திருவண்ணாமலையை சுற்றி ஒரு சுற்றுலா (Tour around Tiruvannamalai)

திருவண்ணாமலைக்கு செல்லும் போது அதனை சுற்றி உள்ள பல வரலாற்று சிறப்பு மிக்க ஆன்மீகத் தலங்களையும் (Tour around Tiruvannamalai) தரிசிக்கலாம்.

நம்மையெல்லாம் பாதுகாக்கும் இறைவன், நாம் போய் தரிசிக்குமாறு பல கோயில்களில் பல உருவங்களில் கொலுவீற்றிருக்கிறார்.

அந்த வகையில் ஒவ்வொரு கோயிலுக்கும் தனித்தனியே ஒரு மகத்துவம் உண்டு. கற்றது கைம்மண்ணளவு என்பதுபோல நாம் கண்டதும் ஒருசில காட்சிகளைத்தான். இப்படி கண்ட ஒருசில காட்சிகளிலிருந்து நாம் தெரிந்து கொண்டதும் மிகவும் சொற்பம் தான்.

சாத்தனூர் அணை (Tour around Tiruvannamalai Sathanur Dam)

சாத்தனூர் அணை ,Tour around Tiruvannamalai Sathanur Dam,அன்னைமடி,annaimadi.,திருவண்ணாமலையை சுற்றி ஒரு சுற்றுலா ,Tour around Tiruvannamalai,பர்வதமலை,parvathamalai,சமணர் ஆலயம்,திருமலை,மாமண்டூர் குடைவரைக்கோயில் mTour around Tiruvannamalai Mamandoor,சீயமங்கலம், குடைவரைக்கோயில்,Tour around Tiruvannamalai Seeyamangalam,ஜவ்வாதுமலை ,Tour around Tiruvannamalai Javvaathu kill,கங்கைகொண்ட சோழீஸ்வரர் கோயில், கூழமந்தல்,சந்திரமௌலீஸ்வரர் கோயில், பிரம்மதேசம்,Tour around Tiruvannamalai Chandramouleeswarar temple

சாத்தனூர் அணை (Tour around Tiruvannamalai) 1956 ஆம் ஆண்டு தென்பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்டது. இவ்வணையின் மொத்த நீர் கொள்ளவு உயரம் 119 அடியாகும். தமிழகத்தில் பெரிய அணைகளில் முக்கியமானதாகும்.

இந்த அணையில் அமைக்கப்பட்டுள்ள பூங்காக்களும், முதலைப்பண்ணைகளும் இயற்கையான சூழலும் சுற்றுலா வருபவர்களுக்கு மகிழ்வூட்டுவனவாக உள்ளன.

திருவண்ணாமலையில் இருந்து 30 கி.மீ. தூரமும் செங்கத்திலிருந்து 24 கி.மீ. தூரத்திலும் உள்ளது.

பர்வதமலை (Parvathamalai)

சாத்தனூர் அணை ,Tour around Tiruvannamalai Sathanur Dam,அன்னைமடி,annaimadi.,திருவண்ணாமலையை சுற்றி ஒரு சுற்றுலா ,Tour around Tiruvannamalai,பர்வதமலை,parvathamalai,சமணர் ஆலயம்,திருமலை,மாமண்டூர் குடைவரைக்கோயில் mTour around Tiruvannamalai Mamandoor,சீயமங்கலம், குடைவரைக்கோயில்,Tour around Tiruvannamalai Seeyamangalam,ஜவ்வாதுமலை ,Tour around Tiruvannamalai Javvaathu kill,கங்கைகொண்ட சோழீஸ்வரர் கோயில், கூழமந்தல்,சந்திரமௌலீஸ்வரர் கோயில், பிரம்மதேசம்,Tour around Tiruvannamalai Chandramouleeswarar temple

சங்க காலத்தில் நன்னன் சேய் நன்னன் ஆண்ட பகுதி நவிர மலை என்பதே தற்போதைய பர்வதமலை என்று வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

சவ்வாது மலைத்தொடரின் கீழ் அமைந்துள்ள இம்மலையின் மீது அபிதகுஜாம்பாள் , மல்லிகார்சுனர் கோயில் அமைந்துள்ளது. நீண்ட நெடிய இக்கோயில் மலையேறுபவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.

குளிர்ந்த காற்றும் இயற்கை எழிலான காட்சியும் கண்டுகளிக்கலாம். யோகிகளும் சித்தர்களும் வழிபட்ட மலை என்றும் தென்கயிலாயம் என்றும் இம்மலை அழைக்கப்படுகிறது.

தென்மாதிமங்கலம் அல்லது கடலாடியிலிருந்து இம்மலைக்கு செல்ல பாதை வசதி உண்டு. போளூரிலிருந்து 25 கி.மீ தூரமும் திருவண்ணாமலையில் இருந்து 30 கி.மீ. தூரத்திலும் உள்ளது.

சமணர் ஆலயம்,திருமலை

மனதிற்கு இனிமையான, காற்றோட்டமான இடத்தில் அமைந்துள்ளது இக்கோயில். இம்மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற சமணத்திருத்தலமாகும். 23 வது சமணத்தீர்த்தங்கர்ரான நேமிநாதரின் 18 அடி உயர உருவச்சிலை குன்றின் மீது அமைந்துள்ளது. திருப்பாதங்களும் குந்தவை நாச்சியாரின் கல்வெட்டும் இக்குன்றில் அமைந்துள்ளது.

குன்றிற்கு கீழ் அமைந்துள்ள மகாவீரர் ஆலயத்தில் 5 அடி உயர சுதைச்சிற்பம், தீர்தங்கர்களின் உருவங்கள், பாறை ஓவியங்கள், கல்வெட்டுகள் என அற்புதமாக அமைந்துள்ளது இக்கோயில்.

போளூர் ஆரணி வழியில் வடமாதிமங்கலத்தில் இருந்தும், போளுர் தேவிகாபுரம் வழியில் மட்டப்பிறையூர் அல்லது கொம்மனந்தல் வழியாகவும் செல்லலாம்.

மாமண்டூர் குடைவரைக்கோயில் (Tour around Tiruvannamalai Mamandoor)

சாத்தனூர் அணை ,Tour around Tiruvannamalai Sathanur Dam,அன்னைமடி,annaimadi.,திருவண்ணாமலையை சுற்றி ஒரு சுற்றுலா ,Tour around Tiruvannamalai,பர்வதமலை,parvathamalai,சமணர் ஆலயம்,திருமலை,மாமண்டூர் குடைவரைக்கோயில் mTour around Tiruvannamalai Mamandoor,சீயமங்கலம், குடைவரைக்கோயில்,Tour around Tiruvannamalai Seeyamangalam,ஜவ்வாதுமலை ,Tour around Tiruvannamalai Javvaathu kill,கங்கைகொண்ட சோழீஸ்வரர் கோயில், கூழமந்தல்,சந்திரமௌலீஸ்வரர் கோயில், பிரம்மதேசம்,Tour around Tiruvannamalai Chandramouleeswarar temple

தமிழகத்தில் அமைந்துள்ள பெரிய குடைவரைகளுள் ஒன்று. நரசமங்கலம் – மாமண்டூர் கிராமத்தில் உள்ள மலைக்குன்றில் 4 குடைவரை கோயில்கள் அமைந்துள்ளன.

இக்கோயில்கள் மகேந்திரவர்மனும் அவரது பின்வந்த அரசர்களாலும் அமைக்கப்பட்டது. வலதுகோடியில் அமைந்துள்ளது முதல் மற்றும் இரண்டாம் குடைவரை முறையே விஷ்ணுவிற்கும் சிவனுக்கும் அமைக்கப்பட்டுள்ளது. குன்றின் மீது அமைக்கப்பட்டுள்ள 3 வது குடைவரை கருவறையில் இறை உருவங்கள் இல்லை.

தென்கோடியில் அமைக்கப்பட்டுள்ளது 4வது முற்றுபெறாத குடைவரை.

மகேந்திரவர்ம பல்லவனின் பல பட்டப்பெயர்கரை கூறும் பல்லவர கிரந்த கல்வெட்டு, இக்குன்றின் பின்புறம் அமைந்துள்ள சித்திரமேக தடாகத்தைப் பற்றிய குறிப்புகளைக் கொண்ட  கல்வெட்டு ,என வரலாற்றுப்பெட்டகமாக அமைந்துள்ளது இக்குடைவரைக்கோயில்.

வந்தவாசி காஞ்சிபுரம் சாலையில் நரசமங்கலம் கிராமத்தில் இருந்து மேற்கே 2 கி.மி. தூரத்தில் அமைந்துள்ளது.

சீயமங்கலம், குடைவரைக்கோயில்(Tour around Tiruvannamalai Seeyamangalam)

அவஜிபாஜன பல்லவனேஸ்வரம், சிம்ம விஷ்ணு சதுர்வேதிமங்கலம் என்று அழைக்கப்படுகின்ற குடைவரைக்கோயில் (Tour around Tiruvannamalai) பல்லவர் காலத்தில் குடைவரையாக மட்டும் இருந்தது. பிற்கால மன்னர்களால் அர்த்தமண்டபம், முகமண்டபம், கோபுரம் என விரிவு படுத்தப்பட்டு இயற்கையான சூழலில் அமைந்துள்ளது.

இக்கோயில் இறைவன் பெயர் தூணாண்டார் ஆகும். இக்கோயில் தூணில் உள்ள நடராஜர் சிற்பம் தமிழகத்தில் முதல் நடராஜர் உருவம் என்று ஆய்வாளர்களால் குறிப்பிடப்படுகிறது.

30 மேற்பட்ட கல்வெட்டுகள் அரிய வரலாற்றுத்தகவல்களை கொண்டுள்ளது. இக்கோயிலுக்கு எதிரில் உள்ள குன்றில் சமணத் படுக்கையும் சிற்பமும் அமைந்துள்ளது. இக்கோயில். தேசூரிலிருந்து மேற்கே 2 கி.மி. தொலைவில் உள்ளது சீயமங்கலம்.

ஜவ்வாதுமலை (Tour around Tiruvannamalai Javvaathu kill)

கிழக்குத் தொடர்ச்சி மலையின் ஒரு அங்கமான சவ்வாது மலை சுமார் 260 ச.கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு மலையாளிகள் என்ற பழங்குடியினர் அதிக அளவில் வசிக்கின்றனர்.

200 மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன.

பல்லவர் காலம் முதல் நாயக்கர் காலம் வரையிலான பல்வேறு நடுகற்கள் இம்மலையில் உள்ளன. சோழர்காலத்தில் கட்டப்பெற்ற கோவிலூர் சிவன் கோயில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இங்குள்ள மக்கள் தினை, சாமை, வரகு போன்ற சிறுதானியங்கள் பயிரிடுகின்றனர்.

தேன், மிளகு, பழவகைகளும் இம்மலைவாழ் மக்களின் வாழ்வாதாரமாக திகழ்கின்றன. பீமன் அருவி, படகு குழாம், பூங்கா, கோவிலூர் சிவன் கோயில், வைனுபாப்பு தொலைநோக்கி மையம், அமிர்தி வனவிலங்கு சரணாலயம் ஆகியன முக்கிய முக்கிய சுற்றுலா இடங்கள் ஆகும். போளூர், திருப்பத்தூர் ஆகிய ஊர்களிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.

சாத்தனூர் அணை,அன்னைமடி,annaimadi,பர்வதமலை,parvathamalai,சமணர் ஆலயம்,திருமலை,மாமண்டூர் குடைவரைக்கோயில்,Mamandoor,சீயமங்கலம், குடைவரைக்கோயில்,Seeyamangalam,ஜவ்வாதுமலை ,Javvaathu kill,கங்கைகொண்ட சோழீஸ்வரர் கோயில், கூழமந்தல்,சந்திரமௌலீஸ்வரர் கோயில், பிரம்மதேசம்,Chandramouleeswarar temple

தடாகபுரிஸ்வரர் ஆலயம்

சோழர்காலத்தில் கட்டப்பெற்ற இக்கோயிலின் மூலவர் தடாகபுரிஸ்வரர் ஆவார்.

இக்கோயில் ஆயிரம் லிங்கங்கள் கொண்ட சகஸ்கர லிங்கம். கல்யாண மண்டபம், சிற்பங்கள், கல்வெட்டுகள் என அற்புதக் கோயிலாக மடம் என்ற ஊரின் நடுவே அமைந்துள்ளது. இது சேத்துப்பட்டு – வந்தவாசி சாலையில் ஏந்தல் கூட்டுரோட்டிலிந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது.

ங்கைகொண்ட சோழீஸ்வரர் கோயில், கூழமந்தல்

சாத்தனூர் அணை,அன்னைமடி,annaimadi,பர்வதமலை,parvathamalai,சமணர் ஆலயம்,திருமலை,மாமண்டூர் குடைவரைக்கோயில்,Mamandoor,சீயமங்கலம், குடைவரைக்கோயில்,Seeyamangalam,ஜவ்வாதுமலை ,Javvaathu kill,கங்கைகொண்ட சோழீஸ்வரர் கோயில், கூழமந்தல்,சந்திரமௌலீஸ்வரர் கோயில், பிரம்மதேசம்,Chandramouleeswarar temple   

இராஜேந்திர சோழன் ஆட்சிக்காலத்தில் அவரது ஞானகுருவான ஈசான சிவ பண்டிதரால் கட்டப்பெற்ற அழகிய கற்றளி கூழமந்தல் கோயிலாகும் (Tour around Tiruvannamalai).

கிழக்கு பார்த்த கோயில் இரண்டு தளமுடைய அழகிய ஸ்ரீவிமானமும் அதனையடுத்த அர்த்த மண்டபமும் அடுத்தாற்போல் முகமண்டபத்துடன் அமைந்துள்ளது. இங்குள்ள சிவனின் பெயர் கங்கை கொண்ட சோழீஸ்வரர் ஆகும்.

கருங்கற்களால் கட்டப்பெற்ற இக்கோயில் சோழர்கால கட்டுமானத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டு.

வந்தவாசி – காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில் கூழமந்தல் கிராமத்தில் கிழக்கே 500 மீ தொலைவில் அமைந்துள்ளது.

சந்திரமௌலீஸ்வரர் கோயில், பிரம்மதேசம்(Tour around Tiruvannamalai Chandramouleeswarar temple)

வெம்பாக்கம் வட்டம் காஞ்சிபுரம் – ஆற்காடு நெடுஞ்சாலையில் நாட்டேரி என்ற கிராமத்தின் அருகில் பிரம்ம தேசத்தில் இக்கோயில் அமைந்துள்ளது.

இக்கோயிலிலுள்ள 90 க்கும் மேற்பட்ட கல்வெட்டுகளில்ல் முதலாம் இராஜேந்திர சோழன் இறந்த பின்னர் உடன்கட்டை ஏறிய மன்னரின் அரசி வீரமகாதேவியார் நினைவாக தாகம் தீர்க்க வேண்டி தண்ணீர் பந்தல் அமைத்த செய்திகள், இவ்வூரில் செயல்பட்ட மடங்கள், விழாக்கள் உள்ளிட்ட பல அரிய அரிய தகவல்களை அறியலாம்.

‘ஆலயம் தொழுவது சாலவும் நன்று’ என்றார் ஔவையார். ‘கடவுளை நம்பினோர் கைவிடப்படார்’ என்பதெல்லாம் இறையருளை அனுபவித்து உணர்ந்த முன்னோர் வாக்கு.

தான் படைத்த ஒவ்வொரு உயிருக்கும் அந்த இறைவன் பாதுகாவலனாக இருப்பதை ஒவ்வொருவரும்  அனுபவித்துதான் உணர வேண்டும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *