தண்டனையாக ஏன் தோப்புக்கரணம் (Thoppukaranam )

தோப்புகரணம் ( Thoppukaranam ) என்பது நன்கு அறியப்பட்ட ஒரு யோகா பயிற்சி முறை.
இது குறிப்பாக மூளைக்கான யோகாசனம்  என்று சொல்லலாம்.
தோப்புகரணம் போடும் போது மூளையில் முக்கிய மாற்றங்கள் நிகழ்கின்றன.இதனால் மூளைக்கு செய்திகளை பரிமாற்றம் செய்யும் காரணிகள் வலுப்பெறுகின்றது.இந்த எளிய உடற்பயிற்சியின் மூலம் மூளையின் செல்கள் புத்துணர்சி அடைகின்றன.இதனால் மூளை புத்துணர்ச்சியுடன் செயல்பட ஆரம்பிக்கின்றது.

மூளையின் வலது மற்றும் இடது பகுதி சமமான தூண்டுதல் அடைகின்றது.

தோ என்றால், இரண்டு.கரணம் என்றால் காது.இரண்டு கைகளாலும், காதுகளை பிடித்துக் கொண்டு, உட்கார்ந்து எழுவதே தோர்ப்பிகரணம் ஆகும்.

நமது முன்னோர்கள் அறிவு கடவுளான பிள்ளையாருக்கு முன் தோப்புகரணம்  போடுவதை வழிபாட்டின் ஒரு பகுதியாக  வைத்திருந்தது இதனால் தான்.

 

 

காது மடல்களைப் பிடித்து தோப்புக்கரணம் போடும்போது உடலின் எல்லா உறுப்புகளும் செயல்படுவதற்கான ஒரு தூண்டுதல் கிடைக்கிறது.ஏனெனில் ,காது மடல்களில் உடலின் எல்லா உறுப்புகளையும் இணைக்கிற புள்ளிகள் இருக்கின்றன.

உட்கார்ந்து  எழும்போது, காலில் உள்ள ‘சோலியஸ் (soleus muscle )’ எனும் தசை இயங்க ஆரம்பிக்கும். இந்த  தசையால் உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீராகும். இதயத்தின்  தசைகளை போன்றே இது வேலை செய்கிறது.

தோப்புக்கரணம் ( Thoppukaranam ) போடுவது ஒரு காலத்தில் பள்ளிகளில் மிக சாதாரண விஷயம்.குழந்தைகள் ஏதேனும் தவறு செய்தாலோ அல்லது வீட்டுப்பாடம் எழுத தவறினாலோ ஆசிரியர்கள் குழந்தைளுக்கு தோப்புக்கரணம் தண்டனையாக கொடுத்தார்கள்.தேர்வு நேரத்தில் மாணவர்கள் பக்தி பரவசத்துடன் பிள்ளையார் முன்பு தோப்புக்கரணம் போடுவார்கள்.ஆனால் இன்று இந்தப் பழக்கம் குறைந்து கொண்டே வருகிறது.பிள்ளையார் முன்பு நின்று தோப்பு கரணம் போடுபவர்கள் கூட முழுமையாக  சரியாக தோப்பு கரணம் போடுவது இல்லை.தோப்புக்கரணம் போடுவதால் ஏற்படும் நன்மைகள் தெரிந்து கொண்டு செய்தால் முழுப்பலனையும் அடைய முடியும்.

தோப்புக்கரணம் எப்படி செய்தல் வேண்டும்?

  • முதலில் நம்முடைய தோள்பட்டை அளவுக்குக் கால்களை பிரித்துவைத்து நிற்க வேண்டும்.
  • இடது கையால் வலது காது மடலையும்,வலது கையால் இடது காது மடலையும் பிடிக்க வேண்டும்.
  • கட்டைவிரல் வெளியேயும் ஆள்காட்டி விரல் உட்பக்கம் இருக்க வேண்டும்.
  • வலது கை கண்டிப்பாக இடது கையின் மேல் இருக்க வேண்டும்.
  • தலையை நேராக வைத்து மூச்சுக் காற்றை உள்ளிழுக்க வேண்டும்.

இந்த தோப்புகரணம் போடும்போது வலது கை, இடது காதின் கீழ் பகுதியையும் இடது கை வலது காதின் கீழ் பகுதியையும் சற்று இறுக்கமாக அழுத்தி பிடித்து முழுமையாக உட்கார்ந்து எழ வேண்டும். சுமார் 10 நெடிகள் உட்கார்து பின் எழ வேண்டும்.

பின்பு மூச்சுக் காற்றை வெளியிட்டவாறே அப்படியே எழுந்து நிற்கவேண்டும்.

இதன் மூலம் நமது தண்டுவடத்தின் மூலாதாரத்தில் சக்தி உருவாகும்.

முதல் முறையாக செய்பவர்கள் எந்த அளவு சிரமம் இல்லாமல் உட்கார முடியுமோ அந்த அளவு உட்கார்ந்தால்  போதும்.ஆரம்பத்தில் 5 வரை செய்து, பிறகு அதிக படுத்தி கொள்ளலாம்.

தோப்புக்கரணம் செய்வதனால் கிடைக்கும்  நன்மைகள்

இந்த எளிய உடற்பயிற்சியின் மூலம் மூளையின் நியூரான் செல்கள் புத்துணர்சி அடைகின்றன.

குழந்தையின் மூளையிலுள்ள நரம்பு மண்டலத்தில் ஏற்படும் வளர்ச்சிக் குறைபாடு ஆட்டிசம் எனப்படுகின்றது. ஆட்டிசத்தை  சரி செய்ய இது மிகவும் உதவுகின்றது.ஏனைய மன இறுக்கம் சம்மந்த பட்ட நோய்கள் கூட தோப்புகரணம் போடுவதால் குணமடைவதாக கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

இப்பயிற்சியை தினமும் ஐந்து நிமிடம் செய்தால் வியக்கத்தக்க மாற்றங்களை காணலாம் என்று ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர்.

மந்தமான மனநிலையுள்ள மாணவர்களின் மூளை செயல்திறன், அவர்கள் காது நுனிகளில் தொடுதல் மூலமான பயிற்சிகளினால், மூளை நினைவு செல்களின் வளர்ச்சி தூண்டப்பட்டு, நினைவாற்றல் சக்தி, ஞாபக சக்தி, அதிகரிப்பது மட்டுமல்லாது அறிவு கூர்மையையும் வெளிபடுத்துகிறது.

தொடர்ச்சியாக செய்யச்செய்ய, மூளை, சுறுசுறுப்படைகிறது.விழிப்படைந்த நினைவு செல்களின் ஆற்றலால், மாணவர்களின் நினைவாற்றல் மேலோங்கிறது,

இதற்காகத்தான் மந்தபுத்தியுள்ள பிள்ளைகளை , அறிவாற்றல் மிக்கவர்களாக ஆக்குவதற்காகவே, தோப்புக்கரணம் ( Thoppukaranam ) தண்டனையாக பாடசாலைகளிலும்  வீடுகளிலும்  தரப்பட்டது.

ஒரே கல்லில் இரு மாங்காய் என்பது இது தானோ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *