திரிபலாவும் பயனும் (Uses of triphala)
மருத்துவ குணங்கள் மிகுந்த நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் ஆகிய மூன்றையும் முறையாக பக்குவம் செய்து பொடியாக்கி “திரிபலா(triphala) சூரணம்” தயாரிக்கப்படுகிறது.
திரிபலா அனைத்து மூலிகை சிகிச்சைகளுக்கும் பொருத்தமான ஒன்றாக கருதப்படுகிறது. திரிபலா (triphala) சூரணத்தின் அற்புதமான மருத்துவ பலன்கள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
சிலருக்கு சாப்பிட்ட உணவு சரியாக செரிமானம் ஆகாமல் இருக்கும்.குறிப்பாக, உணவுப்பாதையில் மலத்தினை வெளித்தள்ளும் குடலியக்கத்தை சீராக்க உதவுகிறது. செரிமான பிரச்சனை இருப்பவர்கள் தினமும் திரிபலா சூரணத்தை உணவில் சேர்த்து வர செரிமானம் மற்றும் மலச்சிக்கல் பிரச்சனைகள் நீங்கும்.

- திரிபலா(triphala) சூரணம் ரத்தத்தைச் சுத்தம் செய்து ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.
- மேலும் ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்கச் செய்கிறது. இதனால் இது ரத்த சோகையையும் சரிசெய்கிறது.
- திரிபலாவில் உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகம் உள்ளது.
- மேலும் அழற்சியால் உண்டாகும் தோல் பிரச்சனைகள் விரைவில் சரியாகும்.
- திரிபலா சூரணத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
- மேலும் நமது உடலில் இயற்கையாகவே அமைந்திருக்கும் நோய் தடுப்பு அரண்களை தாண்டி உடலின் உள்ளே நுழையும் அனைத்து கிருமிகளையும் எதிர்த்துப் போராடும்.
மூட்டு வலியை குணபடுத்தும் திரிபலா
திரிபலா (triphala available in Amazon) மூலிகையை கொண்டு தயாரிக்கப்பட்ட ஆயுர்வேத மருந்துகள் மற்றும் எண்ணெய்கள் பல்வேறு மூட்டுவலிகளை போக்கிட உதவுகிறது.
திரிபாலா சூரணத்தை தினமும் 5 கிராம் அளவிற்கு எடுத்து அதனை தேனில் குழைத்து, வலி இருக்கும் இடத்தில் பூசி வர, மூட்டு வலி விரைவில் குணமாகும்.
திரிபலா கணையத்தினைத் தூண்டி இன்சுலினை சுரக்கச் செய்து சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. சர்க்கரைநோய் உள்ளவர்கள் காலையில் தே .க. அளவு திரிபலாவை சுடுநீரில் கரைத்து குடித்துவர சர்க்கரையளவு கட்டுக்குள் இருக்கும்.
சளி, ஆஸ்துமா, பிராங்கைடிஸ் போன்ற சுவாசம் நோய்களை நீக்கும் ஒரு அற்புத மருந்தாக திரிபலா சூரணம் இருக்கிறது. இது சுவாசப் பாதையிலுள்ள அடைப்புகளை நீக்கி சீரான சுவாசம் ஏற்பட உதவுகிறது.
ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி சரும அழகிற்கும் திரிபலா(triphala)

திரிபலா இரத்தத்தினைச் சுத்தம் செய்து இரத்தத்திலுள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. சரும நோய்களுக்கான மருத்துவத்தில் பெரும் பங்காற்றுகிறது. இது தொற்று நோய்களையும் தீர்க்கும் குணம் கொண்டுள்ளது.
தோலில் அரிப்பு, கருமை, சிவப்புப் புள்ளிகள் இருந்தால், திரிபலவை குழைத்துத் தடவிவர விரைவில் சரியாகும். தொடர்ந்து, திரிபலா (triphala) சாப்பிட்டு வருபவர்களுக்கு, சருமம் மினுமினுப்பு அடையும்.
உடல் பருமனானவர்கள் திரிபலாவை உட்கொள்வது மிகவும் பயன் தரும். இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைத்து சீரான உடல் எடையைப் பெற உதவுகிறது.
திரிபலா பவுடராகாவும்,குளிசைகளாகாவும் இங்கே பெற்றுக் கொள்ளலாம்.
கண்கள் தொடர்பான பிரச்சனைகளுக்கு திரிபலா
முகத்தின் அழகைக் கெடுப்பதில் முக்கியமானது கருவளையம். திரிபலாவை (triphala) பாலில் கலந்து, கண்களை சுற்றி பூசி வர ,கருவளையம் விரைவில் சரியாகும். உடற்சூடு காரணமாக சிலநேரங்களில் கண் எரிச்சல் வரும்.அப்படி உள்ளவர்கள் திரிபலாவை நீரில் கரைத்து, அந்த தண்ணீரை கொண்டு கண்களை கழுவி வர, கண்கள் தொடர்பான பிரச்சனைகள் சரியாகும்.

திரிபலா(triphala) பொடியை சோற்றுக் கற்றாளை சதையுடன் கலந்து, தலையில் தடவி ஊறவைத்து, தலையை அலசி வர பொடுகு பிரச்சனைகள் குணமாகும். முடி உதிர்தல் நின்றுவிடும்.விரைவில் முடி அடர்த்தியாக வளரும். மேலும் திரிபலாவை ஊறவைத்த தண்ணீரில் எலுமிச்சை சாறு கலந்து தலையில் தேய்த்து முழுகி வந்தாலும் தலையில் இருக்கும் பொடுகு முற்றிலும் நீங்கிவிடும்.இவ்வாறு திரிபலா(triphala) சர்வரோக நிவாரணியாக பயன்படுகின்றது.
நாளும் ஒரு தே.க அளவு திரிபலாவை சுடுநேரில் கரைத்து குடியுங்கள். பல பிரச்சனைகளுக்கு ஒரு மருந்தால் தீர்வு கிடைக்கும்!