முகச்சுருக்கம் நீக்க இலகுவான முறை (To remove face wrinkles)

வயது அதிகரிக்க தொடங்கினால், தோல் தளர்ந்து, தொங்கிப்போய் சுருக்கங்கள் (To remove face wrinkles) ஏற்பட தொடங்கும்.தோலில் சுருக்கங்கள் ஏற்பட முதலே சரும பராமரிப்பு மூலம் அதனைத் தடுத்து விடுதல் நல்லது. இலையேல் அது உங்களை வயதானவர் போன்ற தோற்றத்தை ஏற்படுத்திவிடும்.

இதனால் நீங்கள் இளம் வயதாக இருந்தாலும் கூட உங்களது முகத்தில் உள்ள சுருக்கங்கள் உங்களை வயதானவர்களாக காட்டும். 
உங்களது உண்மைத் தோற்றத்தையே அது மாற்றிவிடும். உங்களது முக அழகை குறைத்துக் காட்டும்.முகத்தில் தோல் சுருங்குவதை யாரும் விரும்பமாட்டார்கள்.
இந்த முக சுருக்கங்களை  இயற்கைபொருட்களைப்  பயன்படுத்தி போக்கும் ,சில முறைகளைப் பார்ப்போம். இந்த இயற்கை பொருட்கள் ,சருமத்திற்கு நல்ல  ஊட்டச்சத்துக்களை வழங்குவதன் மூலம்  முகத்தில் உள்ள சுருக்கங்களை குறைக்கும்.

இதனை சரிபடுத்த அழகு நிலையங்கள் சென்று சருமத்தை  கெடுத்து கொள்வதை விட வீட்டிலேயே இலகுவான  முறையில்  முகச்சுருக்கத்தை எப்படி அகற்றலாம் எனப் பார்ப்போம்.

இவை  இலகுவானது, எந்தக்கெடுதலும் இல்லாதது.

முகச்சுருக்கம் நீங்க ஒலிவ் எண்ணெய் (To remove face wrinkles)

ஒலிவ் எண்ணெய்  – 2 தேக்கரண்டிகள்

எலுமிச்சை சாறு  – 1 தேக்கரண்டி 

கடல் உப்பு  – ஒரு சிட்டிகை 

 

to remove face wrinkles ,annaimadi.com,olive oil for wrinles,facial cleansing,skinare,beauty secret

Check price

நீங்கள் செய்ய வேண்டியது

முதலில் சிறிது ஒலிவ் எண்ணெய் எடுத்து, முகத்தில் மசாஜ் செய்யவும்.

 ஒலிவ் எண்ணெய், உப்பு, எலுமிச்சை சாற்றை  கலந்து கொள்ளவும்.

சருமத்தின் வறண்ட, கடினமான, பாகங்களில் இந்த கலவையை  பூசி ,தேய்த்து கொள்ளுங்கள்

இக்கலவையில் எலுமிச்சை சாறை சேர்த்து கொள்வதால் , புத்துணர்வு ஏற்படும்.

10 நிமிடங்களின் பின்னர்,இளஞ்சூட்டு நீரால் முகத்தைக் கழுவி கொள்ளவும். இப்படி வாரம் இரு தடவை செய்து வர முகத்தில் உள்ள சுருக்கங்கள் காணாமல் போய்விடும்.

to remove face wrinkles ,annaimadi.com,olive oil for wrinles,facial cleansing,skinare,beauty secret

முகச்சுருக்கம் நீங்க பெரியசீரகம்

பெரியசீரகம்  – 2 தேக்கரண்டி 

தயிர் – 1 தேக்கரண்டி 

நீங்கள் செய்ய வேண்டியது

இரண்டையும் சேர்த்து அரைத்து முகத்தில் பூசிக்கொள்ள வேண்டும்.

15 நிமிடங்கள் கழித்து முகத்தை நன்றாக கழுவ வேண்டும்.

வாரம் 1 தடவையாவது இப்படி செய்து வந்தால், உங்கள் முகம்  சுருக்கங்கள் நீங்கி மிகவும் இளமை பொலிவுடன் இருக்கும்.