சிறந்த தூக்கத்தை பெற உதவும் குறிப்புகள் (Tips to get better sleep)
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு ஆழ்ந்த தூக்கம் மிகவும் இன்றியமையாதது. ஒவ்வொருவரின் தூக்க முறைகளும் வித்தியாசம் வித்தியாசமாக இருக்கும். அதாவது சிலர் படுக்கைக்குச் சென்று சில நிமிடங்களுக்குள் உறங்கி விடுகிறார்கள். இன்னும் சிலர் படுக்கையில் அதிக நேரம் புரண்ட பின் தான், நல்ல உறக்கத்தை பெறுகிறார்கள். இவ்வாறு உறங்க முடியாமல் தவிப்பவர்களும் இலகுவில் உறங்க என்ன செய்யலாம் (Tips to get better sleep) என்பதைப் பற்றி பார்ப்போம்.
உடற்பயிற்சி (Tips to get better sleep)
உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு மட்டுமன்றி,நல்ல தூக்கத்தை பெறவும் உடற்பயிற்சி மிகவும் உதவுகின்றது. அதாவது ,பகலில் உடற்பயிற்சி செய்வது , இரவு நல்ல ஒரு தூக்கத்தைப் பெற (Tips to get better sleep) உதவும் .
பகலில் உடற்பயிற்சி செய்வதால் ,நரம்பு செல்கள் தயாரிக்கும் செரோடோனின் என்ற வேதிப்பொருளின் உற்பத்தியை அதிகரிக்கிறது.
மேலும் உடற்பயிற்சி செய்வது மன அழுத்தத்தைக் குறைக்கின்றது. இதனால் ஒரு சிறந்த இரவு தூக்கத்தை பெறமுடியும்.
உடற் பயிற்சி செய்ய முடியாதாவர்கள் தினமும் நடை பயிற்சி செய்யலாம். அல்லது விருப்பமான ஒரு விளையாட்டில் ஈடுபடலாம்.
மனத்திற்கு இனிய இசை
இனிமையான இசையை கேட்பது தேவையற்ற எண்ணங்களை நீக்கி, ஓய்வை அளித்து மனதை அமைதிப் படுத்துகிறது.நல்ல இசை ,விரைவான தூக்கத்திற்கும் அமைதியான தூக்கத்திற்கும் இது ஒரு சிறந்த வழியாகும்.
ஒவ்வொரு நாளும் இந்த இசையை நீங்கள் கேட்க விரும்பினால், ஒரு சிறிய அப்ளிகேஷனை(app) உங்கள் தொலைபேசியில் டவுன்லோட் செய்து வைத்துக் கொள்ளலாம்.
யோகாசனமும் தியானமும் (Tips to get better sleep)
தியானம் , யோகாசனப் பயிற்சிகள் பொதுவாக மன அழுத்தத்தை குறையச் செய்வன.மனம் இறுக்கம் இன்றி இருக்கும் போது, தூக்கம் மிக எளிதாக வந்து விடும்.
இந்த இரண்டும் மனதை அமைதிப்படுத்தி,தெளிவான சிந்தனைகளை கொடுக்கும் என்பதை நினைவில் கொள்ளவும்.
அன்றாடம் தியானம் செய்வதால் மனம் ஒரு நிலைப்படும். இதனால் நம்முடைய மனம் அமைதி பெறும். நல்ல தூக்கத்தை பெற்று ஆரோகியமாக வாழ தியானம் உதவுகின்றது.எ
தியானம் செய்கிற போதெல்லாம் மனத்தின் ஆற்றல் பெருகுகின்றது. இன்னும் சிறிது கவனமாகப் பயின்றால், தியானம் எளிதாகி விடும்.
உடலுக்கும் உள்ளத்திற்கும் பூரண ஓய்வு கொடுப்பது தியானமே. ஆழ்ந்த உறக்கம் கூட அவ்வகையான ஓய்வு கொடுப்பதில்லை. தியானத்தின் போது மூளை ஓய்வு பெறுகின்றது.
ஏனைய காரணிகள் (Tips to get better sleep)
நாம் தூங்கச் செல்லும்போது, உடலின் வெப்பநிலை தூக்கத்தை பெறுவதற்கு ஏற்ற மாதிரி மாறுகிறது. எனவே இரவில் எமது உடல் வெப்பநிலைக்கு ஏற்ற, உறங்கும் இடத்தின் வெப்பநிலை இருக்க வேண்டும்.அதாவது இரவில் குறைந்த வெப்பநிலை கொண்ட சூழலில் தூங்க வேண்டும்.
பகலின் விழித்திருக்க வெளிச்சம் உதவுவது போல் இரவில் உறங்குவதற்கு இருள் உதவுகிறது. இருட்டில் தான் நமது உடல் மெலடோனின் என்னும் தூக்கத்திற்குறிய ஹோர்மோனை உருவாக்குகிறது. அதாவது ,உறங்கும் இடம் இருட்டாக இருக்க வேண்டும்.
இரவில் தூங்குவதை பற்றி நினைத்தால், இரவு உணவைப் பற்றியும் சிந்திக்க வேண்டும். இரவில் உண்ணும் உணவு, உணவு உண்ணும் நேரம் போன்றவற்றிற்கும் தூக்கத்திற்கும் நெருங்கிய ய தொடர்பு இருக்கிறது.
இரவில் அதிக உணவை உட்கொள்வது, செரிமானத்திற்கு கடினமான உணவுகளை உண்பது , சோடா போன்ற காஃபினேட்டட் பானங்களை குடிப்பது, தூக்கத்திற்கு இடையூறாக விளைவிக்கும். சரியாக தூங்க முடியாமல் தவிக்க வேண்டி இருக்கும்.
இதனால் இரவில் இலகுவில் ஜீரணிக்க கூடிய உணவுகளை உண்பது மிகவும் நல்லது.
இரவு உணவு உண்டபின் குறைந்தது 2 மணி நேரத்திற்கு பின்,அதாவது உணவு ஜீரணமான பின் உறங்க செல்வது நல்ல தூக்கத்தை பெற உதவும்.
மகிழ்ச்சியான கனவுகள்
இது உறங்கிய பின் வரும் கனவு அல்ல. நீங்கள் தூங்கும் வரை மனதுக்கு பிடித்த ,மகிழ்ச்சியான ஒன்றைப் பற்றி கனவு காணுங்கள்.
மகிழ்ச்சியான காட்சியை கற்பனை செய்து பாருங்கள்.அதாவது விழித்திருக்கும் போது காணும் கனவுகள். இவை வேகமாக தூக்கத்தைக் கொடுக்கும் மற்றொரு சிறந்த வழியாகும்.