மறந்திட கூடாத பழந் தமிழரின் உணவு(Traditional Tamil food)

பல நூற்றாண்டுகளாக தென் இந்தியா, இலங்கை மற்றும் பிற நாடுகளில் வசிக்கும் தமிழர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட தமிழரின் சமையல் (Traditional Tamil food), உலகின் சிறந்த சமையல்களில் ஒன்றாகும்.

இயற்கையுடனும் காலநிலைகளுடனும் இணைந்த ஒரு கிராமிய சூழலிலேயே இச்சமையல் வளர்ந்தது. பலவகை உணவுகளை சுவையுடன் சமைக்க விருந்தோம்ப தமிழர் சமையற்கலை(Traditional Tamil food)
உணவுடனேயே மருந்தையும் சேர்க்கும் வழிசொல்கின்றது.
பல்வகை மரக்கறிகள் (காய்கறிகள்), சுவையூட்டும் நறுமணம் தரும் பலசரக்குகள், கடலுணவுகள் தமிழர் சமையலில் இன்றியமையா இடம் பெறுகின்றன.

சோறும் கறியும் தமிழரின் முதன்மை உணவாகும். கறிகளில் பலவகையுண்டு; எடுத்துக்காட்டுக்கு, மரக்கறிக் குழம்பு, பருப்பு, கீரை, வறை, மசியல், மீன்கறி என்பன.

பொதுவாக, தமிழர் உணவுகள் காரம் மிகுந்தவை. தேங்காய், மிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம்,உள்ளி, இஞ்சி உட்பட பல்வகை பலசரக்குகள் கறிகளுக்கும் பிற பக்க உணவுகளுக்கும் சேர்க்கப்படுவது வழக்கம்.

மூன்று வேளை உணவு

பொதுவாக, தமிழர்கள் காலை வேளைகளில் தேநீர் அல்லது காப்பி அருந்தும் வழக்கம் உடையவர்கள். சிலர் நீர் அல்லது பழரசங்கள் அருந்தும் வழக்கமும் உடையவர்கள். காலைஉணவாக இட்லி, தோசை, இடியப்பம் போன்றவற்றை சாம்பார், சட்னி போன்றவற்றுடன் உண்பர். அடிமட்ட, நடுத்தர குடும்பங்களில் காலையில் சோறுண்பவர்களும் உளர். பழைய சோறு உண்ணும் வழக்கமும் தமிழர்களிடம் உண்டு. உணவகங்களில் காலையில் வெண் பொங்கல், வடை, தோசை, இட்லி, பூரி போன்றவை கிடைக்கும்.
நன்பகல் உணவே தமிழர்களின் முதன்மையான உணவு ஆகும். சோறும் கறியுமே தமிழரின் முதன்மையான நன்பகல் உணவாக விளங்குகிறது. பலவித பக்க உணவுகளும் மதிய வேளைகளில் சேர்த்து உண்ணப்படுவதுண்டு. இரசம், தயிர், மோர் போன்ற நீர்ம உணவுகளும் மதிய உணவில் சேர்த்து உண்ணப்படுகின்றது.
பிற்பகலிலும் மாலையிலும் சிற்றுண்டிகளும் பழங்களும் உண்ணும் வழக்கமும் பலருக்கு உண்டு. தேநீர் கடைகள்,வெதுப்பகங்கள் ஆகியவற்றில் இந்நேரத்தில் வடை, பஜ்ஜி, போண்டா ஆகியவை விரும்பி வாங்கி உண்ணப்படுகின்றன.
இரவு உணவாக வீடுகளில் சோறு, தோசை, பிட்டு, இடியப்பம், பூரி, இட்லி,றொட்டி, போன்றவை உண்ணப்படுகின்றன.  

பிரதான உணவுகள் (Traditional Tamil food)

சோறு
வரகுச் சோறு

சாமைச் சோறு
தினைச் சோறு
அரிசிச் சோறு
கம்பஞ் சோறு
புளிச் சோறு
தயிர் சோறு
பழஞ் சோறு
எலுமிச்சைச் சோறு
பருப்புச்சோறு
புதினாச்சோறு

தமிழர் சமையற்கலை,annaiamdi.com,அனனைமடி,மறந்திட கூடாத பழந் தமிழரின் உணவு,Tamil Cuisine, Unforgettable Old Tamil Food,பாரம்பரிய தமிழர் உணவு

பொங்கல் உணவு
சர்க்கரைப் பொங்கல்
கற்கண்டு பொங்கல்


பிட்டு
அரிசிப் புட்டு
கேழ்வரகுப்புட்டு
கோதுமைப் புட்டு
இடியப்பம்
தோசை
ரவா தோசை
வெங்காயத் தோசை
மசால் தோசை
குண்டு தோசை
இட்லி
அப்பம்
கஞ்சி
உளுந்துக் கஞ்சி
கம்புக் கஞ்சி


களி

கேழ்வரகுக் களி
உளுந்தங் களி
வெந்தயக் களி
உப்புமா
அடை
சீடை
உப்புச் சீடை
சீப்பு சீடை
சப்பாத்தி
ரொட்டி
பூரி (உணவு)
ஊத்தப்பம்

கறிகள்

குழம்பு (மரக்கறிகள் பட்டியல்: கத்தரி, வெண்டை, முருங்கை, உருளை கிழங்கு, கயூ, சோயா, டோfயு, காளான், கரட் சாம்பார்)
 மீன் குழம்பு
 மசியல் (பூசனி, மரவெள்ளி)
வறை
 பருப்பு
கீரை
பிரட்டல், கூடு
 தீயல்
மசாலா


இறைச்சிகள்

பின்வருவன கறி, கூட்டு, குழம்பு, சொதி, கூழ், வறை, பொரியல் ஆக அல்லது பிற உணவுகளுடன் சேர்த்து உண்ணப்படுகின்றன.
ஆடு
கோழி/காட்டுக் கோழி
கொக்கு
நாரை

மாடு

பன்றி
வெள்ளிலி
அணில்
மான்
மரை
உடும்பு
தொங்கு மான் (குரங்கு)

கடலுணவுகள்
பின்வருவன கறி, கூட்டு, குழம்பு, சொதி, கூழ், வறை, பொரியல் ஆக அல்லது பிற உணவுகளுடன் சேர்த்து உண்ணப்படுகின்றன.
பல வகை மீன்கள்,கணவாய்,நண்டு,இறால்,மட்டி,கடல் தாமரை

சிற்றுண்டிகள்

தமிழர் சமையற்கலை,annaiamdi.com,அனனைமடி,மறந்திட கூடாத பழந் தமிழரின் உணவு,Tamil Cuisine, Unforgettable Old Tamil Food,பாரம்பரிய தமிழர் உணவு

இனிப்பு சிற்றுண்டி
லட்டு
மோதகம்
கொழுக்கட்டை

கேசரி
தேன் முறுக்கு
தேன்குழல்
வாய்ப்பன்
 புளிச்சல்
சிப்பி
வட்டிலப்பம்
தோடு (பலகாரம்)
பயத்தம் பணியாரம்
பனங்காய்ப் பணியாரம்
வெள்ளு ரொட்டி
அவல்
காப்பரசி
சீனி அரியாரம்
போண்டா
சிற்றுண்டி
சிற்பி
அச்சுப்பலகாரம்
அதிரசம் கார்த்திகைப் பொரி
தொதல் நெய்யப்பம்
பயற்றமுருண்டை
 பனாட்டு
எள்ளுப்பாகு,பூந்தி,போளி,சீயம்,சீடை,தட்டை (உணவு)
அல்வா,எள்ளுருண்டை,அர்த்தப் பணியாரம்/நெய்யப்பம்,பொரிவிளாங்காய்,அவல்,உழுத்தம் சுவாலை,முட்டை மா
பொரி விளாங்காய்
ஓட்டப்பம்
அதிரசம்
எள்ளுப்பாகு

கார சிற்றுண்டி
வடை

பருத்தித்துறை வடை,கடலை வடை,உளுந்து வடை, கீரைவடை,முறுக்கு,பகோடா,சமோசா,சுண்டல்,ஓமப்பொடி,காராச்சேகு,காரச் சீடை

நீர்ம உணவுகள்
ஆடிக் கூழ்,ரசம்,சொதி,சூப்,தயிர்,மோர்,கூழ், பாயாசம்

மற்றயவை
கருவாடு,அப்பளம்,வடகம்,ஊறுகாய்,பொடி,சட்னி,சம்பல், வற்றல்,நெய்,பச்சடி,பொரியல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *