உடல் பருமன் குறைய …. (to lose weight )

இன்றைய காலகட்டத்தில் ஆண்கள்,பெண்கள், குழந்தைகள் என எல்லோருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்பது உடல் பருமன் (Obesity) அல்லது ஊளைச்சதை.இதற்கு முக்கியக் காரணம் பணியிடத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது,வீட்டுச் சாப்பாடு இல்லாமல் வெளியிடங்களில் சாப்பிடுவது ,அதிகநேரம் தொலைக்காட்சி முன்பு அமர்வது, பகலில் அதிக நேரம் தூங்குவது போன்ற பழக்கங்களாகும்.

பெண்களைப் பொறுத்தவரை உடல் உழைப்பு குறைந்து போனது மட்டுமின்றி போதுமான சத்தான உணவு இல்லாததும் ஒரு காரணமாக இருக்கிறது.இது போன்றவர்கள் எளிய வழியில்

உடல் பருமனைக் (Obesity) குறைப்பது எப்படி? 

இதோ சில வழிகள்

  • சாதாரணமாகத் தண்ணீர் குடிப்பதற்குப் பதிலாக சீரகம் கலந்த தண்ணீர் பருகி வந்தால் உடம்பில் உள்ள ஊளைச்சதை குறையும்.உடல் மெலிந்து  அழகிய தோற்றம்  பெறும்.
  • சாப்பிடும் உணவில் பூண்டு, வெங்காயம், அதிகமாக சேர்த்து வந்தால் உடலில் உள்ள தேவையற்றக் கொழுப்புகளைக் குறைத்து உடலிற்கு புத்துணர்ச்சி தரும்.
  • பப்பாளிக்காயைச் சமைத்து உண்டு வந்தால் உடல் மெலியும்.
  • அமுக்கிரா கிழங்கு வேர் , (Ashwagandha Root) ,பெருஞ்சீரகம் சேர்த்து பாலில் காய்ச்சி குடித்து வந்தால் உடல் எடை குறையும்.

அதோடு சரியான முறையில் சாப்பிட்டால் 80% கொழுப்பை நிச்சயம் குறைக்க முடியும். ஆரோக்கியமான மற்றும் சீரான உணவு முறையை பின்பற்றும் போது இதை நாம் சாதிக்க முடியும்.

to loose weight,,Digestive System,complete pack for weight loss,annimadi.comCheck price

தேவையான அளவு  ஊட்டச் சத்துக்கள் நிரந்ந்த உணவை சாப்பிட்டால் கொழுப்பை குறைக்க முடியும். இடை உணவுகள், துரித உணவுகள் ஆகிய கடைகளில் வாங்கும் உணவுகளை அறவே தவிர்க்கவும்.

இடைப்பசிக்கு பழங்கள்,சமைக்காது சாப்பிடக் கூடிய காய்கறிகளான கரட்,வெண்டிக்காய்ப்பிஞ்சு, வெள்ளரிக்காய், தக்காளி போன்றவற்றை சிறிய துண்டுளாக வெட்டி வைத்துக் கொள்ளலாம்.

உங்கள் உணவுகளை வீட்டில் சமைத்து  உண்டால், எளிதாக உங்கள் உடலை, அழகான மெலிதான உடலாக மாற்றமுடியும்.

உடல் எடையை குறைக்கும் உணவுமுறைகள் இந்த புத்தகத்தில் உள்ளது. ( The Obesity Code Cookbook )

இயற்கையான காய்கறிகள் மற்றும் பழங்கள், வேக வைத்த உணவு வகைகளை தேர்ந்தெடுத்து உண்ணுங்கள்.

சிலர் பசிக்கும் போது உணவை உட்கொள்ளாமல் நேரம் கிடைக்கும் போது அதிக உணவை உண்டு எடையை தங்களை அறியாமலேயே அதிகப்படுத்திக் கொள்கின்றனர். அல்லது கொழுப்புச்சத்து அதிகம் உள்ள உணவை பசியில் விரைந்து உண்கின்றனர். இது மிகத் தவறு.

 

பொதுவாக நமக்கு கடைகளில் கிடைக்கும் சர்க்கரையை  குறைப்பது நல்லது. நாம் தினமும் உண்ணும் உணவில் சர்க்கரை நிறைய அளவு ஒளிந்திருக்கும். இதை உணர்ந்து நாம் உண்ணும் உணவில் சர்க்கரையை குறைப்பது நல்லது.

இதற்கு பதிலாக இயற்கையான தேன்,பனங்கற்கண்டு (Natural Palm Sugar Jaggery) மற்றும் அதிமதுரச்சாறு (Licorice Root | Herbal Supplement) ஆகியவற்றை பயன்படுத்தலாம்.

பூண்டு, வெங்காயம், இஞ்சி, சிவப்பு மிளகு, கோஸ், தக்காளி, மற்றும் இலவங்கப்பட்டை, கடுகு, கிராம்பு ஆகியவையும் கொழுப்பை கரைக்க உதவுகின்றன.

வெதுவெதுப்பான தண்ணீரில் கொஞ்சம் எலுமிச்சை சாறு மற்றும் தேனை கலந்து, காலையில் வெறும் வயிற்றில் அருந்துவதும் மிகப் பிரபலமான உடல் எடையை குறைக்கும் வழியாக பின்பற்றப்படுகின்றது.

பசிக்கும் போது கட்டாயம் சாப்பிட வேண்டும்.பசிக்காத போது எதையும் உண்பதைத் தவிர்த்து விடுங்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *