இளமை நீடிக்க செய்யும் நெல்லிக்காய் (To prolong youth)
நெல்லிக்கனிகளை அதிகம் சாப்பிட்டு வருபவர்களுக்கு தோலில் உள்ள செல்கள் புத்துணர்வு பெற்று, ரத்த ஓட்டத்தை நன்கு தூண்டி தோலில் சுருக்கங்கங்கள் போன்றவை ஏற்படுவதை தடுத்து, இளமையான தோற்றத்தை நீட்டிக்க (To prolong youth) செய்கிறது.
இதில் நிறைந்திருக்கும் விற்றமின் சி (Vitamin C) சருமத்திற்கு இலகுவான தன்மையை தருவதோடு தோல் புற்று நோய்கள் ஏற்படாமலும் காக்கிறது.
குறைந்த பட்சம் வாரத்திற்கு ஒரு முறை நெல்லிக்காய் சாப்பிடுவதால் முகப்பொலிவு, பளப்பான சருமம் ஆகியவற்றை பெறலாம்.
நம்முடைய உடலில் முக்கியமான உறுப்பு கண்கள். நெல்லிக்காய்களில் பல வகையான விற்றமின் சத்துகள் உள்ளன. குறிப்பாக நெல்லிக்காயில் விற்றமின் ஏ சத்து அதிகம் நிறைந்துள்ளது.
இந்த விற்றமின் ஏ கண்களில் விழி படலங்களில் ஏற்படும் அழுத்தங்களை குறைத்து எதிர்காலங்களில் கண்புரை, கண் அழுத்தம் போன்ற குறைபாடுகள் ஏற்படாமல் காக்கிறது.
இதை அடிக்கடி உண்பவர்களுக்கு வயதாவதால் (To prolong youth) ஏற்படும் கண்பார்வை குறைபாடுகள் போன்றவையும் நீங்கும். கண்பார்வை தெளிவும் ஏற்படுகிறது.
நெல்லிக்காயை எப்பிடி உணவில் சேர்க்கலாம்
நெல்லிக்காய் சாதம், நெல்லிக்காய் மிட்டாய், நெல்லிக்காய் துவையல், நெல்லிக்காய் ஜூஸ், போன்றவற்றை செய்து சாப்பிடலாம்.குழந்தைகளும் விரும்பி உண்பார்கள்.
ஆனால் நெல்லிக்காய் அப்படியே சாப்பிடுவது இன்னும் சிறந்தது.
