இயற்கை நமக்கு கொடுத்துள்ள ஆன்மீக அணிகலன்களில் துளசி மாலை (Thulasi Malai) அதிக புனிதம் வாய்ந்ததாக போற்றப்படுகிறது . குறிப்பாக பஞ்சபூத மாலைகளில் இதுவும் அடங்கியுள்ளது.
சிவப்பு சந்தன மாலை, ருத்ராட்ச மாலை, துளசி மாலை(Thulasi Malai), ஸ்படிக மாலை, தாமரை மணி மாலை இவைகள் அனைத்தும் பஞ்ச பூதங்களுக்கு இணையானது என்று சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
துளசிச் செடியின் அடி பக்கத்தில் இருந்து எடுக்கக்கூடிய மரக்கட்டையில் இருந்து செய்யக் கூடியது தான் துளசி மாலை(Thulasi Malai).
துளசிச் செடியின் சின்ன சிறிய மரத் துண்டுகளை வைத்து தயாரிக்கப்படுவதே உண்மையான துளசி மாலை ஆகும்.
துளசி மாலையை அணியும் முறை
கடையில் இருந்து புதியதாக வாங்கி வரப்பட்ட துளசி மாலையை அப்படியே கழுத்தில் அணிந்து கொள்ளக் கூடாது. முதலில் மஞ்சள் தண்ணீரில் அதை நன்றாக ஊற வைக்கவேண்டும்.
மஞ்சளை தண்ணீரில் நன்றாக கரைத்துக் கொள்ளுங்கள்.
அதன் பின்பு துளசி மாலையை, இரண்டு மணிநேரம் அந்த மஞ்சள் தண்ணீரில் ஊறவைத்து, அதன் பின்பு நல்ல தண்ணீரில் போட்டு கழுவி, அதன் பின்பு உங்கள் வீட்டு பூஜை அறையில் பெருமாள் படத்திற்கு அல்லது மகாலட்சுமி படத்திற்கு சாத்திவிட்டு இறைவனை நன்றாக வேண்டிக் கொண்டு அதன் பின்பு துளசி மாலையை கழுத்தில் அணிந்து கொள்வது தான் சரியான முறை.
சிலர் இந்த மாலையை கழுத்தில் அணிந்து கொள்ளாமல் ஜபம் செய்வதற்கு மட்டுமே பயன்படுத்துவார்கள். அல்லது மந்திரத்தை உச்சரிக்க கணக்கு வைத்துக் கொள்வதற்காகவும் பயன்படுத்துவார்கள்.
கழுத்தில் அணிந்து கொள்வதற்காக வாங்கினாலும் சரி. ஜெபம் செய்வதற்காக வாங்கினாலும் சரி.
மேற்குறிப்பிட்ட முறையை செயல்முறை படுத்திய பின்புதான் துளசி மாலையை பயன்பாட்டிற்குக் கொண்டு வரவேண்டும்.
ஜபத்திற்காக எந்த ஒரு மாலையை பயன்படுத்தினாலும், நாம் ஜெபம் செய்யும்போது நம் கையில் அந்த மாலையை உருட்டும் போது, அது அடுத்தவர்களுடைய கண்ணிற்கு கட்டாயம் தெரியக்கூடாது.
பெண்களாக இருந்தால், தங்களுடைய முந்தானையில் ஜெபமணி மாலையை மறைத்துக்கொள்ள வேண்டும். ஆண்களாக இருந்தால் தங்களுடைய அங்கவஸ்திரத்தை கொண்டு மறைத்துக் கொண்டு தான் ஜெப மாலையை உருட்ட வேண்டும் என்பது சாஸ்திரம்.
துளசி மாலை அளிக்கும் அதிசய பலன்கள் (Benefits of using Thulasi Malai)
வைத்திருப்பதற்கும் வணங்கி அணிவதற்கும் துளசியை போன்றதொரு புனித தாவரத்தை நாம் காண முடியும். துளசியை போலவே, துளசி மாலையும் பெரும் முக்கியத்துவம் பெற்றது.
உங்கள் கழுத்திலோ அல்லது மணிகட்டிலோ நீங்கள் துளசி மாலையை அணிகிற போது அலாதியான ஒரு பாதுகாப்பு உணர்வு மேலெழும்.
இதை சற்று நவீன அறிவியலுடன் தொடர்பு படுத்தினால் துளசி மாலையை தொடர்ந்து அணிவதால், இன்றைய காலத்தின் மன அழுத்தங்களிலிருந்து விடுபட முடிகிறது என்கின்றனர்.
துளசி மாலையை ஏந்தியவாறு சொல்லப்படும் மந்திரம் “ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண ஹரே ஹரே, ஹரே ராம ஹரே ராம ஹரே ராம ஹரே ஹரே||
பார்ப்பதற்கு இது மிக எளிதான மந்திரமாக தோன்றினாலும் கலியுக பாபங்களிலிருந்து நமக்கு முக்தி அளிக்க கூடிய முக்கிய மந்திரம் இது என்கின்றனர் பெரியோர்.
இதிலிருக்கும் மற்றொரு முக்கிய அம்சம், இந்த சாதனா எளிமையாக இருக்கும்.
இந்த மாலையை கையில் வைத்திருக்கும் அல்லது அணிந்திருக்கும் எவரும் இந்த வித்தியாசத்தை உணர கூடும்.
அதாவது, அவர்கள் இந்த மாலையுடன் இருக்கும் போது, அவர்களின் கவனம் சிதறாமல் மிகவும் கவனத்துடன் பிரார்த்தனையில் வழிபாட்டில் இருக்கக்கூடும்.
அதுமட்டுமின்றி கையில் துளசி மாலையை வைத்தவாறே மந்திர உச்சாடனம் செய்வது நம்மை கிருஷ்ண பெருமானுக்கு மிக அருகில் எடுத்து செல்லும் வல்லமை கொண்டது என நம்புகின்றனர் பக்தர்கள்.
இந்த துளசி மாலையில் 108 மணிகள் இருப்பது வழக்கம். இந்த மணிகளை ஒவ்வொன்றாக நகர்த்தி மந்திரம் அல்லது ஸ்லோகம் சொல்கிற போது ஒலியின் சக்தி மிகுந்த ஆரா நம்மை சுற்றி உருவாகிறது.
இதன் மூலம் எளிமையாக நாம் தியான நிலைக்குள் சென்று விட முடியும். இத்தனை வல்லமைகளையும் பெற்ற துளசியை, துளசி மாலையை நாம் அனுதினமும் ஆராதித்து வர நம் சகல துன்பங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.
மேலும் வெறும் தண்ணீரை கூட புனித நீராக மாற்றும் துளசி நம் வாழ்வையும் அர்த்தம் மிகுந்ததாக மாற்றும்
பெருமாள் வழிபாட்டில் முக்கியமான ஒன்றாக இருப்பது துளசி இலை. இந்த இலையை தீர்த்தத்தில் போட்டு, துளசித் தீர்த்தமாகவும் தருவார்கள். இது தவிர துளசி மாலையை உடலில் அணிபவா்களும் உண்டு.
இந்த மாலையை நாம் அணிந்து கொண்டால் வெற்றி நம்மை தேடி வரும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.
இதோடு மட்டுமல்லாமல் இந்த துளசிமாலையானது நம்முடைய உடலின் குளிர்ச்சியையும், சூட்டையும் சம நிலையில் வைத்திருக்கும்.