எலும்புத் தேய்மானம் குணமாக உணவுகள் (To Cure Osteoporosis)

உணவினாலும் உடற்பயிற்சியாலும் எலும்புகளை வலிமையாக்கி தேய்மானம் அடையாது (To Cure Osteoporosis) பாதுகாப்போம்.

நமது எலும்புகள் கல்சியம், பாஸ்பரஸ் போன்ற கனிமங்களை சேமித்து வைக்கிறது. இவை நமது உடலை வலிமையுடன் வைத்திருக்க உதவுகின்றன. ஆனால் இளம் வயதிலேயே ஊட்டச்சத்து குறைபாடு, உடலை சரியாக கவனித்துக் கொள்ளாமை போன்ற பல காரணங்களால் எலும்புத் தேய்மானம் ஆகின்றது.

குறிப்பிட்ட வயதுக்கு மேல் எலும்புத் தேய்மானம்  (To Cure Osteoporosis) அடைவது இயல்பானது தான். ஆனால் நடுத்தர வயதில், இளவயதில் எலும்புகளில் தேய்மானம் ஏற்படுவதரகு காரணம் ஊட்டச்சத்து இல்லாத உணவுகள் மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை.

எலும்புகள் தான் நமது உடலை காக்கின்றன. இவற்றின் உதவியால் தான் நமது உடலை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு நகர்த்த முடிகிறது. அவை நம் மூளை, இதயம் மற்றும் பிற உறுப்புகளை காயத்திலிருந்து பாதுகாக்கிறது.

தாவர வகை புரோட்டீன்கள் ( Plant type proteins to Cure Osteoporosis)

முதுகெலும்பின் ஆரோக்கியத்திற்கு குறிப்பிட்ட தாவர வகை புரோட்டீன்கள் நல்லது. இந்த வகை புரோட்டீன்களானது இறைச்சிகளில் இருந்து கிடைக்கும் புரோட்டீனை விட மாறுபட்டவைகளாகும்.

எனவே முடிந்த வரை தாவர வகை புரோட்டீன்களை அதிகம் எடுக்க முயற்சி செய்யுங்கள். இறைச்சிகளில் இருந்து பெறப்படும் புரோட்டீன்கள் உடலினுள் அழற்சி/உட்காயங்களை உண்டாக்கும்.

எனவே சியா விதைகள், பருப்பு வகைகள் மற்றும் பீன்ஸ் போன்றவற்றை சாப்பிடுங்கள்.

இவற்றில் இருந்து புரோட்டீன் சத்து மட்டுமின்றி, இதர அத்தியாவசிய சத்துக்களான நார்ச்சத்து, ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், விற்றமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் போன்றவையும் உடலுக்கு கிடைக்கும்.

தாவர வகை புரோட்டீன்கள்,To Cure Osteoporosis, annaimadi.com,elumpu theimanam,எலும்பு தேய்மானம் சரியாக உணவுகள்,எலும்புதேய்மானம்,அன்னைமடி,plant proteins, proteins

ஒருவேளை இறைச்சி வகை புரோட்டீனை எடுக்க நினைத்தால், தோல் நீக்கப்பட்ட இறைச்சியைத் தேர்ந்தெடுங்கள். அதுவும் மாட்டிறைச்சி, பன்றி இறைச்சிக்கு பதிலாக சிக்கன் மற்றும் மீன் போன்றவற்றை சாப்பிடுங்கள்.

எலும்புத் தேய்மானத்தை தடுக்கும் உணவுகள் (Foods to Cure Osteoporosis)

அகத்திகீரை, முருங்கைகீரை, அரைக்கீரை, பசலைக்கீரை, கறிவேப்பிலை, தண்டுக்கீரை, குப்பைமேனி மற்றும் வெற்றிலையில் அதிகம் கல்சியம் உள்ளது.

தாவர வகை புரோட்டீன்கள்,To Cure Osteoporosis, annaimadi.com,elumpu theimanam,எலும்பு தேய்மானம் சரியாக உணவுகள்,எலும்புதேய்மானம்,அன்னைமடி,plant proteins, proteins

அதிக புரதம் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகள் உடலில் அமிலத்தன்மையை அதிகரிக்கும். அதனால் எலும்புகள் வலுவை இழக்கும். உணவில் சேரும் அதிகப்படியான உப்பும் எலும்பின் வலிமைக்கு எதிராக அமையும்.

பால் மற்றும் பால் பொருட்களில் கல்சியம் அதிகம் உள்ளது. குழந்தைகள் ஒரு நாளைக்கு குறைந்தது 400 மிலி. பால் அருந்த வேண்டும். வயதானவர்களுக்கு பால் அதிகம் ஜீரணமாவதில்லை.

கல்சியம் சத்துகள் நிறைந்த காய்கறிகள், கீரைகள் மற்றும் சிறு தானியங்களை உண்ணலாம். காய்கறிகளில் பீட்ரூட், வெண்டிக்காய், முருங்கைகாய், சுண்டைக்காய், தாமரைத்தண்டு போன்றவற்றில் கல்சியம் அபரிமிதமாக உள்ளது.

எள், கல்சியம் சத்துக்கள் நிறைந்தது. எனவே எள்ளை வெல்லம் உருண்டைகளாக செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். இரண்டு எள்ளு உருண்டையில் 1400 மி.கி. கல்சியம் உள்ளது.

எள்ளை பொடியாக செய்து உணவுடன் சாப்பிடலாம். தினமும் 5 பாதம் பருப்புகளை ஊறவைத்து அரைத்து, அதை பாலுடன் கலந்து  குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

கேழ்வரகில் பாலை விடை அதிக கல்சியம் உள்ளது. குழந்தைகளுக்கு கேழ்வரகு மாவில் முருங்கை கீரை கலந்து அடையாக செய்து கொடுக்கலாம்.

இது கல்சியம் சத்துள்ள முழுமையான சிற்றுண்டி. பெரியவர்கள் கஞ்சி அல்லது கூழாக செய்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

தாவர வகை புரோட்டீன்கள்,To Cure Osteoporosis, annaimadi.com,elumpu theimanam,எலும்பு தேய்மானம் சரியாக உணவுகள்,எலும்புதேய்மானம்,அன்னைமடி,plant proteins, proteins,ragi sweet puttu,ragi foods

எலும்புத் தேய்மானம் ஆகாமல் தவிர்க்க வேண்டிய அன்றாட பழக்க வழக்கங்கள்

(Daily routines to avoid osteoporosis)

எலும்பின் ஆரோக்கியத்திற்காக,என்னென்ன மாதிரியான விஷயங்களை உங்களுடைய அன்றாட வாழ்க்கை முறையில் இருந்து தவிர்க்க வேண்டும் என பார்ப்போம்.

​அளவுக்கு அதிகமாக உப்பு உட்கொள்ளுதல்

நீங்கள் உண்ணும் உணவில் அதிக அளவு உப்பு எடுத்து கொண்டால், உங்கள் உடலில் உள்ள கல்சியம் சத்து குறைந்து விடும். இதனால், உங்கள் எலும்புகளுக்கு பலம் கிடைக்காது.

ரொட்டி, சீஸ், சிப்ஸ் போன்ற உணவுகளில் அதிக அளவு உப்பு சேர்க்கப்பட்டு உள்ளது.

இதற்காக உப்பை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்பது இல்லை.

​ஒரே  நிலையில் அதிக நேரம் இருத்தல்

அலுவலக விழி நிமித்தம் அல்லது பொழுதுபோக்கிற்காக டிஜிட்டல் திரையின் முன் அதிக மணி நேரம் செலவிடுவது மிகவும் எளிதானது.

இதனால், உங்கள் உடலுக்கு போதுமான வேலைகள் கொடுக்க முடியாது. உடற்பயிற்சி போன்ற வேலைகள் தான் நம்மையும் நமது எலும்பையும் வலிமையாக்குகிறது.

நமது உடலின் ஒட்டு மொத்த எடையும் சுமப்பது நமது கால்கள் தான். அதற்கு உதவுவது கால்களில் உள்ள எலும்புகள். இவற்றை காக்க நாம் அன்றாட வாழ்வில் உடற்பயற்சி போன்ற செயல்களை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்.தாவர வகை புரோட்டீன்கள்,To Cure Osteoporosis, annaimadi.com,elumpu theimanam,எலும்பு தேய்மானம் சரியாக உணவுகள்,எலும்புதேய்மானம்,அன்னைமடி,plant proteins, proteins,ragi sweet puttu,ragi foods     

 எலும்புகளை வலிமையாக்க

உதாரணத்திற்கு, டென்னிஸ், ஹக்கிங், நடனம், மற்றும் நீச்சல் ,தண்ணீர் எதிர்ப்பு பயிற்சிகள் உங்கள் எலும்புகளை வலுவாக்க உதவுகிறது.

நமது உடலின் இயக்கத்திற்கு விற்றமின் டி தேவையான ஒன்றாகும். இதனை நாம் சூரிய ஒளியில் இருந்து பெறலாம்.

வெறும் 10-15 நிமிடங்கள் என்ற கணக்கில் வாரம் தோறும் பல முறை நடைப்பயிற்சி, ஒட்டப்பயிற்சி போன்றவற்றின் முலம் அதை நாம் பெற முடியும்.

செறிவூட்டப்பட்ட தானியங்கள், பழச்சாறுகள், மற்றும் பால்சார்ந்த பொருட்கள் ,பாதாம், சோயா, அரிசி, அல்லது பிற தாவர சார்ந்த பொருட்கள், அத்துடன் குறைந்த கொழுப்புள்ள பால்பண்ணை பொருட்கள் போன்றவற்றை உங்கள் உணவில் சேர்க்கவும்.

அளவுக்கு அதிகமாக ​சில பானங்களை பருகுதல்

சாப்ட் ட்ரிங்க்ஸ் (soft drinks ) எனப்படும் கோலா வகை பானங்களை எடுத்து கொள்ளும் போது உங்கள் எலும்புகள் பலவீனப்படும்.

சில நிபுணர்கள், இந்த பானங்களில் உள்ள காஃபின் மற்றும் பாஸ்பரஸ் இரண்டும் சேர்ந்து தான் எலும்பு இழப்பை ஏற்படுத்துகின்றன என்று கண்டுபிடித்து உள்ளனர்.

அதேயே நேரத்தில், அதிக அளவு காபி அல்லது தேநீர் குடிப்பதும் கூட உங்கள் எலும்புகளில் உள்ள கல்சியத்தை குறைத்து விடும் என்பதும் உண்மை தான்.

​அதிகமான மருந்து மாத்திரை பாவனை

சில மருந்துகளை  நீண்ட காலம் எடுத்துக்கொள்ளும் போது ,உங்கள் எலும்புகளில் இவை கட்டாயமாக எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும்.

சில வலிப்பு எதிர்ப்பு மருந்துகளும் எலும்பு இழப்பை ஏற்படுத்தலாம்.

Leave a Reply

Your email address will not be published.