இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க (To keep the heart healthy)

புகைப்பிடித்தல், உயர் ரத்த அழுத்தம், அதிக உடல் எடை, போதிய உடற் பயிற்சி செய்யாமை, சர்க்கரை வியாதி போன்றவற்றால் ஏற்படும் மாரடைப்பை கட்டுப்படுத்தி, இதயதத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க (To keep the heart healthy) எம்மால் முடியும்.

ஆரோக்கியத்துக்கு கெடுதலான துரித உணவு பழக்கம்(Fast food), அதிக நேரபணி, இதனால் ஏற்படும் ஓய்வின்மை, குடும்பத்தில் ஏற்படும் குழப்பங்கள் போன்ற காரணிகள், இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது.

புகை பிடிப்பவர்கள் மட்டுமன்றி , வெளியிடும் புகையினால் அருகில் உள்ளவர்களும் பாதிக்கப்படுகின்றனர். உடல் பருமன், சர்க்கரை நோய் ஆகியவற்றால் இதய நோய் ஏற்படலாம். சர்க்கரை நோயால் இதயத்துக்கு செல்லும் ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்பட்டும்  மாரடைப்பு ஏற்படலாம்.

வயது, பரம்பரையாக வரும் மரபணுத் தன்மை, இது தவிர ரத்தக் குழாயில் எவ்வித அடைப்பு ஏற்படாமலும்  மாரடைப்பு வரலாம். உலகிலேயே இதய நோய்களால் தான் அதிக உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதய நோய்கள் குறித்தும், இருதயத்தை பாதுகாப்பது எப்படி என்பது பற்றியும் விழிப்புணர்வு நம்மில் ஏற்பட  வேண்டும்.அப்போது தான் நம்மையும் நம்மைச் சூழ உள்ளவர்களையும் மாரடைப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும்.

 இதய நோய்கள் வராமல் எப்படி தவிர்ப்பது

புகை பிடிப்பவர்களாயின் முதலில் அதை குறைக்க பழகி, முற்றாக  நிறுத்த வேண்டும்.மதுப்பழக்கத்தை யும் விட வேண்டும். 
உணவில் உப்பை  அளவாக பயன்படுத்துதல் வேண்டும்.உப்பு  ரத்தக் கொதிப்பு அதிகரிக்கும். இதனால் இதய நோய்  ஏற்படும் வாய்ப்பு கூடுகிறது.
கொலஸ்ட்ரால், சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்றவற்றை இரத்தத்ததில் சீராக வைத்திருக்க வேண்டும்.

யோகா மற்றும் தியானம் செய்வது நல்லது. தினமும் குறைந்தது 30 நிமிடமாவது உங்களுக்காக  உடற்பயிற்சி செய்வது அவசியம். இதன் மூலம் உடல் எடையையும்  சீராக பேணலாம்.

சீரான உடற்பயிற்சி, சரியான உணவு பழக்கம், உரிய முறையில் மருத்துவம்  (To keep the heart healthy) எடுத்துக்கொள்வது இருதய நோயில் இருந்து பாதுகாக்கும்.

to keep the heart healthy,idaya mudra,annaimadi.com,yoga,control sugar level,no alchocol,good exercise

லிப்டுகளைத்  தவிர்த்து ,மாடிப்படிகளை பயன்படுத்த வேண்டும்.

ஒரு நாளுக்கு சராசரி 10 ஆயிரம் அடிகள் நடக்க வேண்டும்.
காய்கறிகள், பழங்களை அதிகம் உண்ண வேண்டும்.

கொழுப்பு இல்லாத இறைச்சி, மீன், பருப்பு வகைகள், ஒலிவ் எண்ணெய், சோளம், சூரியகாந்தி எண்ணெய் ஆகியன, இதயத்தைப் பாதுகாக்கின்றன.

நகைச்சுவை உணர்வு ,சிரிக்கும் பழக்கத்தை அதிகரித்துக்  கொள்வதும், இதய நோயில் இருந்து விடுவிக்கும்  சிறந்த மருந்து.

இதயத்தசையில்  பலவீனம

இதயம் ஒரு தானியங்கி தசை. இதயம் தானாக சுருங்கி விரியும் தன்மை கொண்டது. ஒவ்வொரு முறை சுருங்கி விரியும் போதும்  ரத்தத்தை உடல் உறுப்புக்களுக்கு அனுப்பி வைக்கும்.இருதயம் சுருங்கி விரிய தேவையான சத்து, அதற்கு மேலுள்ள தமனிகளில் வரும் ரத்தத்தின் மூலம் கிடைக்கிறது.

இந்த  தமனிகளில் ஏற்படும் அடைப்பு இதயத்திற்கு தேவையான சத்து கிடைக்காமல் தடுக்கிறது .இதனால் இதயத் தசையில்  பலவீனம் ஏற்படுகிறது. நடக்கும் போதும், படுக்கும் போதும் மூச்சிரைப்பு, பலவீனத்தை உணர்கின்றோம். இதயத் தசை பலவீனம் அதிகரித்த  நிலைமையில் கால்களில் வீக்கம் ஏற்படும். பைபாஸ்(By-pass) அறுவை சிகிச்சை, தமனிகளில் ஏற்படும் அடைப்பை மூலம் சரி செய்கிறது. இதனால் இருதயத் தசை ,தனக்கு தேவையான இரத்தத்தை மீண்டும் சீராக பெறுகிறது. இதய தசை பலம் அடைகிறது.

to keep the heart health,annaimadi.com,lose weight,weight loss,regular exercise,natural food,idaya mudra

திடீர் மாரடைப்பு  ஏற்படுவதற்கு முக்கிய காரணங்கள்

அதிகமான கொழுப்புச்சத்து நிறைந்த உணவு உட்கொள்ளல்

ரத்த அழுத்தம், சர்க்கரையளவை  கட்டுப்பாட்டில் இல்லாதிருத்தல்

ரத்தக் கொதிப்பு, சர்க்கரை வியாதி, உடல் பருமன், பரம்பரை மற்றும் நுண் கிருமி போன்றவற்றால் இதயத்தசை பாதிப்படைதல்

சிகரெட் மற்றும் மதுப்பழக்கம்

அளவுக்கதிகமான டென்ஷன, சரியான ஓய்வின்மை 

வேலைப்பளு, சரியான நேரத்தில் உணவு ,உறக்கம்  இல்லாமல் இருப்பது

உடற்பயிற்சி குறைவு

இக்காரணங்களை கருத்தில் கொண்டு,அவற்றை முடிந்தளவு தவிர்க்க வேண்டும். 40 வயது வந்தவர்கள் கட்டாயமாக ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்து கொல்வதும்  திடீர் மாரடைப்பைத்  தடுக்க உதவியாக இருக்கும்.

To keep the heart healthy,yoga,annaimadi.com,natural food,regular exercise,idaya mudra,no tension,rest & relax,no smoking,heart rate monotorCheck Price

மாரடைப்பிற்கான அறிகுறிகள்

இதற்கு காரணம் திடீரென முழுமையாக அடைபடும் அளவிற்கு இருதயத்தின் ரத்தக் குழாயில் ஏற்படும் கடுமையான இறுக்கம். இது கட்டுப்படுத்த முடியாத காரணங்களாகும்.

நெஞ்சுவலியுடன் மூச்சுவிடுவதில் சிரமம் 

ஒருவிதமான இறுக்கம்

அதிகமாக வியர்த்தல்

குமட்டல், மயக்கம் வருவது போன்ற உணர்வு

மார்பின் முன் பகுதியிலோ அல்லது நெஞ்சுக் கூட்டின் பின்புறமாக வலி இருக்கலாம்.இங்கிருந்து வலி கழுத்திற்கோ அல்லது இடது கைக்கோ பரவலாம்.

வாந்தி, இருமல், படபடப்பு மற்றும் 20 நிமிடங்களுக்கு மேல் தொடரும் வலி, தீவிர நிலையில் ரத்த அழுத்தம் குறைவதால் மாரடைப்பு ஏற்பட்டு இறப்பு ஏற்படுகிறது.

மாரடைப்பு வருவதற்கான எச்சரிக்கை அறிகுறி எல்லோருக்கும் ஒரேவிதமாக இருப்பதில்லை. பொதுவாக மாரடைப்பு வரும் போது முதலில் மெதுவாக நெஞ்சுவலியுடனோ அல்லது நெஞ்சில் ஒருவித கனமான இறுக்கத்துடனோ ஆரம்பிகும்.பின்னர் அவ்வலி படிப்படியாக அதிகரித்து செல்லும்.

to keep the heart healthy,control diabetes,blood pressre,lose weight,idaya mudra,yoga

இதய நோயின்றி ஆரோக்கியமாக வாழ..

ஆரோக்கியமான உணவு  பழக்க வழக்கங்களை கடைப்பிடிப்போம். செயற்கை உணவை தவிர்த்து இயற்கையான பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் உண்போம்.

குழந்தைகளுக்கும் இதே உணவு முறைகளை  பழக்குவோம்.

புகைபிடித்தலை முற்றிலும் தவிர்ப்போம்.

தினந்தோறும் உடற்பயிற்சி, யோகாசனம் அல்லது விளையாட்டிற்கு குறைந்தது அரைமணி நேரமாவது ஒதுக்குவோம்.

இதய நோய் காரணிகளான சர்க்கரைநோய், ரத்த அழுத்தம், கெட்ட கொழுப்பு, உடல் பருமன் ஆகியவற்றை கண்டறிவோம் (To keep the heart healthy). முறையான சிகிச்சை பெறுவோம்.

இவற்றை கடைபிடியுங்கள். இதய நோய் மட்டுமல்ல, வேறு எந்த நோயும் நெருங்கவே நெருங்காது!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *