என்றும் பதினாறு போல் வாழ திரிகடுகம் (Tirikaṭukam)
சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்று பொருட்களாலான மருந்தே திரிகடுகம் (Tirikaṭukam) ஆகும். திரிகடுகம் கார்ப்பு சுவையானது.நுரையீரல், ஜீரண மண்டலப் பிரச்சனைகளைத் தீர்க்கவல்லது.
நெஞ்சு சளி, ஜலதோஷத்தை நீக்கும். நுரையீரல் மற்றும் ஜீரண மண்டல உறுப்புகளின் செயல்திறனைக் கூட்டும்.இந்த மருந்து, பல மருந்துகளுக்குத் துணைமருந்தாக பயன்படுத்துவது உண்டு.
சுக்கு, மிளகு, திப்பிலி இம்மூன்றும் கொண்டு மருத்துவம் செய்யப்படுகிறது. பழங்கால மருத்துவ வகையில் இவையும் ஒன்று.
தற்போது மலைவாழ் மக்கள் பயன்பாட்டில் உள்ளது என்றாலும், சித்த, ஆயுர்வேத மருந்துகள் தயாரிபில் இவற்றைப் பயன்படுத்துகிறார்கள்.
சாகாதிருக்கவே அனைவரும் ஆசைகொள்கின்றோம். மரணத்தைக் கண்டு அஞ்சாத மனிதர்களே இல்லை, மனிதன், பிறந்து,பிறவிப்பயனை அடைந்து, விருப்பப்படி வாழ வழிவகுத்துத் தரும் சாகாக்கலையை தமிழ்ச் சித்தர்கள் மட்டுமே கற்றுத் தந்திருக்கிறார்கள்.
அதற்காக, சித்தர்கள் கட்டிய மருந்தே திரிகடுகம் (Tirikaṭukam) என்னும் காயகற்பம்.
சுக்கு
உலர்ந்த இஞ்சி தான் சுக்காக மாறுகிறது. இஞ்சியின் சாறு அனைத்தும் உலர்ந்து போனதால் இவற்றில் சக்தி அதிகமாக இருக்கும். இதில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், நமது உடலின் ஜீரண உறுப்புகளுக்கு ஏற்ற அருமருந்தாகும்.
செரிமானம் செய்யக்கூடிய ஆற்றல் வாய்ந்தது.
திடமான உணவுகளை கூட எளிதாக மாற்றக்கூடிய சக்தி நார்ச்சத்து உள்ள காய், கிழங்கு, கீரை வகைகளுக்கு உண்டு. இதில் அதிக சக்தி பெற்றது சுக்கு. இதற்கு உரியவர் குரு பகவான்.
மிளகு
இந்தியாவின் கருப்பு வைரம் என்று வர்ணிக்கப்படும் பொருள் மிளகு. இவை மலைகளில் கொடி போல் படர்ந்து வளரக்கூடிய அதிக மருத்துவ குணம் கொண்டது.
சற்று காரமாக இருந்தாலும், இதன் மருத்துவ பயன்கள் அதிகம். நுரையீரலில் உள்ள அனைத்து விதமான பிரச்சினைகளுக்கும் தீர்வு காணக்கூடியவை.
சளிக்கும், ரத்த போக்கை நீக்குவதற்கும், கெட்ட கொழுப்பை கரைப்பதற்கும், குடல் புழுக்கள் நீங்குவதற்கும், விஷக்கடிகள் முறிவு செய்யவும், ரத்தத்தை சுத்தம் செய்யவும் இவை உதவும்.
திப்பிலி
சுக்கு-மிளகு என்பது எல்லோராலும் அன்றாடம் பயன்படுத்தப்படுவது. ஆனால் திப்பிலி என்றால் பலருக்கு தெரியாது. திப்பிலியை மருந்துக்கடைகளில் பெற்றுக் கொள்ளலாம்.
திப்பிலி என்பது ஒரு பொருளை குறிப்பிடும் சொல் அல்ல. மர சக்கை, பழத்தின் மேல் தோல், இலைச் சருகு, மரப்பட்டை, செடி கொடியின் வேர்கள் போன்ற மூலிகை அம்சங்களை கொண்டவை தான் திப்பிலி.
இவை நோய் தன்மைக்கு ஏற்றவாறு பல மூலப்பொருட்கள் சேர்த்து செய்யப்படும் மருந்தாகும். இவை உடலில் மேல் பூசப் படுவதற்கும், உடல் உள்ளே சாப்பிடுவதற்கும் ஏற்ற மருந்தாக தயாரிக்கப்படுகிறது.
நமது உடல் பயிற்சிகள் மூலம் எவ்விதமான நோய்கள் வராமல் பாதுகாக்க யோகாசனம் பெரும் உதவி செய்கிறது. எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க உதவும் ஒருவகை வைத்திய கலை இதுவாகும்.
உடலை பிணி, மூப்பு, திரை, நரை ஏற்படாமல் உடலை அழியாத கற்ப தேகமாக மாற்றும் வழிமுறைகளை நம்நாட்டுச் சித்தர்கள் பலர் அறிந்திருந்தார்கள். கற்பம் என்றால் ஊழிகாலம் வரை என்றுபொருள்.
உலகின் இறுதிக்காலம் வரை வாழவைக்கும் மருந்துகளே கற்பமருந்துகள். அவை சாவாமருந்துகள் என்றும் சொல்லப்படுகின்றன.
அவற்றை கண்டறிந்த சித்தர் பெருமக்கள், தாம்மட்டும் அறிந்ததைத் தனக்காக மட்டும் பயன்படுத்தியதல்லாமல் அவற்றை மற்றவரும் அறிந்துக்கொள்ள கருணையுடன் கூறியும் வைத்தனர்.
இவ்வாறு கற்பமாக உடலை மாற்ற இயற்கையில் கிடைக்கும் மூலிகைகளையே பெரும்பாலும் உபயோகித்தனர்.
காயம் என்பது உடலைக் குறிக்கும். சித்தி என்பது சாதனை. உடலைச் சிதையாதபடி நரை, திரை, மூப்பினின்றும் — முடிந்தால் இறப்பினின்றும் பாதுகாத்துக்கொள்ளும் சாகாக்கலையுடன் காயசித்தி தொடர்புடையது.
சாவுக்கு ஏதுவான உடலை காயகற்பங்கள் (Tirikaṭukam) மூலம் சாவை வெல்வதற்கு ஏதுவாக்கியது சித்தர்களின் அருஞ்சாதனை எனலாம்.
“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்”நோய்கள் வராமல் தடுத்து உடலை கல் போன்று நிலைக்க செய்ய பல்வேறு காய கற்பங்கள் சொல்லப்பட்டுள்ளது.
அவற்றுள் மிகவும் எளிதான காய கற்பம் காலையில் – இஞ்சி :காலையில் இஞ்சிச்சாறு அல்லது இஞ்சித்தேன் அல்லது இஞ்சி லேகியம் ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்றை உண்ண வேண்டும்நண்பகலில் – சுக்கு:நண்பகலில் சுக்கு மற்றும் கொத்துமல்லி கலந்த கொதிநீர் பருக வேண்டும்
இனப்பெருக்க உறுப்புகளின் கோளாறுகளை நீக்கும்.
மேலும் உடல் எடை கூடிய நோயாளிகள், அதிகக் கொழுப்பு சத்துள்ள நோயாளிகள், உடல் வீக்கம், வளர்சிதை மாற்றமுள்ள நோயாளிகளுக்கு இது தக்க துணைமருந்துகளோடு நன்றாக வேலை செய்யும்.
திரிகடுக சூரணத்தின்(Tirikaṭukam) சிறப்புகள்
கார்ப்பு சுவை உடைய இது உஷ்ண வீர்யம் உடையது. இருமலை மாற்றும், கபத்தைக் குறைக்கும், பசியை உண்டாக்கும், ஆண்மையை உண்டாக்கும், தாய்ப்பாலைச் சுரக்கச் செய்யும். சௌபாக்ய சுண்டி என்ற மருந்து இதனால் செய்யப்படுகிறது.
இது ருசியை அதிகரிக்கும், இலகு குணம் உடையது, மலத்தைப் பிரிப்பது. சுக்கை வெல்லத்துடன் சாப்பிட விக்கல் நிற்கும்.
சுக்குக் கஷாயம் இருமலைப் போக்கும், பசியை அதிகரிக்கச் செய்யும்.
சுக்கு சேர்த்துக் காய்ச்சப்பட்ட பால், தலைவலியைக் குறைக்கும்.வில்வத்துடன் சேர்த்துக் காய்ச்சினால் வாந்தியைப் போக்கும். சுக்கும், வெல்லமும், எள்ளும் இடித்துச் சாப்பிட மாதவிடாய் வலி மாறும்.
மருந்துகளில் உத்தமமானது சுக்கு என்று சுக்குக்கு ஒரு சிறப்பு உண்டு.
இஞ்சியை நன்கு காய வைத்தால், கிடைப்பதே சுக்கு.
குழந்தைகளுக்குச் சுக்கு நல்ல மருந்து. பிரசவ மருந்தாகவும் சுக்கு பயன்படும். மசக்கை நேரத்தில் இஞ்சியும், சுக்கும் குமட்டலைப் போக்கும் மருந்தாகப் பயன்படுகின்றன.
திரிகடுக காயகற்பத்தை(Tirikaṭukam) முறையாக உண்டு, உடம்பில் நோயிலிருந்து காத்து நீண்ட நாள் வாழ்வோம்.