உணவுக் கட்டுப்பாட்டினை வெற்றிகரமாக்க (To make dieting successful)

பலரும் தற்போது உடல் பருமனை குறைப்பதற்கு ஆர்வம் காட்டுகின்றனர் ஆனால் அதை சரியான முறையில் (To make dieting successful) பின்பறினால் தான் உங்களுக்கு வெற்றி கிட்டும்.

அதனால் டயட் இருப்பதற்கு முன் கவனிக்க வேண்டிய  சில விடயங்கள் பற்றி தெரிந்து கொள்வது மிக அவசியம்.

முதலில் நீங்கள் உண்மையில் டயட் இருப்பது அவசியமானதா என்பதை பற்றி அறிந்து கொள்ள வேண்டும். அதற்கு உங்கள் எடை உயரம் போன்றவற்றை வைத்து BMI எண் என்னவென்று அறிந்து கொள்ளுங்கள்.

BMI அட்டவணை

உடல் நிறை குறியீட்டெண் (body mass index (BMI), பிஎம்ஐ) என்பது ஒருவருடைய எடையையும் உயரத்தையும் ஒப்பிடுகின்ற சராசரியாக்க அளவீடாகும். ஒருவருடைய உயரத்தின் அடிப்படையில் ஆரோக்கியமான உடல் எடையை மதிப்பிடுவதற்குப் பயன்படுத்தப்படுகிறது. இது பொதுவாக உடற் கொழுப்பு விகிதத்தை அளவில்லை எனினும், 

இதனுடைய சுலபமான அளவீடு மற்றும் கணக்கீட்டின் காரணமாக, மக்களிடையே உள்ள எடை குறித்த பிரச்சினைகளை அளவிடுவதற்கான கருவியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

நீங்கள் எந்த பகுதியில் இருக்கிறீர்கள் என பார்த்து,டயட்  உங்கள் உடலுக்கு தேவையா இல்லையா என முடிவு செய்யுங்கள்.

உதாரணத்திற்கு  50 kg நிறையும்  , 160 cm உயரமும் கொண்ட ஒருவரின்  BMI எண்19.பச்சை நிற பகுதியில்(Normal zone) உள்ளது. green signal. நீங்கள் டயட்  செய்ய தேவை இல்லை.

 

To make successful diet,weight loss,annaimadi.com,lose weight,fit body,BMI maintain

230 lbs  நிறையும் 5’2”  உயரமும் கொண்ட ஒருவரின் BMI  எண்42 . இது  சிவப்பு நிற பகுதியில்(Clinically Obese zone) உள்ளது. Red signal. அந்நபர்  கட்டாயம்  டயட் செய்யவேண்டும். மருத்துவ அல்லது உணவுக்கட்டுப்பாட்டு  நிபுணர் ஒருவரின் உதவியுடன் செய்வது நல்லது.

முக்கியமாக  தேவை இருந்தால் மட்டுமே டயட்  செய்யவும். மற்றவர்கள் செய்வதால் நானும் செய்யவேண்டும் என்கிற விடயம் அல்ல இது.இதனால் உடல் ஆரோக்கியம் கெட வாய்ப்புகள் அதிகம். உடற் பாதிப்பு ஏற்படும்.

To make successful diet,weight loss,annaimadi.com,lose weight,fit body,BMI maintain

நீங்கள் அதிக பருமனை கொண்டவராயின் தினமும் உடற்பயிற்சி செய்வது நல்லது. பருமனாக இருப்பதால் டயட் இருக்க வேண்டுமென நினைக்கின்றனர். இது தவறு. தினசரி நமக்கு கலோரி தேவை போலவே போஷாக்கும்  வேண்டும். அதனால் டயட் இருக்க விரும்புவோர் BMI அட்டவணையை பார்த்து தனது எடையில் தேவையான அளவு மாத்திரம் குறைத்துக்கொள்வது சிறந்தது.

அதிக உடல் எடை உள்ளவரானால், நிச்சயமாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

பாலூட்டும் தாய், ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளவர்கள் , கருத்தரிக்கவுள்ள பெண்கள், நோயாளிகள் உணவுக் கட்டுப்பாட்டில்   இருக்க கூடாது.

To make successful diet,weight loss,annaimadi.com,lose weight,fit body

Check price

வெளியில் உணவு அருந்துவதை தவிர்த்துக் கொள்ளவும்

நண்பர்களுடன் வெளியே செல்லும் சந்தர்ப்பங்களில் சாலட், நீர், பிரெஷ் ஜூஸ் போன்றவற்றை சாப்பிட்டு கொள்வது நல்லது.அப்படி இல்லாமல் உணவுக்  கட்டுப்பாட்டை மறந்து செயற்பட்டால், திரும்பவும் ஆரம்பத்தில் இருந்து செய்ய வேண்டும். தற்காலிகமாக நண்பர்களுடன் வெளியே செல்வதை தவிர்த்துக்கொள்வது நல்லது.

டயட்டிங் என்பது உடலுக்கும் தோற்றத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் நல்லதென்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். Fast food, BURGER  ,PIZZA போன்ற அதிக கலோரி கொண்ட உணவுகளை முற்றாக தவிர்க்க வேண்டும். ஆனால் அதனை எண்ணி  குறைந்த கலோரி உள்ள  உணவுவை மட்டும்  எடுத்துக் கொள்ள வேண்டாம். அது உடலுக்கு கேடு விளைவிக்கும். ஒரு நாளுக்கு தேவையான அளவு கலோரியை பெற்றால் போதுமானது.

விரும்பினால் , கிழமைக்கு ஒரு முறை தான் விரும்பிய உணவை சிறிதளவு சாப்பிடுவது தவறல்ல. அது உடம்பிலுள்ள METABOLISM பெறுமானத்தை சீராக பேணிக்கொள்ளும்.

உணவுக்கட்டுப்பாட்டுடன் உடற்பயிற்சியும்

டயட் இருக்கும்போது உணவில்  கவனம் செலுத்துவதோடு உடற்பயிற்சிக்கும் ஒரு நாளுக்கு அரை மணிநேரம் ஒதுக்குங்கள்.

இதனால் உங்கள் இலக்கை விரைவில் (To make dieting successful) எட்டமுடியும். காலையில் அல்லது மாலையில்  செய்வது சிறந்தது.

நேரம் கிடைக்கும் போது செய்வதாயின் சாப்பிட்டு 2 மணி நேரத்தின் பின்னர் செய்யலாம். சாதாரண நாட்களிலும்  30 நிமிடநேர உடற்பயிற்சி  தினமும் செய்வது உடம்பின் ஆரோக்கியத்தை பேணும்.

மற்றவரின் மாற்றுக்கருத்து

சூழவுள்ள குற்றம் குறை காணும் மனிதர்களின் கருத்துக்கள் பாதிப்பைக் கொடுக்கலாம்.” வாலிப பிள்ளைக்கு அந்த அளவு உணவு ,வேண்டாத வேலை,வருத்தங்களை வரவைக்கப் போகிறாய், எவ்வளவு சாப்பிடுவாய், பசிக்க போகுது”, இப்படி இன்னும் பல.

இவ்வாறான கருத்துக்களை காதில் வாங்கிக்கொள்ளாமல் டயட் திட்டத்தை பின்பற்றி (To make dieting successful), செய்து முடியுங்கள்.

கட்டுப்பாடு, விருப்பம், உறுதி போன்றவை இருந்தால் மட்டுமே வெற்றியை பெறமுடியும்.

உண்ணும் உணவைப்பற்றிய அறிவு

கட்டாயம் தான் உண்ணும் உணவைப்பற்றி அறிந்திருப்பது அவசியம். அடுத்தது தினசரி உணவிற்கான அட்டவணையை  குறித்து  வைத்திருப்பது  மிக நல்லது.

அதுமட்டுமின்றி இப்பொழுதெல்லாம் அதிகமான டயட் ஆப்ஸ்கள் (Diet apps) நமக்கு உதவுகின்றன. டயட்டிலுள்ள ஒருவர் முதலில் தான் வழமையாக உண்ணும் உணவில் பாதியை குறைத்துக்கொள்ள வேண்டும்.

அடுத்தது தான் எவ்வாறு உணவு உட்கொண்டால் எதிர்பார்த்த நிறையை எவ்வளவு காலங்களில் அடைய முடியுமென்பதை பற்றிய அறிவை பெறவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *