அழகாக ஜொலிக்க (To shine beautifully)
ஆள் பாதி ஆடை பாதி. அதாவது ஆள் பாதி அலங்காரம் பாதி.நம்மை நாம் எப்படி அலங்க்காரப்படுத்துகின்றோம் என்பதில் தான் நம் அழகு இருக்கிறது.
மற்றவர்கள் செய்கிறார்கள் என்பதற்காக நமது தோற்றத்திற்கு நிறத்திற்கு ஒத்து வராத அலங்காரத்தை பயன்படுத்துவது முற்றாக உங்கள் ஆழகைகெடுக்கும் வழியாகும்.
அன்றாட வாழ்வில் சிலவற்றை கவனித்து செயற்படுத்தி வந்தால் எல்லோருமே அழகாக ஜொலிக்கலாம் (To shine beautifully).
உடை அலங்காரம் (To shine beautifully)
நடைமுறையில் இன்றைய பெண்கள் பேஷனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். மேலும் தங்களுக்கு ஏற்ற உடை, ஆபரணம், மற்றும் கலர் தெரிந்து கொள்வதில் மிகவும் ஆர்வமாக உள்ளார்கள்.
உயரமாகவும், ஒல்லியாகவும் உள்ள பெண்கள் குறுக்கே கோடுகள் போட்ட உடைகளையோ அல்லது பெரிய டிசன்கள் உள்ள உடைகளையோ அல்லது பெரிய பார்டர்கள் போட்ட உடைகளை அணிந்ததால் பார்க்க அழகாக இருக்கும்.
பருவ வயதில் முகத்தில் நிறைய பருக்கள் வந்து தாங்கமுடியாத எரிச்சலிருந்தால் வெந்தயத்தை அரைத்து அப்பேஸ்ட்டை அப்பி வைத்து வந்தால் எரிச்சல் அடங்குவதோடு பருக்களும் காணாமல் போய்விடும்.
பருவ வயது தாண்டிய பிறகு உடல் உஷ்ணத்தால் பருக்கள் வந்தால் ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை ஒரு கப் தயிரில் ஊறவைத்து குறைந்தது மூன்று நான்கு நாட்களுக்காவது அதிகாலையில் எழுந்ததும் குடித்து வரவேண்டும்.
பொதுவாக பெண்கள் எல்லோருமே தங்களை ஸ்லிம்மாகக் காட்டிக் கொள்ளத்தான் மிகவும் விரும்புவார்கள். அதற்கு மிகவும் சிறந்தது டார்க் கலர் தான்.
லைட் கலர்கள் ஒரு ஸ்லிம்மான பெண்ணைக் கூட கொஞ்சம் குண்டாகக் காட்டும். எனவே ஸ்லிம்மான பெண்கள் லைட் கலர்கள் உடைகளை உடுத்த வேண்டாம்.
மிகவும் உயரமான பெண்கள் மிகவும் உயரமான கொண்டை போட்டுக் கொள்ளக் கூடாது. சிறிது குள்ளமான பெண்கள் கொண்டையச் சிறிது கூர்மையாகவும், உயரமாகவும் போட்டுக் கொண்டால் பார்க்க அழகாக இருக்கும்.
இடுப்பில் இறுக்கமாக ஆடை அணிவதால் இடுப்பைச் சுற்றி கறுப்புத் தழும்பு ஏற்பட்டு விடும். இதைப்போக்க இறுக்கமான ஆடை அணிவதை தவிர்க்க வேண்டும்.
காய்ப்பு, தழும்பு ஏற்பட்ட இடத்தில் தேங்காய் எண்ணையை தடவி லேசாக மசாஜ் செய்ய வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் படிப்படியாக இடுப்புக் காய்ப்புத் தழும்பு மறந்து விடும்.
சில பெண்களுக்கு கண்களைச் சுற்றி கரு வளையம் இருக்கும். இது வயதானவர் போன்ற தோற்றத்தைக் காட்டும்.
இதை எளிதாக நீக்கி விடலாம். வெள்ளரிக்காய், உருளைக்கிழங்கு இரண்டையும் சம அளவு எடுத்து அதை நன்றாக அரைத்து கொள்ளவும்
ஒரு மெல்லிய வெள்ளை துணியை பன்னீரில் நனைத்து கண்களின் மீது வைத்து, அதன் மேல் அரைத்த கலவையை வைத்து படுக்க வேண்டும். இப்படி முப்பது நிமிடம் இருக்க வேண்டும்.
இவ்வாறு 5 நாட்கள் செய்தாலே போதுமானது.கருவளையம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.
சரியான தூக்கம் இல்லாமல் போனாலும் கண்களில் கரு வளையம் தோன்றும்.தினமும் குறைந்தது எட்டு மணி நேரமாவது தூங்க வேண்டும்.
அழகான பாதத்திற்கு (To shine beautifully)
இரவில் படுக்கப்போவதற்கு முன்பு ஒரு பாத்திரத்தில் சூடு தாங்கும் அளவு வெந்நீர், உப்பு, எலுமிச்சைச்சாறு, ஷாம்பு போட்டு பாதங்களை 5 முதல் 10 நிமிடங்கள் வரை ஊற வைத்து பிறகு பிரஷ்சினால் சுத்தம் செய்யவும்.
இதை வாரத்திற்கு இரண்டு அல்லது 3 நாட்களுக்குச் செய்யலாம்.
பிறகு பாதங்களை ஈரம்போக ஒரு மெல்லிய டவலால் துடைத்து நல்லெண்ணெயை லேசாக சூடு செய்து காலில் தடவலாம்.
பாதத்தில் வெடிப்பு உள்ளவர்கள் வீட்டில் மருதாணி இலையை விழுது போல நன்கு அரைத்து வெடிப்பு உள்ள இடங்களில் வாரந்தோறும் தடவி வந்தால் வெடிப்பு நீங்கும்.
நகத்துக்கு டார்க் கலர் பொலிஷ் போடுவதால் நகங்கள் மஞ்சளாக மாறி விடும். அதனால் பொலிஷ் போடுவதற்கு முன் நெயில் பேஸ் போட்டு பொலிஷ் போட வேண்டும்.
இப்படி செய்து வந்தால் நம் நகங்களை அழகாக பராமரித்துக் கொள்ளலாம்.
பாதங்கள் மிருதுவாக இருக்க வேண்டுமானால் பீர்க்கங்காய் நார் கொண்டு தினமும் குளிக்கும் போது பாதத்தில் நன்றாக 5 நிமிடம் தேய்த்து வந்தால் பாதங்கள் மிருதுவாகி விடும்.
கால் விரல் நகத்தின் ஓரத்தில் மண் நிறைந்து விட்டால் நல்லெண்ணெயை ஒரு விளக்கில் ஏற்றி வைத்து ஒரு தீக்குச்சியை அந்த நல்லெண்ணெயில் வைத்து அந்த விளக்கின் திரியில் சூடு செய்து அந்த விரல் நகத்தின் ஓரங்களில் தடவவும்.
2 அல்லது 3 முறை செய்தபின் அதில் உள்ள அழுக்கு எல்லாம் வந்து விடும்.
கண்ணுக்கு கீழ் உள்ள கருப்பு வளையம் மறைய
சில பெண்களுக்கு கண்களைச் சுற்றி கறுப்பு வளையம் இருக்கும். இந்த பிரச்சினை தான் பெண்களை வயதானவர் போல் காட்டும்.
இதை எளிதாக நீக்கி விடலாம். வெள்ளரிக்காய், உருளைக்கிழங்கு இரண்டையும் சம அளவு எடுத்து அதை நன்றாக அரைத்து கொள்ளவும்.
ஒரு மெல்லிய வெள்ளை துணியை பன்னீரில் நனைத்து கண்களின் மீது வைத்து, அதன் மேல் அரைத்த கலவையை வைத்து படுக்க வேண்டும். இப்படி முப்பது நிமிடம் இருக்க வேண்டும். இவ்வாறு 5 நாட்கள் செய்தாலே போதுமானது.
கருவளையம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.
உடல் அழகு – சில அழகுக் குறிப்புகள் (To shine beautifully)
பழுத்த வாழைப்பழத்துடன் பால் கலந்து முகத்தில் பூசுங்கள். முகம் பளபளக்கும்.
பப்பாளிப்பழம், எலுமிஸ்சை சாறு கலந்து தடவவும். முகத்துக்கு நல்ல நிறம் கிடைக்கும்.
ஆரஞ்சு சாறை குளிர்சாதன பெட்டியில் வைத்து கட்டியாகி ஒரு வெள்ளை துணியில் கட்டிக்கொண்டு கண்களுக்கு மேல் ஒத்தி எடுக்கவும். கண்கள் குளிர்ச்சியாக இருக்கும்.
வெள்ளரிக்காய் சாற்றில் முல்தானிமெட்டி, பால் சேர்த்து முகத்தில் பூசி பிறகு கழுவி விடவும். வெய்யிலில் கருத்த முகம் பொலிவு பெரும்.