பற்களில் படிந்துள்ள கறை அகற்ற (to remove teeth stains)
பற்களில் படிந்துள்ள கறைகள் (to remove teeth stains)ஆரோக்கிய கேடு மட்டுமல்ல. முக அழகையும் கெடுக்கும். மற்றவர்களுடன் சேர்ந்து கதைத்து பேசி சிரிப்பதற்கு தயக்கம் ஏற்படும். பற்கள் முகத்திற்கு அழகு சேர்ப்பது மட்டுமல்லாமல் நமது உடல் ஆரோக்கியத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
பற் கறைகளால் கஷ்ரப்படுபவர்கள் நாள்பட்ட கறைகளை கூட எளிமையாக நீக்கலாம்.
பற்களை ஆரோக்கியத்துடன் சுத்தமாக வைத்திருப்பது நமது கடமை ஆகும்.
ஆனால் பற்கள் சிலருக்கு மஞ்சள் நிறத்தில் காணப்படும். மற்றும் உள்புறத்திலும் கருமை நிறத்தில் காட்சியளிக்கும். இது பாரப்பதற்கே அசிங்கமாக இருக்கும்.
ஏனெனில் ஒழுங்காக பல் துலக்காவிட்டாலோ, பல் இடுக்குகளில் உணவு துகள்கள் தங்கினாலோ அதுவும் பற்களின் நிற மாற்றத்திற்கு காரணமாகிவிடும் மற்றும் பற்சிதைவும் ஏற்படுத்துகின்றது.
அத்தகைய பாதிப்புகள் ஏற்படுவதற்கு வாய்வழி சுகாதாரத்தில் கவனம் செலுத்தாததே முக்கிய காரணமாகும்.
வாய் மற்றும் பற்கள் சார்ந்த நோய் பாதிப்புகளும் பற்களில் கறைகள் தோன்றுவதற்கு வழிவகுக்கும்.
அந்தவகையில் பற்களில் படிந்துள்ள கறைகளை அகற்றி பற்களில் சுகாதாரத்ர்துடன் வைத்து கொள்ள கீழ் குறிப்பிடப்பட்டுள்ள இயற்கை முறைகளை பின்பற்றினாலே போதும்.
பல் முளைக்கும் போது பளிச்சின்னு வெள்ளை நிறத்தில் இருக்கும். வயதாக வயதாக பற்களின் மேல் உள்ள எனாமல் தேய்வதால் பற்கள் மஞ்சள் நிறத்திற்கு மாறும். பற்களை சரியாக பராமரிக்காமல் விட்டு விட்டால் சிறு வயதிலேயே கூட பற்களின் மேல் உள்ள எனாமல் தேய்ந்து விட வாய்ப்புள்ளது.
பல் அனைவருக்கும் வெள்ளை நிறத்தில் மட்டும் தான் இருக்கவேண்டும் என்பதில்லை. பல்லின் வெளிப்புற அடுக்கான எனாமலும் உட்புற அடுக்கான டென்டினும் வலிமையாக இருப்பதற்கான அடையாளமே லேசான மஞ்சள் நிறம் தான்.
தினசரி 2 முறை பல் துலக்குவது அவசியம். அதற்காக பல்லை தேய் தேய் என தேய்த்தால் பல்லில் உள்ள எனாமல் தேய்ந்துவிடும். பல்லில் உள்ள எனாமல் தேய்ந்து விட்டால் பல் கூச்சம் பிரச்சனை ஏற்படும்.
சிலர் சரியாக பல் துலக்காமல் இருப்பதால் பல்லில் சேரும் உணவுத்துகள்கள் நாளடைவில் எளிதில் நீக்க முடியாத கறையாக மாறி விடுகிறது.
மாவு அரைக்கும் போது கிரைண்டர் சுத்தமானதாக இருந்தால் தான் நமக்கு சுத்தமான மாவு கிடைக்கும். அதுபோல நமது பற்கள் சுத்தமாக இருந்தால் தான் நாம் மென்று விழுங்கும் உணவு சுத்தமானதாக வயிற்றுக்கு சென்றடையும்.
பற்களில் எதனால் கறை படிகிறது?(to remove teeth stains)
புகையிலையில் உள்ள நிகோடின் எனும் ரசாயனப்பொருள் பற்களை நிறமிழக்க செய்கிறது. அதேபோல டீ காபியில் உள்ள டானின் எனும் ரசாயனம் காரணமாகவும் பற்களில் நிறமிழப்பு ஏற்படுகிறது.
புகைபழக்கம்
வெற்றிலை பாக்கு போடுவது
குட்கா மற்றும் பான் மசாலா பயன்படுத்துவது
அதிகமாக டீ , காபி அருந்துவது
இனிப்பு பண்டங்களை அதிகம் உண்பது
பல்துலக்கி விட்டு சரியாக வாயை கழுவாமல் இருப்பது
குளிர்பானங்கள் அருந்துவது
இரும்பு சத்து மாத்திரை மற்றும் டானிக்குகளை தொடர்ச்சியாக சாப்பிடுவது
போன்ற பல காரணங்களால் பல்லில் கறை படியும்.
எல்லோருமே பற்களை வெண்மையாக அழகாக வைத்திருக்க முடியும். எப்படி ?
பல் கறை நீங்க (to remove teeth stains) வீட்டு மருத்துவம்
- இரண்டு பூண்டை அரைத்து எடுத்துக்கொள்ளவும். அதில் பொடி செய்த கல் உப்பு கால் ஸ்பூன், அரை மூடி எலுமிச்சை பழத்தின் சாறு கலக்கவும்.
அதனுடன் நீங்கள் வழக்கமாக பயன்படுத்து பற்பசையை கலந்து 3 நாட்களுக்கு இரவு உறங்க செல்லும் முன் பல் துலக்கி வந்தால் பல் கறை நீங்கும் (to remove teeth stains).
- கால் ஸ்பூன் பச்சரிசி மாவு , கால் ஸ்பூன் மஞ்சள் தூள் , கால் ஸ்பூன் உப்பு, எலுமிச்சை சாறு 2 ஸ்பூன் மூன்றையும் கலந்து வாரம் ஒரு முறை பல் துலக்கி வந்தால் பல் கறை நீங்கும். மற்ற நாட்களில் வழக்கம் போல பல் துலக்கலாம்.
- கால் ஸ்பூன் உப்பு , அரை ஸ்பூன் நல்லெண்ணெய் , 5 சொட்டு எலுமிச்சை சாறு மூன்றையும் கலந்து அதனுடன் தேவையான அளவு பற்பசையையும் கலக்கவும்.
இவ்வாறு வாரம் ஒரு முறை இரவு உறங்கும் முன்பு பல் துலக்கி வந்தால் பல்லில் உள்ள கறை நீங்கும் (to remove teeth stains)
- தினமும் இரண்டு கொய்யா இலைகளை வாயில் போட்டு மென்று வந்தால் பற்களில் உள்ள மஞ்சள் கறை நீங்கும்.
நமது தாத்தா , பாட்டி எல்லோரும் விறகு அடுப்பில் உள்ள சாம்பல் மற்றும் விறகு அடுப்பில் உள்ள கரியுடன் உப்பையும் சேர்த்து பல் துலக்குவார்கள்.
அந்தகரியில் இப்போது பற்பசை தயாரிக்க தொடங்கிவிட்டார்கள். எம் முன்னோர் எவ்வளவு அறிவியல் வல்லவர்கள் ?
அது போல நாம் பல் துலக்கும் பற்பசையில் கொஞ்சம் சாம்பல் சேர்த்து பல் துலக்கி வந்தால் பற்கறை (to remove teeth stains) நீங்கும்.
பற்கள் உறுதியாக உண்ண வேண்டிய உணவு பொருட்கள்
பால் , தயிரில் கல்சியம் அதிகமாக உள்ளது. தொடர்ச்சியாக உணவில் தயிரை சேர்த்து வந்தால் பற்கள் வலிமை பெறும்.
கீரைகளில் விற்றமின் B சத்து அதிகமாக உள்ளதால் பல்லுக்கு வலிமை தரும்.
ஆப்பிளை தினமும் உண்டு வந்தால் பல் உறுதி பெறும்.
உணவில் கொத்தமல்லி , கரட் போன்றவற்றை அதிகமாக சேர்த்துக்கொள்ள வேண்டும்.
தினசரி சிறிது பாதாம் பருப்புகளை உண்டு வந்தால் பற்கள் ஆரோக்கியமாக இருக்கும்.
பற்களில் படிந்த கறைகளைப் போக்க (to remove teeth stains)
தினமும் பல் தேய்க்கும் முன்பு சிறிது உப்பு தூளை வைத்து பல்லை தேய்த்து விட்டு பின்னர், பேஸ்ட் கொண்டு பல் தேய்த்தால் பற்களில் படிந்த கறைகள் (to remove teeth stains) மெல்ல மெல்ல மறையத் தொடங்கும்.
இரவு சாப்பாடு முடித்து படுக்கச் செல்வதற்கு முன்பு ஆரஞ்சு பழத்தோலைக் கொண்டு பற்களை நன்றாக தேய்க்க வேண்டும். இதனை தேய்த்தபிறகு வேறு எதையும் சாப்பிடவோ, குடிக்கவோ கூடாது.
மறுநாள் காலை எழுந்து வாயை கொப்பளிக்கலாம்.
இரவு முழுவதும் பற்களில் படர்ந்திருப்பதால் ஆரஞ்சு பழத்தோல் கறையை போக்குவதுடன் கிருமிகளையும் அழித்துவிடும்.
ஸ்ட்ராபெர்ரி பழத்தில் இரண்டு எடுத்து நன்றாக அரைத்து, தினமும் காலையில் பல் தேய்த்தவுடன், சிறிதளவு எடுத்து லேசாக பற்களில் தேய்த்து வாய் கொப்பளிக்க வேண்டும்.
இவ்வாறு 10 நாட்களுக்கு செய்து வர, பற்களில் உள்ள கறைகள் நீங்கும்.
பற்களை சுத்தமாக்குவதிலும், ஈறுகளுக்கு ஆரோக்கியம் அளிப்பதிலும் ஆப்பிளின் பங்கு சிறந்தது. எனவே உணவை சாப்பிட்டு முடித்த ஒரு மணி நேரம் கழித்து ஆப்பிளை சில துண்டுகள் சாப்பிட்டு வர, பற்களில் கறை படிவதைத் தடுக்கலாம்.
கொய்யாப் பழம் மற்றும் கொய்யா இலைகள் பற்களில் உள்ள கறையைப் போக்க மிகச்சிறந்தது.
கொய்யா இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து, அந்த நீரைக் கொண்டு வாயை கொப்பளித்து வந்தாலும் அல்லது தினந்தோறும் ஒரு கொய்யாப்பழத்தைச் சாப்பிடுவதன் மூலமும் பற்களில் உள்ள கறையைப் போக்க முடியும்.
1 தேக்கரண்டி கிராம்புத் தூளுடன், 1 தேக்கரண்டி ஒலிவ் ஆயில் கலந்து, கறைபடிந்த பற்களில் தேய்த்து, சிறிது நேரத்திற்குப் பின் வெதுவெதுப்பான நீரில் வாயை கொப்பளிப்பதன் மூலம் சுத்தமான பற்களைப் பெறலாம்.
பற்களை காலை மாலை கட்டாயம் துலக்குவோம். உணவு உண்டபின் வாய் கொப்பளிப்போம். அழகான வெண்மையான பற்களை பெறுவோம். அழகாக சிரிப்போம்!