திருவண்ணாமலையும் கிரிவலமும் (Thiruvannamalai and Kiriwala)

திருவண்ணாமலையில் அருணாசலேசுவரரையும், உண்ணாமுலை அம்பிகையையும் தரிசிப்பது எப்படிச் சிறப்பானதோ, அதே அளவு சிறப்பானது அண்ணாமலையை கிரிவலம் (Thiruvannamalai and Kiriwala) வந்து வணங்குவது.

அருணாசலேசுவரரை மனதில் நினைத்து, அவரது பெயரை உச்சரித்தவாறே கிரிவலம் வரும்போது ஏற்படும் சுகானுபவம் அலாதியானது. திருவண்ணாமலையைக் கிரிவலம் வருவதன் மூலம் உடலும் உள்ளமும் நலம் பெறும்.

மலை வலம் செல்ல ஒரடி எடுத்து வைத்தாலே ஓரு யாகம் செய்த பலனை பெறுவோம்.

ஈரடி எடுத்து வைத்தால் ராஜசூய யாக பலனை பெறுவோம்.

மூன்றடி எடுத்து வைத்தால் அசுவமேத யாகம் செய்த பலனை பெறுவோம்.

நான்கடி எடுத்து வைத்தால் எல்லா யாகங்களையும் நிறைவேற்றிய பலன் பெறுவோம்

என்பது சித்தர்களின் வாக்கு.

உள்ளீடற்ற உன்னதமான மலையில் இருந்து சிவந்த ஜோதி கதிர்கள் எப்போதும் வெளிபடுவதை உணர்ந்து உலகுக்கு உணர்த்தியவர் மகான் ரமண மகரிஷி(Ramana magatishi). பௌர்ணமி  நாட்களில் அது பன்மடங்காக வெளிப்படுகிறது.

 கிரிவலம் (Thiruvannamalai and Kiriwala) மேற்கொள்ளும் போது கடைப்பிடிக்க வேண்டியவை

  • மலைச்சுற்றும்போது உள்ளமெல்லாம் இறை சிந்தனை மட்டுமே நிறைந்திருக்க வேண்டும் என்கின்றனர் சிவனடியார்கள்.
  • மலை வலம் தொடங்கும் முன்பு உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை நன்னீராட வேண்டும். திருநீறு ஆணிந்து, ஒம் நமச்சிவாய எனும் மந்திரத்தை (Mandra) உச்சரித்தபடியே செல்லவேண்டும். வெயிலுக்கோ, மழைக்கோ அஞ்சி குடை பிடித்து செல்வது பாவம்.
  • கிரிவலத்தைத் தொடங்குவதற்கு முன்பு ,திருவண்ணாமலை கோயிலுக்கு அருகே இருக்கும், பூத நாராயணரைத் தரிசித்து அனுமதி பெற வேண்டும். பூத நாராயணர் திருவண்ணாமலையின் காவல் தெய்வம். அவரை வணங்கிவிட்டுப் புறப்பட்டால் எந்தவித இடையூறும் இல்லாமல் கிரிவலத்தை முடிக்க முடியும் என்பது நம்பிக்கை.
  • பின்னர் வழியில் உள்ள இரட்டைப் பிள்ளையாரை வணங்க வேண்டும். அதனைத் தொடர்ந்து ஆலயம் சென்று அண்ணாமலையாரையும், உண்ணாமுலை அம்பிகையையும் தரிசிக்க வேண்டும்.
  • பின்பு  கோயில் ராஜ கோபுரத்தை வணங்கிவிட்டு மலையை வலம் வரத் தொடங்க வேண்டும்.
  • மலையை இடமிருந்து வலமாக மட்டுமே சுற்றவேண்டும். கிரிவலத்தை இப்படித்தான் தொடங்க வேண்டும் என்பது நியதி. ராஜகோபுரத்தில் இருந்து மலை வலம் தொடங்குவது சிறப்பு.

 

சிவபெருமானின் பஞ்சபூதத் தலங்களில் அக்னித் தலமாக விளங்குவது திருவண்ணாமலை.

ஈசன் நெருப்பாக நின்று, மலையாகக் குளிர்ந்த தலம்.

நினைத்தாலே முக்தி தரும் தலம்.

உமையவளுக்கு இடப்பாகத்தை அளித்து ஈசன் அம்மையப்பராகத் திகழும் தலம்

என்று பல்வேறு சிறப்புகளைக் கொண்டது திருவண்ணாமலை. 

திருவண்ணாமலையைக் கிரிவலம் வருவதால் ஏற்படும் நன்மைகள்

திருவண்ணாமலையைச் சுற்றிக் கிரிவலம் மேற்கொண்டால் தீராத நோய்களும் தீரும்.

அனைத்துப் பாவங்களும் விலகி மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

கிரிவலம் செல்லும்போது எறும்புப் புற்றுகளுக்கு அன்னம் , இனிப்பு  வைத்தால் பெரும் புண்ணியம் வந்து சேரும். எத்தனை ஆயிரம் எறும்புகள் உண்கிறதோ அத்தனை ஆயிரம் உயிர்களுக்கு உணவிட்ட புண்ணியம் கிடைக்கும்.

பௌர்ணமி தினத்தில் மேற்கொள்ளப்படும் கிரிவலத்துக்கு மற்ற தினங்களை விடவும் அதிகச் சிறப்பு உண்டு.எனினும் கிரிவலம் செல்வதற்கு அனைத்து நாள்களுமே உகந்த தினங்கள் தான். 

ஊழ்வினையை நீக்கும் திருவண்ணா மலையானை நினைத்தாலே பாவங்கள் தீரும். `வலம் வர வேண்டும்’ என்று நினைத்த மாத்திரத்தில் சகல தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம். 

சித்தர்களும், ரிஷிகளும், யோகிகளும், மகான்களும் தவமிருந்து வழிபட்ட அண்ணாமலையை ,இன்றைக்கும் அவர்கள் அருவமாக கிரிவலம் வந்து வழிபடுகிறார்கள். இதை கிரிவலம் செல்லும் பக்தர்கள், மூலிகை, சந்தனம், ஜவ்வாது, சாம்பிராணி, விபூதி, வாசமலர்களின் நறுமணங்களை கொண்டு உணரமுடியும்.

thiruvannamalai special,Thiruvannamalai and Kiriwala,Indian famous temple,annaimadi.com

உலகிலிருக்கும் பழைமையான மலைகளுள் திருவண்ணாமலையும் ஒன்று என்ற கருத்தும் உண்டு. இதன் வயது 260 கோடி வருடங்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.

2671 மீட்டர் உயரத்துடனும், 14 கி.மீ சுற்றளவுடனும் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது அண்ணாமலை. மலையைச் சுற்றிலும் எண்கோண வடிவில் எட்டு சிவலிங்கங்கள் அமைந்துள்ளன.

அவை இந்திரலிங்கம், அக்னிலிங்கம், யமலிங்கம், நிருதிலிங்கம், வருணலிங்கம், வாயுலிங்கம், குபேரலிங்கம், ஈசான்யலிங்கம் ஆகியவனவாகும். இந்த லிங்கங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு.

இது மட்டுமல்லாமல் ஆதி அண்ணாமலை, நேர் அண்ணாமலை, சந்திர, சூரிய லிங்கங்கள், பதினாறு விநாயகர் கோயில்கள், ஏழு முருகன் கோயில்கள், ஆதி காமாட்சி அம்மன் என்று மொத்தம் 99 கோயில்கள் கொண்ட தெய்விகப் பாதை கிரிவலப் பாதையாகும். 

thiruvannamalai special,Thiruvannamalai and Kiriwala,Indian famous temple,annaimadi.com,Thiruvannamalai temple

முழு முதற்கடவுளாக விளங்கும் அண்ணாமலையின் அடிவாரத்தைச் சுற்றி வலம் வரும் போது சக்தி மிக்க மூலிகைச் செடிகொடிகளின் காற்றைச் சுவாசிப்பதால் உடல் நலம் மேம்படுவதோடு, மலையின் சக்தி மிகுந்த அதிர்வுகள் நம் வாழ்வைச் சிறப்பானதாக மாற்றும். 

நிறைமாத கர்ப்பிணிப் பெண் எப்படி அமைதியாக, ஆனந்தமாக, வயிற்றிலிருக்கும் குழந்தையை மட்டும் நினைத்து நடந்து செல்வாளோ, அதேபோன்று தான் நாமும் முழுமுதற் கடவுளான சிவபெருமானை மட்டுமே மனதில் நினைத்து, அவருடைய திருப்பெயரை உச்சரித்துக்கொண்டு பொறுமையாகவும், பக்தியுடனும் நடந்து செல்லவேண்டும்.

கிரிவலம் செல்லும்போது ஓடவோ, பேசவோ அல்லது சாப்பிடவோ கூடாது. எண்ணம் முழுவதும் அருணாசலேசுவரர் மீது மட்டுமே நிறைந்திருக்க வேண்டும்.

கிரிவலத்தைப் பற்றி ரமண மகரிஷி கூறிய கதை (Thiruvannamalai and Kiriwala)

ராஜா ஒருவர் குதிரையில் அமர்ந்து காட்டுப்பூனையைத் துரத்தியிருக்கிறார். அப்போது எதிர்பாராதவிதமாகக் காட்டுப்பூனை, குதிரை, ராஜா ஆகியோர் இறந்து போனார்கள். மூவரும் ஒரே நேரத்தில் இறந்து போனாலும் குதிரையும், காட்டுப் பூனையும் மோட்சம் அடைந்துவிட்டன. ஆனால், ராஜாவுக்கு மோட்சம் கிடைக்கவில்லை.

ராஜாவிடமிருந்து தப்பிக்க வேண்டும் என்ற ஒரே சிந்தனைதான் காட்டுப் பூனைக்கு இருந்தது. ராஜாவின் ஆணையைக் கேட்க வேண்டும் என்ற ஒரே எண்ணம் தான் குதிரைக்கு இருந்தது. ஒரே சிந்தனையுடன் ஓடியதால் குதிரைக்கும், பூனைக்கும் மோட்சம் கிடைத்துவிட்டது.

ஆனால், பல சிந்தனைகளுடன் காட்டுப் பூனையைத் துரத்தியதால் ராஜாவுக்கு மட்டும் மோட்சம் கிடைக்க வில்லை.

இதேபோன்றது தான் கிரிவலமும்.

மனதில் எந்தவிதச் சிந்தனையும் இல்லாமல் `அண்ணா மலையான்’ ஒருவனை மட்டுமே நினைத்துக் கொண்டு கிரிவலம் மேற்கொண்டால் இறைவனின் அருளைப் பரிபூரணமாகப் பெற முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *