்து கையை நல்லா மூடி கிட்டு இளைஞனையோ / வாலிப பெண்ணையோ கிழக்கு நோக்கி இருத்தி இடமிருந்து வலமா மூணு தடவையும் வலமிருந்து இடமா மூணு தடவையும் சுத்தி அப்படியே சுத்தி அந்த உப்பை தண்ணியில போட்டுடுங்க. தண்ணியில உப்பு கரையரா மாதிரி திருஷ்டி எல்லாம் கரைஞ்சி போய்விடும்.
பெரியவர்களுக்கு
பெரியவர்களை தெருவாசலில் கிழக்கு முகமாக நிறுத்தி புதிய மண்சட்டிக்குள் ஊமத்தங்காய், படிகாரம், தெருமண் இவை மூன்றையும் போட்டு மண்சட்டி யை தலைக்கு இடமிருந்து வலமாகவும் வலமிரு ந்து இடமாகவும் மூன்று முறை சுற்றி தலை முதல் பாதம் வரை இறக்கி அப்படியே எடுத்துச் சென்று முச்சந்திகள் கூடும் இடத்தில் போட்டு உடையுங்கள்.
கையோடு ஒரு துடைப்பம் எடுத்துச் சென்று ஓரமாக பெருக்கித் தள்ளுங்கள். இதனால் யாருக்கும் பாதிப்பு ஏற்படாமல் போகும். பின்னர் வீடு திரும்பி கை கால் கழுவி தலையில் சிறிது தண்ணீர் தெளித்துக் கொண்டு வீட்டிற்குள் நுழையவும்.
பிள்ளையையும் அவ்வாறே செய்ய செய்து உள்ளே அழைத்துச் செல்லவும். மாதம் ஒருமுறை மூன்று கண் கொட்டாங்கச்சி எடுத்து அதை அடுப்பில் பற்றவைத்து ஒரு தட்டில் வைத்து சுற்றி தெருவில் ஓரமாக போடலாம்.
இன்னும் சில வீடுகளில் கடுகுமிளகாய், உப்பு சிறிது தெருமண், தலைமுடி இவற்றினை கையில் எடுத் துக் கொண்டு திருஷ்டி பட்டவரை உட்காரவைத்து
ஊரு கண்ணு, உறவு கண்ணு, நாய் கண்ணு, நரிக் கண்ணு, நோய்கண்ணு, நொள்ள கண்ணு கண்டக் கண்ணு, கள்ளக் கண்ணு, அந்த கண்ணு, இந்த கண்ணு எல்லாம் கண்ணும் கண்டபடி தொலையட்டும் கடுகு போல வெடிக்கட்டும்
என்று சொல்லி இடமிருந்து வலமாகவும் வலமிருந்து இடமாகவும் சுற்றி அடுப்பில் போடுவார்கள்.
திருஷ்டி (Thirushti) பரிகாரங்கள்
‘திருஷ்டி’ எனில், மற்றவர்கள் நம்மைப் பார்ப்பதால் நமது உடலிலும் உள்ளத்திலும் ஏற்படக்கூடிய சில மாறுதல்களைக் குறிப்பது.
இவற்றைப்போக்கி நாம் மீண்டும் பழையபடி வலிமை பெறவும், அவை நம்மைத் தாக்காமல் இருக்கவும் பல வழிமுறைகள் நமது முன்னோர்களால் காலம்தொட்டுக் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் ஒன்று தான் ஆரத்தி எடுப்பது.
ஆரத்தி, திலகம்
ஆரத்தி எடுக்கும் போது பயன்படுத்தப்படும் குங்குமம் கலந்த நீர், வெற்றிலை மீது எரியும் கற்பூரம் ஆகியவற்றுக்கு தீய சக்திகளை விரட்டும் ஆற்றல் உண்டு.
விசேஷ வைபவங்கள், சுபநிகழ்வுகளிலும், மணமக்கள் வீட்டினுள் வருதல், தாயும் குழந்தையும் முதல் முறை வருதல், வைத்தியசாலையில் இருந்து நோய் நீங்கி வீட்டிற்கு வருதல் போன்றவற்றிற்கு ஆரத்தி எடுத்து திலகம் இடும பழக்கம் இன்று வரை இருந்து வருகிறது.
இவற்றிலும் பல வகைகள் உள்ளன. ஆனால், அதில் அடிப்படையானது சிவத்தைக் குறிக்கும் சுண்ணாம்பையும், பெண்களின் மங்கலச் சின்னமான மஞ்சளையும் இணைப்பதே. சுண்ணாம்பு சைவமாகிய தூய்மையின் சின்னம்.
எலுமிச்சம்பழ பரிகாரம்
வாசலில் கற்றாழை, சப்பாத்திக் கள்ளி, முள் அதிகம் உள்ள செடிகள், மஞ்சள் ரோஜா முதலானவற்றை வளர்க்கலாம்.
வாரத்துக்கு ஒருமுறையேனும் கல் உப்பை குளிக்கும் தண்ணீரில் கொஞ்சமாகக் கலந்து குளித்து வர திருஷ்டியால் ஏற்படும் உடல் அசதி, சோம்பல் முதலானவை நீங்கும்.
அவரவர் பிறந்த கிழமையிலோ அல்லது செவ்வாய்க்கிழமையிலோ இப்படியாகக் குளிக்கலாம்!
சாம்பிராணி பொடியுடன், கருவேலம்பட்டை பொடி, வெண் கடுகுத்தூள் ஆகியவற்றைக் கலந்து வீடு, கடை மற்றும் அலுவலகத்தில் தூப, தீப, புகை காட்டி வேண்டிக்கொண்டால், திருஷ்டியும் தீய சக்திகளும் வெளியேறும் என்பது ஐதீகம்.
அமாவாசை, பவுர்ணமி, அஷ்டமி, நவமி முதலான நாட்களில் காலை, மாலை இருவேளையும் இவ்வாறு செய்து வருவது நல்லது.

கண்திருஷ்டி ஏற்பட்டுள்ளதை எப்படி அறியலாம்
நமக்கோ அல்லது நம் குடும்பத்தில் இருப்பவர்களுக்கோ திருஷ்டியோ தோஷங்களோ ஏற்பட்டுள்ளதா என்பதை பல நிகழ்வுகள் மூலமும் சில அறிகுறிகள் மூலமும் தெரிந்து கொள்ளலாம்.
ஒரு சிக்கல் தீருவதற்குள் அடுத்த பிரச்சினை வந்துவிடும். ‘அப்பாடா… பிரச்சினை முடிந்ததே என்ரூ நிம்மதி பெருமூச்சு விடுவதற்குள் இன்னொரு சிக்கல் பூதாகரமாக வந்து நிற்கும். இதற்கு உங்கள் குடும்பத்தின் மேல் பட்ட திருஷ்டியே காரணம்.
- பெண்களுக்கு உடல் சோர்வு,மனச்சோர்வு
- இல்லாத ஒன்றை கற்பனை செய்து பயப்படுதல்
- தம்பதி இடையே காரணமே இல்லாத பிரச்சினைகள், சந்தேகங்கள்
- உறவினர்களுடன் பகை
- தடைப்பட்டுக் கொண்டே இருக்கும் சுபநிகழ்ச்சிகள்
- ஒருவர் மாற்றி ஒருவர் நோய்வாய்படல்
- பிடித்த உணவாகவே இருந்தாலும் சாப்பாட்டில் விருப்பமின்மை
- எல்லோரிடமும் எரிந்து விழுவது
- கெட்ட கனவுகள், எதிர்மறை எண்ணங்கள் தோன்றுவது
- தூக்கமின்மை
முதலானவை எல்லாமே கண் திருஷ்டியால் விளைபவையே.
இப்படியான நிலை இருந்தால், வீட்டில் மீன் தொட்டி வைக்கலாம் என்றும் கறுப்பு, சிகப்பு நிறங்களில் உள்ள மீன்களை அதில் வளர்க்கலாம் என்று வாஸ்து சாஸ்திர நிபுணர்கள் சொல்கிறார்கள்.
வீட்டில் வாசலுக்கு எதிராக, கண்திருஷ்டி கணபதி படத்தை வைக்கலாம்.
இல்லத்தில், மெல்லிய வாத்திய இசையை அல்லது மந்திரங்களை ஒலிக்கச் செய்யலாம்.
வாழை மரம்
விசேஷங்களின்போது குலை தள்ளி, பூவுடன் இருக்கும் வாழைமரத்தை வாசலில் கட்டுவார்கள். இதற்கு காரணம் வாழைக்கு திருஷ்டி தோஷங்களை ஈர்த்துக் கொள்ளும் குணம் உள்ளதாலேயே.
வீட்டுக்கு, அலுவலகத்துக்கு வருபவர்களின் பார்வையை, கெட்ட எண்ணங்களை, குரூர சிந்தனைகளை திசை திருப்புவதற்கு பெரிய முகம் பார்க்கும் கண்ணாடியை வரவேற்பறையில் அல்லது வீட்டின் உள்வாசலில் வைக்கலாம்.