எலும்பு வலுப்பெற என்ன சாப்பிடலாம்? (To strengthen bones)

எலும்புகளின் வலிமைக்கு (To strengthen bones) மிகவும் முக்கியமானவை கல்சியம், ஊட்டச்சத்து மற்றும் சரியான உடல் சார்ந்த வேலை. உணவுப் பழக்கத்தின் மாற்றம், சரியான உடற்பயிற்சி இல்லை என காரணங்கள் பல உள்ளன.

எழுவது வயது முதியவர்கள் கூறும் உடல்நல குறைகளை எல்லாம் இபோது முப்பது  வயதிற்கும் குறைவான இளையோர் கூறுகின்றனர். போதிய உடல் அசைவு இல்லை.உட்கார்ந்த இடத்திலேயே வேலையை செய்பவர்களுக்கு தான் அதிகமான எலும்பு சார்ந்த பிரச்சனைகள்  அதிகமாக வருகின்றன.

எலும்பு வலுப்பெற  செய்ய வேண்டியவை  (To strengthen bones)

அதிகாலை சூரிய உதயம்

சூரிய உதயத்தின் போது 15 நிமிடங்கள் சூரிய ஒளி, நமது உடலில் படும்படி இருக்க வேண்டும். இது நமது உடலில் இருக்கும் வைட்டமின் டி சத்தை தூண்ட உதவும். இது எலும்பின் வலிமைக்கு நல்லது.

முடிந்தால் சூர்யநமஸ்காரம் செய்வது சால சிறந்தது.

என்ன விதமான உணவுகள் எலும்பை வலுப்படுத்துகின்றது என  வீடியோவில் பார்க்கலாம்.

பூண்டு மற்றும் வெங்காயம்

உங்களது தினசரி உணவில் பூண்டு மற்றும் வெங்காயத்தை சேர்த்துக் கொள்வது நலம் தரும். இவற்றில் இருக்கும் சல்ஃபர் (Sulfur) எலும்பு மற்றும் மூட்டுகளின் வலிமையை அதிகரிக்கின்றது.

அதிகப்படியான புரதம் வேண்டாம்

உடலிலுள்ள கல்சிய சத்தை, இறைச்சி உணவுகளின் மூலம் கிடைக்கப் பெறும் அதிகப்படியான புரதம்,  வெளியேற்றிவிடுகிறது. இது, எலும்பின் வலிமை குறைக்கிறது. எனவே, புரதம் அதிகமுள்ள இறைச்சி உணவுகளை அளவோடு  உட்கொள்ளதல் வேண்டும்.

அளவான டீ, காபி

சிலர் ஒரு  நாளில் பல முறை டீ மற்றும் காபி குடிக்கும் பழக்கம் கொண்டிருப்பார்கள். இது எலும்பின் வலிமைக்கு நல்லதல்ல. எனவே இவற்றின் அளவை குறைத்துக் கொள்ளுங்கள். விரும்பினால்  இதற்கு மாற்றாக பால், புதினா தேணீர், மூலிகைத் தேநீர்,மல்லிதண்ணீர் குடிக்கலாம்.

உடற்பயிற்சி அவசியம்

எலும்பின் வலிமை அதிகரிக்க தினமும்  அரை மணிநேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டியது அவசியம். இதற்காக  ஜிம்மிற்கு செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. நடைப்பயிற்சி, ஜாக்கிங், சிட்-அப்ஸ் அல்லது மாடிபடிகள் இருந்தால் அரை மணிநேரம் ஏறி இறங்கினால் கூட போதுமானது.

To strengthen bones,annaimadi.com,rich in calsium,calsium foods,proper exercise,working,surya namaskar,

உங்களுக்கு பிடித்த விளையாட்டை விளையாடுங்கள்

கால்பந்து, கூடைப்பந்து, பூபந்து,கிரிக்கெட்,கபடி  என எந்த விளையாட்டு உங்களுக்கு பிடிக்கிறதோ அதை விளையாடுங்கள். இது தசை மற்றும் எலும்பின் வலிமை அதிகரிக்க உதவும்.

சோடா மற்றும் கோலா பானங்கள்

சோடா மற்றும் கோலா பானங்களில் உங்கள் ஆரோக்கியத்தைக் கெடுத்துவிடும். இவற்றில் இருக்கும் பாஸ்பரஸ், கல்சியம் சத்தை போக்கிவிடுகிறது. இதனால் பெரும்பாலானவர்களுக்கு அதிகம் எலும்பு சார்ந்த பிரச்சனை  ஏற்படும்.

To strengthen bones,annaimadi.com,rich in calsium,calsium foods,proper exercise,working,surya namaskar,

பால் உணவுகள் அவசியம்

பால், தயிர், மோர்,யோகட் போன்ற பால் உணவுகளை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதில் இருக்கும் கல்சியம் உங்கள் எலும்பிற்கு வலிமையை தரும்.

ஆரோக்கியமான உணவு

உங்களது உணவுப் பழக்கத்தில், கீரை, தானிய உணவுகள் போன்ற சத்துள்ள உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். நொறுக்குத்தீனி சாப்பிடுவதற்கு பதிலாக, நீங்கள் வேக வைத்த காய்கறிகள் அல்லது தானிய உணவுகள் சாப்பிடலாம்.

புகை, மதுவை  குறைக்கலாம்

புகை மற்றும் மது பழக்கத்தை மெது மெதுவாக குறைத்து வந்து,பின்னர் நிறுத்தி விடுதல் சிறந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *