திரிகோணாசனம் செய்வோம் (Trikonasana benefits)

திரிகோணாசனம் (trikonasana ) உடலிலுள்ள நாடி நரம்புகளை எல்லாம் இயக்கி ,உடலை சுறுசுறுப்புடன் வைத்திருக்கும் சிறந்த பலன்களை தரும் யோகாசனம்.

திரிகோணாசனம் செய்யும் முறை

முதலில் எழுந்து நிற்கவும், அந்த நேரத்தில் உங்கள் கைகள் இரு பக்கவாட்டில் இருக்க வேண்டும். உங்கள் கால்கள் 45 அங்குல அல்லது குறைந்தபட்சம் 30 அங்குல இடைவேளையில் இருக்கவேண்டும். இரண்டு கைகளையும் தோளுக்கு இணையாக உயர்த்தி உள்ளங்கை தரையைப் பார்ப்பது போல நிற்கவும். 

அதே நிலையில் வலது புறமாக வளைந்து வலது கையால் வலது பாதத்தை தொடவும். இந்த நிலையில் முழங்காலை மடக்குவது, இடுப்பை அசைப்பது கூடாது. இடது கையை நேராக உயர்த்த வேண்டும். ஒரு சில வினாடிகள் இருந்த பிறகு அடுத்த நிலைக்கு செல்ல வேண்டும்.

இப்போது இடது புறமாக வளைந்து இதே முறையில் இடது பக்கம் செய்ய வேண்டும். திரிகோணாசனம் (trikonasana) இரு பக்கமும் 1 நிமிடம் செய்ய வேண்டும்.

குனியும் போது வெளிமூச்சு, ஆசனத்தின் போது இயல்பான மூச்சு, நிமிரும் போது உள்மூச்சும் இருக்குமாறு கவனித்துக் கொள்ளவும்.

உடல் ரீதியான பலன்கள்

 முதுகெலும்பு வளைந்து கொடுக்கும் தன்மை மேம்படுத்தபடும்.தோள்பட்டை சீரமைப்பு சரிசெய்யவும், கழுத்து, முழங்கால்கள் மற்றும் தோள்களில் விறைப்பு குறையும். இரைப்பை அழற்சி, முதுகுவலி, அஜீரணம், வாய்வு மற்றும் அமிலத்தன்மை, முதுகு வலி போன்றவைக்கு நிவாரணம் தரும்.

அட்ரினல் சுரப்பிகள் நன்கு தூண்டப்படுகின்றன. கல்லீரல், மண்ணீரல், சிறுநீரகங்கள், கணையம் முதலியவை நன்கு அழுத்தப்படுகின்றன. இடுப்பு, இடுப்பின் கீழ்ப்பகுதி மெலிதாகின்றது. கெண்டைக்கால் தொடைப்பகுதி வலுவடைகிறது.

Trikonasana benefits,yoga,Trikonasana

திரிகோணாசனத்தால் (trikonasana ) குணமாகும் நோய்கள்

  • பாதம், நீரிழிவு நோய்கள், சுவாசக் கோளாறுகள், சிறுநீரகக் கோளாறுகள் ஆகியவற்றிற்கு நல்லது.
  • மலச்சிக்கலை நீக்கி, செரிமானத்தை மேம்படுத்தி பசியினை உண்டு பண்ணுகின்றது.
  • முதுகு, கழுத்து, முழங்கை, இடுப்புப் பகுதி, முழங்கால் முதலியவற்றில் உள்ள வலியினைப் போக்குகிறது. வாயுப்பிடிப்பு, கூன்முதுகு முதலியவற்றிற்கும் பலனளிக்கிறது.
  • தொடைகள், முழங்கால்கள் மற்றும் கணுக்கால் ஆகியவற்றை நீட்டி பலப்படுத்துகிறது.
  • தோள்கள், மார்பு மற்றும் முதுகெலும்பு. வயிற்று உறுப்புகளைத் தூண்டுகிறது.
  • மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.
  • மாதவிடாய் நிறுத்தத்தின் அறிகுறிகளைப் போக்க உதவுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *