பாரம்பரிய அரிசி வகைகளும் பயனும் (Traditional rice & benefits)
பொதுவாக அரிசியில் சமைக்கும் உணவுகள் அனைத்தும் பாரம்பரிய அரிசிவகையிலும் (Traditional rice) சமைக்கலாம்.
அதோடு அரிசி சாப்பாட்டால் குருதியில் சர்க்கரையளவு கூடிவிடும் என்ற பயம் இன்றி சாப்பிடலாம். சொல்லப் போனால் பாரம்பரிய அரிசிவகைகள் (Traditional rice) சர்க்கரையளவைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் மிகுந்தவை.
இட்லி,தோசை,பொங்கல், கிச்சிடி, பிரியாணி, அடை, ஆப்பம்,சாத வகைகள் போன்றவையும் அதிரசம்,முறுக்கு, சீடை ,செட்டிநாடு இனிப்பு வகைகள் போன்ற பலகாரங்களும் செய்யலாம்.
பாரம்பரிய அரிசி வகைகள் (Traditional rice)
மாப்பிள்ளை சம்பா (Bride Groom Rice)
இது தமிழ்நாட்டின் பாரம்பரிய அரிசி (Traditional rice) வகைகளில் ஒன்றாகும். இதில் மினரல்ஸ் விற்றமின்கள், புரதச்சத்து அதிக அளவில் உள்ளது.
பண்டையக் காலத்திலிருந்து இந்த வகையான உணவினை புது மாப்பிள்ளை அல்லது மணமகனுக்கு அளிப்பார்கள். இந்த உணவை உட்கொண்ட சில நாட்களில் மணமகன், இளவட்ட கல்லினை தூக்கி காட்டவேண்டும். இந்த உணவு, நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டுகிறது.
மருத்துவ குணங்கள்
- இரும்புசத்து (Iron) மற்றும் துத்தநாக (Zinc) சக்தி கொண்டது.
- தசைகள் மற்றும் திசுக்களுக்கு தேவையான ஆக்சிஜன் சர்க்கரை(High BP Hyperglycemia) மற்றும் ரத்தத்தை சுத்தரிக்கிறது.
- உடலின் உள்ள கெட்ட கொழுப்பினை குறைக்க கூடியது.
- இதில் உள்ள நார்சத்து, செரிமானத்திற்கு உதவுகிறது. இதனால் இதயம் சம்மந்தமான கோளாறு வராமல் தடுக்கின்றது.
- குடல் கட்டிகள் வராமல் தடுக்கின்றதது. குளுட்டோன்(Glutton) போல் இருப்பதால் குடும்ப வழிவகை நோய் வராமல் இருக்கும்.
- ஹீமோகுளோபின் அதிக படுத்துகின்றது. நுண்ணிய ஊட்டச்சத்து அதிகளவில் கொண்டுள்ளது விற்றமின் B1 உள்ளதால் வயிறு மற்றும் வயிற்றுப்புண் சம்மந்தமான குறைபாடுகளை களைகிறது.
- தாம்பத்திய குறைபாடுகளை போக்குகின்றது. நரம்பு மண்டலம், ரத்த மண்டலம், தசை மண்டலம் மேம்படுகின்றது.
கறுப்பு கவுனி அரிசி(Kavuni rice)
இதில் அதிகளவில் ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ்ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ்(Anti-Oxidants) உம் ,நார்சத்தும்(Fiber) உள்ளது . கறுப்பு கவுணி கொண்டு பல்வேறு வகையான உணவு வகைகள் சமைக்கலாம்.
மருத்துவ குணங்கள்
- வீக்கத்தை குறைக்கிறது.
- அடிப்படையில் கறுப்பு அரிசி பயன்பாடு, ஆஸ்த்துமாவின் தக்கதைக் குறைக்கிறது.
- இந்தாஅரிசி கல்லீரலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவும்.
- நீரிழிவு நோயை தடுக்க உதவுகிறது.
- ரத்த ஓட்டத்தை சீராக்கும், இதய atherosclerosis சுவரின் கொழுப்பு படிவங்களை குறைகின்றது., மேலும் மாரடைப்பிலிருந்து காக்கிறது.
- உயர் இரத்த அழுத்தத்தை முற்றிலும் கட்டுப்படுத்துகிறது.
- கொழுப்பை குறைக்கிறது (LDL- கெட்ட கொழுப்பு)
- புற்றுநோயை தடுக்க உதவுகிறது.
- செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது
- முடி வளர்ச்சி அதிகரிக்கிறது மற்றும் கண் பார்வை அதிகரிக்கிறது.
பாரம்பரிய அரிசிவகைகளை இங்கே வாங்கலாம்.
பூங்கார் கைகுத்தல் அரிசி
இது தமிழ்நாட்டின் பாரம்பரிய வகைகளில் (Traditional rice) ஒன்று. இதில் உள்ள அந்தோ சயினின் காரணமாக பார்ப்பதற்கு வெளிர்சிவப்பு நிறத்தில் இருக்கும்.
இந்த அரிசி சாதத்தின் சிறப்பு என்னவெனில்,உணவு உண்டபின் ரத்தத்தில் சர்க்கரை அளவினை அதிகப்படுத்தாமல் பார்த்துக்கொள்கிறது.
மற்ற பாரம்பரிய அரிசியை காட்டிலும், இதில் தனிம சத்துக்கள் அதிகம் உள்ளது. உடலில் உள்ள கொழுப்பினை குறைக்க வல்லது.மேலும் உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
இந்த உணவின் 50கிராம் அளவீடின்படி, 3கிராம் நார்சத்து, 48கிராம் கார்போஹைட்ரெட்ஸ், 8 விழுக்காடு புரதசத்து உள்ளது.
மருத்துவ குணங்கள்
- ரத்தத்தில் ஹீனமோக்ளோபின் அதிகரிக்க உதவுகிறது.
- இந்தசோற்றை, பழையசோறு அல்லது நீராகாரமாக உண்ணும் போது, நமக்கு தேவையான விற்றமின் B கிடைக்கிறது.
- பக்கவாத நோய் வராமலும் வந்த பின்னும் பாதுகாக்கின்றது
- நுண்ணூட்ட வளம்(micronutrients) உள்ளதால், நமது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கப்பெறுகிறது.
- பரம்பரை நோயின் தாக்கம் மற்றும் celiac diseases நமது உடலில் இருந்து குறைக்க அல்லது வராமல் செய்ய உதவும்
- வியர்வை சுரப்பிகளை தூண்டுவதால், வியர்வை மூலம் உடற்கழிவுகள் வெளியேற்றபடுகிறது
- கர்ப்பகாலத்தில் இந்த உணவினை உட்கொள்ளுவதால், ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்க முடியும்.
- உடற்பருமனை குறைக்கும். பசியேயில்லை என்பவர்கள் இதை உண்ண பசி எடுக்கும்
காட்டுயாணம் (Kattuyanam Rice)
இது பண்டைய தமிழர் பயன்படுத்திய அரிசி (Traditional rice) வகையில் ஒன்றாகும். இது மானாவாரி பயிராகும்.காட்டில் வாழும் யானையின் உடலின் எடையை தாங்கும் கால்கள் போல, வலிமையான எலும்புகள் பெற உதவும்.
விதைத்தபின் அறுவடைக்கு மட்டும் சென்று அறுவடை செய்து வந்தார்கள் நம் முன்னோர்கள். மலச்சிக்கலுக்கு எதிரானது.
மருத்துவ குணங்கள்
- கல்சியம் சத்துக்கள் உள்ளதால் எலும்புமண்டலத் தேவையை பூர்த்தி செய்ய உதவும்.
- சர்க்கரை நோயின் தாக்கத்தை குறைக்க உதவும்.
- அனைத்து வகையான புற்று நோயாளிகளுக்கும் ஏற்ற உணவாகும்.
- 30 வயது முதல் பெண்களுக்க ஏற்படும் Low bone density குறைபாட்டினை போக்கவல்லது.
- தேவையற்ற கெட்ட கொழுப்பினை குறைக்க உதவும்.
- குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவும் அரிசி வகையாகும் .
- ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் (Antioxidants) அதிக அளவில் உள்ளது .
மூங்கில் அரிசி (Bamboo Rice)
உறுதியான எலும்புகள் பெற உதவும்.தினசரி பயன்பாட்டில் மூட்டுவலி, முதுகு வலி, வாத நோய், முதுகு தண்டுவட வலி முழங்காலில் ஏற்படும் வலிகள் முற்றாக குறையும். மூங்கில் அரிசியின் சுவை கோதுமை போல் இருக்கும்.
மருத்துவ குணங்கள்
- மூங்கில் அரிசி Low Glycemic Index கொண்டுள்ளதால் , சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவாகும்
- உடலிற்கு தேவையான சத்துக்களை பெற உதவும். விற்றமின் B6, பாஸ்பரஸ், கல்சியம் பொட்டாசியம் சத்துக்கள் உள்ளது.
- உடலின் தேவையற்ற கொழுப்பினை குறைக்கும்.
- சமைக்கும் முன், 12 மணி நேரம் முன்பாக தண்ணீரில் ஊற வைத்தால் சமைக்கும் நேரம் குறையும்.
கிச்சிலி சம்பா (Kichili Rice)
இந்த அரிசி (DNA) வகையை கொண்டு தான் இந்தியாவின் அரிசி ஆராய்ச்சி கழகம் பல அரிசி வகையை (IR varieties) உருவாக்கியுள்ளது.
பிரியாணி, இனிப்பு வகைகள், சாத வகைகள் மற்றும் கொழுக்கட்டை செய்ய பொருத்தமான அரிசி.
மருத்துவ குணங்கள்
- எளிய முறையில் செரிமானம் ஆகிறது.
- நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. தசைகளை வலுவாக்கும். தோலில் பளபளப்பு உண்டாக்கும். சக்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவாகும்.
தூயமல்லி அரிசி (Thooyamali Rice)
இதுவும் தமிழர்களின் பாரம்பரிய அரிசி வகையில் (Traditional rice) ஒன்றாகும்.
கதிர் வரும் சமயத்தில் பார்ப்பதற்கு மல்லிகை மொட்டு போல் இருக்கும். இதனால் தூயமல்லி என கூறப்படுகிறது. பூச்சிகொல்லி தேவையற்ற அரிசி வகை இதுவாகும்.
மருத்துவகுணங்கள்
- இந்த அரிசி நரம்பு மண்டலத்தை காக்கிறது
- சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவு ஆகும்
- எளிய முறையில் சமைக்கவும் மற்றும் செரிமான கோளாறு அற்ற ஒன்றாகும்
- சரும சுருக்கம் குறைக்கிறது. உடலில் உள்ள உள் உறுப்புகளின் இளமை காக்கின்றது
- உடல் வளர்ச்சி, மனவளர்ச்சி மேம்படும்.
சீரக சம்பா (Jeera Rice)
இந்த ரகம் அரிசி தமிழர் பாரம்பரியம் அரிசியாகும்.இங்கு உள்ள அரிசி ரகத்தில் சற்று விலை உயர்ந்த ரகமாகும். இதன் ருசியானது தனித்துவமானது. இந்த ரக நெல் சற்றே கடினமாக இருக்கும்,ஆனால் சமைத்த பின் மென்மையாக இருக்கும்.
நோய் எதிர்ப்புசக்தி அதிகரிக்க உதவும். பார்ப்பதற்கு சீரகம் போல் இருப்பதால், சீராக சம்பா“ எனப்படுகிறது.
இந்த அரிசி ரகம், புற்றுநோய் எதிரானது, உடலில் உள்ள கெட்ட கொழுப்பினை குறைக்கவல்லது, இதயம் சீராக்க பயன்படுகிறது மற்றும் மலச்சிக்கல் செரிமான கோளாறு சீராகும்.
மருத்துவ குணங்கள்
- இந்த அரிசி நரம்பு மண்டலத்தை காக்கிறது.
- சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவு ஆகும்.
- எளிய முறையில் சமைக்கவும் மற்றும் செரிமான கோளாறை அகற்றும்.
- சரும சுருக்கத்தை குறைக்கிறது, உடல் அழகாகும். ஆரோக்கியம் மேம்படும்.
- உடல் வளர்ச்சி, மனவளர்ச்சிக்கு மேம்படும்.
- உள் உறுப்புகளின் இளமையை காக்கின்றது.
கருடன் சம்பா (Garudan Rice | Karudan Rice)
காடைகுழந்தான் அல்லது கருடன் சம்பா தமிழர்களின் பாரம்பரிய நெல் வகைகளில் இதுவும் ஒன்று. தமிழ் மக்கள் உணவுக்காகத் தேர்ந்தெடுக்கும் முதன்மையான நெல் வகைகளில் இதுவும் ஒன்று.
கருடன் கழுத்தில் வெள்ளையாக இருப்பதுபோல், கருடன் சம்பா நெல்லின் நுனிப் பகுதியில் வட்டமான வெள்ளை நிறம் காணப்படுவதால், அப்பெயர் பெற்றதாக கருதப்படுகிறது.
மருத்துவ குணங்கள்
- நோய் எதிர்ப்பு சக்தி ஏற்படுத்ததும்.
- ஆரோக்கியமானது. உணவு மற்றும் சிற்றுண்டி செய்ய ஏற்றது.
- பச்சையம் மிக குறைவான உள்ள அரிசி வகைகளில் இதுவும் ஒன்று மேலும் உடலை வலிமையாக்க உதவும்.
- சிறுநீர் தொற்று ,உபாதைகளை சீர் செய்ய உதவும். உடல் கட்டிகளை (Body Tumors) குணமாக்க உதவும்.
- ரத்த சோகை குறைபாடு உள்ளவர்களுக்கு ஏற்ற உணவாககும்.
10. குடவாழை
புரதசத்து, நார்சத்து, தாதுசத்து மற்றும் உப்புச்சத்து, குடவாழை அரிசியில் அதிகம் உள்ளது.
தமிழ்நாட்டின் பாரம்பரிய நெல் வகையில் இதுவும் ஒன்றாகும். இயற்கை சீற்றங்களைத் தாங்கி வளரும்.கடலோரப் பகுதியில் உள்ள நிலத்தில், கடல் நீர் உட்புகும் நிலத்தில் சாகுபடி செய்ய ஏற்ற ரகம் இதுவாகும்.
தமிழகத்தின் நாகப்பட்டினம், வேதாரண்யம் பகுதியில் உள்ள விவசாயிகள் குடவாழை நெல் பயிர் சாகுபடி செய்கின்றனர்.
இந்தப் பாரம்பரிய நெல் வகைகளைச் சாகுபடி செய்யும் வழக்கம்,இன்றளவும் வேதாரண்யம் உழவர்களிடம் உள்ளது. மூப்படைந்த நிலையில் இந்நெல்லின் கதிர்கள் நான்கு திசைகளிலும் குடை விரித்ததுபோல் காணப்படும்.
பார்ப்பதற்கு நெல் மணிகள் சிகப்பு நிறமாக இருக்கும். அரிசி சிகப்பு நிறத்தில் இருக்கும்.
மருத்துவ பயன்கள்
- பலமான உடல் மற்றும் பளபளப்பான தேக அமைப்பு உண்டாகும்.
- செரிமான கோளாறு நீங்கும்.
- தோல் வியாதிகள் நீங்கும்.
- குடல் சுத்தமாகும். மற்றும் வயிற்று பிரச்சனை குணமாகும்.
- மலச்சிக்கல் கோளாறு நீங்கும்.
- ரத்ததில் உள்ள சர்க்கரை அளவை குறைத்து உடலை உற்சாகமாக வைக்க உதவுகிறது.