திருப்பதி கோயிலின் சிலிர்க்க வைக்கும் மர்மங்கள் (Thrilling mysteries of Tirupati)

திருப்பதியில் பலருக்குத் தெரியாத சிலிர்க்க வைக்கும் அதிசயங்கள் (Thrilling mysteries of Tirupati) , உண்மைகள், நடைமுறைகள் எவ்வளவோ உள்ளன.
திருப்பதி ஆலயத்திலிருந்து (Tirupati temple) 1 கிலோமீட்டர் தொலைவில் “சிலாதோரணம்” என்ற அபூர்வ பாறைகள் உள்ளன. உலகத்திலேயே இந்த பாறைகள் இங்கு மட்டும் தான் உள்ளன. இந்தப்பாறைகளின் வயது 250 கோடி வருடம். ஏழுமலையானின் திருமேனியும். இந்த பாறைகளும் ஒரேவிதமானவை.

ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு பச்சைக்கற்பூரம் சார்த்துகிறார்கள். இந்த பச்சைக்கற்பூரம் ஒரு இரசாயன பொருள். அரிப்பைக் ஏற்படுத்தும் ஒரு வகை அமிலம். இந்த இரசாயனத்தை சாதாரணக்கருங்கல்லில் தடவினால் கருங்கல் வெடித்துவிடும்.

ஆனால், சிலாதாரணத்தில் உள்ள பாறையில் தடவினால் அந்தப்பாறைகள் வெடிப்பதில்லை.  ஏழுமலையானின் திருவுருவச்சிலைக்கு 365 நாட்களும் பச்சைக்கற்பூரம் தடவுகிறார்கள். ஆனால் வெடிப்பதில்லை.

Thrilling mysteries of Tirupati,annaimadi.com,tirupati temple,Thrilling mysteries of tirupati balaji ,tirupati dharshan

ஏழுமலையான் திருவுருவச்சிலையின் மர்மம் என்ன? (Thrilling mysteries of Tirupati)

எந்தக் கருங்கல் சிலையானாலும் எங்காவது ஓர் இடத்தில் சிற்பியின் உளிபட்டிருக்கும் இடம் தெரியும். உலோகத்தை உருக்கி வார்த்த அடையாளம் தெரியும்.

ஏழுமலையான் திருவுருவச்சிலையில் அப்படி எதுவும் அடையாளம் தெரியவில்லை. ஏழுமலையான் திருமேனியில் நுணுக்க வேலைப்பாடுகள் எல்லாம் மெருகிட்டது போல் இருக்கின்றன.

விக்கிரகத்தின் நெற்றிச்சுட்டி, காதணிகள், புருவங்கள், நாகாபரணங்கள் எல்லாம் நகைக்கு பொலிஷ் போட்டது போல் பளபளப்பாக இருக்கின்றன.

திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம். ஆனால் ,ஏழுமலையான் திருவுருவச்சிலை எப்போதும் 110 பாகை ஃபாரன்கீட் வெப்பத்தில் இருக்கிறது.

அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீர், பால் மற்றும் திரவியங்களால் அபிஷேகம் செய்கிறார்கள். இருப்பினும் ,அபிஷேகம் முடிந்தவுடன் ஏழுமலையானுக்கு வியர்க்கிறது. பீதாம்பரத்தால் வியர்வையை ஒற்றி எடுக்கிறார்கள்.

வியாழக்கிழமை அபிஷேகத்திற்கு முன்னதாக, நகைகளைக் கழற்றும் போது, ஆபரணங்கள் எல்லாம் சூடாகக் கொதிக்கின்றன.

திருப்பதி ஆலயம், அதன் வழிபாடு, உண்டியல் வசூல், பூஜை முறைகள், சரித்திர சம்பவங்கள் அனைத்தும் அதிசய நிகழ்வுகளாக இருக்கின்றன.

ஏழுமலையானின் நைவேத்தியம்

திருப்பதி திருக்கோயில்  (Tirupati Balaji temple) சமையல்கட்டு மிகப் பெரியதாகும். பொங்கல், தயிர்சாதம், புளிச்சாதம், சித்ரான்னம், வடை, முறுக்கு, ஜிலேபி, அதிரசம், போளி, அப்பம், மெளகாரம், லட்டு, ரவா பாயாசம், தோசை, ரவாகேசரி, பாதாம் கேசரி, முந்திரிப்பருப்பு கேசரி போன்றவை தினமும் பெரிய அளவில் தயார் செய்யப்படுகின்றன.

தினமும் ஒரு புதிய மண்சட்டி ஏழுமலையானுக்கு வாங்குகிறார்கள்.இதில் தயிர்சாதம்  மட்டுமே நைவேத்தியமாக வைக்கப்படும்.

வைரம், வைடூரியம், தங்கப்பாத்திரங்கள் எதுவும் குலசேகரப்படியைத் தாண்டிச் செல்லாது. ஆண்டவனுக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட எச்சில் மண்சட்டியும், தயிர்சாதமும் ஒரு பக்தனுக்குச் கிடைக்கப் பெற்றால் அது மிகப்பெரிய பாக்கியமாக கருதப்படுகிறது.

Thrilling mysteries of Tirupati,annaimadi.com,tirupati temple,Thrilling mysteries of tirupati balaji ,tirupati dharshan,thayir satham

ஏழுமலையானிற்கான அபிசேகம்

ஏழுமலை ஆண்டவனுக்கு அபிஷேகம் செய்ய இன்று கட்டணம் செலுத்தினால் மூன்று ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தனது மூன்றாவது கண்ணை திறக்கிறார் என்ற ஐதீகம் உள்ளது.

அபிஷேகத்திற்காக ஸ்பெயின்,பிரான்ஸ்,நேபாளம், சைனா போன்ற நாடுகளிலிருந்து குங்குமப்பூ, கஸ்தூரி , புனுகு ஆகிய பொருட்கள் வரவழைக்கப்பட்டு, தங்கத்தாம்பாளத்தில் சந்தனத்தோடு கரைக்கப்படும். 51 வட்டில் பால் அபிஷேகம் செய்யப்படும். பிறகு கஸ்தூரி சாத்தி, புனுகு தடவப்படும், காலை 4.30 மணி முதல் 5.30 மணிவரை அபிஷேகம் நடைபெறுகிறது. அபிஷேகத்திற்கு சுமார் ஒரு லட்ச ரூபாய் செலவாகும்.
ஆம்ஸ்டர்டாமில் இருந்து பக்குவப்படுத்தப்பட்ட ரோஜா மலர்கள் பக்தர்களால் திருப்பதிக்கு விமானத்தில் அனுப்பி வைக்கப்படுகின்றன. ஒரு ரோஜா மலரின் விலை சுமார் 80 ரூபாய்.

சீனாவிலிருந்து சீனச்சூடம், அகில், சந்தனம், அம்பர், தக்கோலம், இலவங்கம், குங்குமம், தமாலம், நிரியாசம் போண்ற வாசனைப் பொருட்கள் ஏழுமலையான் திருக்கோயிலுக்காக அனுப்படுகின்றன.

Thrilling mysteries of Tirupati,annaimadi.com,tirupati temple,Thrilling mysteries of tirupati balaji ,tirupati dharshan

ஏழுலையானின் அபிஷேக நீர் குழாய் மூலம் புஷ்கரணியில் கலக்கிறது. ஆகவே இது புனிதமான நீராகும்.

இங்கே குளித்துவிட்டு நீரில் நின்றபடியே இரு கைகளாலும் தண்ணீரை எடுத்து குளத்திலேயே விட வேண்டும். இது விசேஷ வழிபாடாகும்.

வெள்ளிக்கிழமை அதிகாலை அபிஷேகத்திற்கு முன்பு ஒரு விசேஷ சாத்து முறை நடக்கும் .வடகலை சம்பிரதாயத்தில் “வேங்கடமெனப்பெற்ற” என்ற பாசுரமும், தனியன்களும் இடம் பெறும்.

சாத்துமுறையின் போது பூ ,வஸ்திரம் இல்லாமல் ஏழுமலையான் திருமேனியுடன் இருப்பார். முதலில் ஒரு தீபாராதனை எடுக்கப்படும். பிறகு தென் கலை சாத்து முறை சேவிக்கப்படும். பின்னர் நைவேத்தியம் செய்யபடும்.

அதன் பிறகு ஒரு தீபாராதனை செய்யப்படும். ஏழுமலையான் அந்த தீப ஒளியில் கண்ணைப் பறிக்கும் அழகோடு இருப்பார்

ஏழுமலையானின் ஆடைஅணிகலன்கள் 

ஏழுமலையான் உடை 21 முழு நிளமும் 6 கிலோ எடையும் கொண்ட பட்டுப் பீதாம்பரமாகும். இந்த ஆடையை கடையில் வாங்க முடியாது.

வாரத்தில் ஒரு முறை வெள்ளிக்கிழமை அன்று மட்டும் தான் வஸ்திரம் சாத்துவார்கள். இது மேல் சாத்து வஸ்திரம். பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு மூன்று வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

உள்சாத்து வஸ்திரம் இன்னும் அதிக பணம்  கட்டணமாக செலுத்த வேண்டும். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 15 வஸ்திரங்கள் சாத்துவதற்கு சமர்ப்பிக்கப்படும். பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு 10 வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

Thrilling mysteries of Tirupati,annaimadi.com,tirupati temple,Thrilling mysteries of tirupati balaji ,tirupati dharshan

பக்தர்கள் சமர்பிக்கும் வஸ்திரங்கள் தவிர அரசாங்கம் சமர்பிக்கும் சீர்வஸ்திரங்கள் ஆண்டுக்கு இரண்டு முறை சாத்தப்படுகிறது.

ஏழுமலையானின் நகைகளின் மதிப்பு ரூ. 1000 கோடிக்கு மேல் வரும்., இவருடைய நகைகளை வைக்க இடமும் இல்லை, சாத்துவதற்கு நேரமும் இல்லை. இதனால் ஆண்டிற்கு ஒரு முறை உபரியாக உள்ள நகைககளை ஏலம் விடுகிறார்கள்.

ஏழுமலையானின் சாளக்கிராம தங்கமாலை 12 கிலோ எடை, இதை சாத்துவதற்கு மூன்று அர்ச்சகர்கள் தேவை. சூரிய கடாரி 5 கிலோ எடை, பாதக்கவசம் 375 கிலோ. கோவிலில் இருக்கும் ஒற்றைக்கல் நீலம் உலகில் யாரிடமும் கிடையாது. இதன் மதிப்பு ரூ 100 கோடி.

மாமன்னர்களான இராசேந்திர சோழர்,  கிருஷ்ண தேவராயர், அச்சதராயர் போன்றோர் ஏழுமலையானுக்கு பல காணிக்கைகளையும், அறக்கட்டளைகளையும் செய்து அவற்றை கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் பொறித்துள்ளனர்.


Thrilling mysteries of Tirupati,annaimadi.com,tirupati temple,Thrilling mysteries of tirupati balaji ,tirupati dharshan

                                                             ஏழுமலையான் திருப்பாதங்கள்

திருப்பதி ஓவியங்கள் 300 ஆண்டுகள் பழமையானவை.

வெள்ளி கிழமைகளிலும் , மார்கழி மாத அர்ச்சனைக்கும்   வில்வ இலையை  அர்ச்சனைக்கு உபயோகப்படுத்தப்படுகிறது. 

சிவராத்திரி அன்று ஷேத்ர பாலிகா என்ற உற்சவம் நடைபெறுகிறது. அன்று உற்சவப்பெருமானுக்கு வைரத்தில் விபூதி நெற்றிப்பட்டை சாத்தப்பட்டு திருவீதி உலா நடைபெறுகிறது.

ஏழுமலையானின் ஸ்தல விருட்சகம் புளிய மரம்.

எந்த சாத்வீக, சாந்தமான தெய்வத்தின் திருவுருவச்சிலையிலும் கையில் ஒரு ஆயுதமும் இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருவுருவச்சிலையில் எந்த ஆயுதமும் கிடையாது. அவர் நிராயுதபாணி.

அதானால்தான் தமிழ் இலக்கியத்தில் நம் முன்னோர்களால் வெறுங்கை வேடன் என்று அழைக்கப்பட்டார்.

ஏழுமலையான் வாரத்தில் நான்கு நாட்கள் அம்பாளாகவும், 2 நாட்கள் விஷ்னுவாகவும், ஒரு நாள் சிவனாகவும் கருதப்பட்டு பூஜை நடைபெற்று வந்துள்ளது.

Thrilling mysteries of Tirupati,annaimadi.com,tirupati temple,Thrilling mysteries of tirupati balaji ,tirupati dharshan

திருலை திருக்கோவிலில் 1180 கல்வெட்டுக்கள் உள்ளன. இதில் 236 பல்லவ, சோழ, பாண்டியர் காலத்தவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *