உச்சி பிள்ளையார் வரலாறு (Uchi-pillaiyar-kovil)
ராவணனின் சகோதரனான மூன்று தலை கொண்ட திரிசிரன், இங்குள்ள ஈசனைப் பூஜித்து பேறு பெற்றதால், ‘சிராப்பள்ளி’ என்று பெயர் கொண்டதாம்.
திரிசிரன் தங்கிய இடம் என்பதால் சிராப்பள்ளி என்றானதாக புராணம் கூறுகிறது.சமணர்களின் வாழ்விடமாக திருச்சி மலையின் குகைகளும் படுகைகளும் இருந்ததாலும், சமணர்களின் தலைவரான சிரா என்பவர் இங்கு வசித்ததாலும் இது சிராப்பள்ளி என்றானது என்று வரலாறு கூறுகின்றது.
சீராப்பள்ளி என்றால் பெருமை கொண்டவர்களின் தங்குமிடம் என்பதால் அது மருவி சிராப்பள்ளி என்றானதாகவும் ஒரு கருத்து உண்டு.
உச்சிக்குப் பிள்ளையார் வந்த கதை(Story of Uchi-pillaiyar)

ஸ்ரீராம பட்டாபிஷேகத்துக்குப் பிறகு ஸ்ரீராமரால் அளிக்கப்பட்ட திருமாலின் சயனகோல ரங்கநாதரின் விக்கிரகத்தை இலங்கையில் பிரதிஷ்டை செய்ய விரும்பினார்.
செல்லும் வழியில் திருவரங்கத்தில் காவிரிக் கரையில் நீராட விரும்பிய விபீஷணன், அங்கிருந்த சிறுவன் ஒருவனிடம் கொடுத்து, இதை கீழே வைத்து விடாதே.
வைத்தால் எடுக்க முடியாது என்று எச்சரித்து சென்றான். திருமாலின் விருப்பம் அங்கேயே பள்ளி கொள்ள வேண்டும் என்பது. அதன்படி சிறுவன் அந்த விக்கிரகத்தைக் கீழே வைத்து விட்டான்.
ரங்கநாதருக்கு அங்கேயே தங்கிவிட்டார். இது கண்டு கோபமுற்ற விபீஷணன், அந்த சிறுவனைத் துரத்திக் கொண்டு மலை உச்சிக்கு வந்து தலையில் ஓங்கிக் குட்டினான்.
அண்டமே நடுங்க ஒலித்த அந்த குட்டால் சிறுவனின் தலையில் காயம் உண்டானது. சிறுவனே பிரணவப் பொருளான கணநாதராய், முழுமுதற் பொருளாகத் தோன்றி விபீஷணனுக்கு அருளினார்.
அவரே அங்கு காலமெல்லாம் எழுந்தருளி அருள்பாலிப்பதாகவும் வாக்கு அளித்தார். இப்படித்தான் உச்சிக்குப் பிள்ளையார் வந்த கதை எனப்படுகிறது. இன்றும் இங்குள்ள விநாயகர் சிலையின் தலையில் ஒரு வீக்கம் இருப்பதைப் பார்க்கலாம்.
தாயுமானசுவாமி உருவான கதை

10-ஆம் நூற்றாண்டில் இப்பகுதியை ஆண்ட சிற்றரசரான நாராயண வேம்பையர் கோன் காலத்து கல்வெட்டு ‘சிராமலை’ என்றும், ஸ்ரீராஜராஜனின் கல்வெட்டு ‘சிற்றம்பர்’ என்றும், அருணகிரிநாதரும் தாயுமான சுவாமியும் இவ்வூரை ‘சிரகிரி’ அதாவது தலையான மலை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், மாணிக்க வாசகர், ஐயடிகள் காடவர்கோன் நாயனார், அருணகிரிநாதர், தாயுமான அடிகள், சைவ எல்லப்ப நாவலர் (செவ்வந்திப் புராணம்), வேம்பையர் கோன் நாராயணன் (சிராமலை அந்தாதி), மகா வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை (யமக அந்தாதி) ஆகியோர் இந்நகரின் தொன்மை மற்றும் பெருமைகள் குறித்து பலவாறு பாடி உள்ளார்கள்.
திருச்சி மலை 273 அடி உயரம் கொண்டது. இந்த மலைப் பாறைகள் சுமார் 230 கோடி ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமையானது என்கிறது வரலாறு.
இமயமலையின் காலமே 4 கோடி ஆண்டுகள் தான் என்கின்றன ஆய்வுகள்.
ஆறாம் நூற்றாண்டில் பல்லவர்கள் காலம் தொடங்கி சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் பிரிட்டன் ஆட்சியாளர்கள் வரை பல்வேறு அரசுகளையும் போர்களையும் சந்தித்த சாதனை கொண்டது இந்த மலையும் அதில் உள்ள கோட்டையும்.
நீண்டு வரும் வரலாறுகளை விலக்கிவிட்டு ஆன்மிகத்தில் நுழைந்தாலும் மலைக்கோட்டை மூன்று பெருமைமிகு வழிபாட்டு கோயில்களைக் கொண்டு சிறப்புற்று விளங்கி வருகிறது.
மலைக்கோட்டை மூன்று பெருமைமிகு ஆலயங்கள்
அதில் விழுந்த ஒரு துண்டே சிராப்பள்ளி மலை என்றும், மற்றவை திருக்காளத்தியும், திரிகோண மலையும் என்றும் புராணங்கள் கூறுகின்றன.
மலையின் தொடக்கத்தில் அடிவாரத்தில் மாணிக்க விநாயகர் கோயில், மலையின் மேலே ஓம்கார வடிவம் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயில், மலையின் இடையே அமைந்துள்ள தாயுமானவர் கோயில் ஆகியவை எழுந்தருளி உள்ளன.
இதைத் தவிர மலையின் இடையே பல்லவர் கால குடைவரை கோயிலும், பாண்டியர் கால குடைவரை கோயிலும் உள்ளன. திருச்சி மலையும் பக்தர்களால் ‘தட்சிண கயிலாயம்’ என்று போற்றப்படுகிறது.
இந்த மாபெரும் மாணிக்க மலையின் உச்சியில் மங்கலநாதராக ஜொலிப்பவர் உச்சிப் பிள்ளையார் (Uchi-pillaiyar) .
மலை அடிவாரத்தில் எழுந்தருளி உள்ள மாணிக்க விநாயகரை தரிசித்து விட்டு சுமார் 417 படிகள் மலை மீது ஏறி உச்சிக்கு சென்றால் ஓம்கார ரூபமாக அருளும் பிள்ளையாரை தரிசிக்கலாம்.
வழியெங்கும் வரலாற்றுச் சுவடுகளும் நினைவு மண்டபங்களும் கொண்டுள்ளன இம்மலை.
பல்லவர்கள் ஆட்சியில் 7-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த உச்சிப் பிள்ளையார் கோயில், பல்வேறு காலகட்டங்களில் புனரமைக்கப்பட்டு விரிவானது.
இந்த கோயிலிலிருந்து கீழே நோக்கினால், படிக்கட்டுகளும், மலையின் தோற்றமும், விநாயகரின் தும்பிக்கை போல் தோற்றமளிக்கும் என்பது வியப்பான உண்மை.
உச்சிப் பிள்ளையார் கோயிலில் இருந்து திருச்சி நகரையும், திருவரங்கத்தையும், காவேரி ஆற்றையும், கொள்ளிடத்தையும் காண்பது என்பது அலாதியான ஆனந்ததைத் தரும் என்பார்கள் திருச்சிவாசிகள்.
செலவில்லாத ஒரு சுற்றுலாத் தலமாகவும் உச்சிப் பிள்ளையார் (Uchi-pillaiyar) கோயில் விளங்கி வருகிறது என்பார்கள் திருச்சியின் குடும்பத் தலைவர்கள்.
சதுர்த்தி நாள்கள், விநாயகர் சதுர்த்தி, ஆங்கில – தமிழ் புத்தாண்டுகள் இந்த கோயிலில் விசேஷமான நாள்கள் எனலாம்.
காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த கோயிலின் திருநடை திறந்திருக்கும். திருச்சி மாநகரின் மையத்தில் பிரமாண்டமாக, எங்கிருந்து நோக்கினாலும் காணும் வகையில் இந்தக் கோயில் அமைந்துள்ளது.