மகளிருக்கான ஆரோக்கிய கஞ்சி (Ulunthu kanji)
நம் மொன்னோரின் உணவுமுறையில் எப்போதுமே உளுந்துக்கு முக்கியத்துவம் உண்டு
அழகும் ஆரோக்கியமும் முக்கியம் என்பவர்கள் வாரத்திற்கு ஒரு முறையாவது உளுந்தங்கஞ்சி(Ulunthu kanji), உளுந்தங்களி சேர்த்து வாருங்கள்.
உடல் ஆரோக்கியத்தின் ரகசியங்களில் இதுவும் ஒன்று.
உளுந்தங்கஞ்சி தரும் பலன்கள்
முக்கியமாக விளையாட்டு வீரர்கள்,ஓயாமல் ஓடிக் கொண்டே இருக்கும் உழைப்பாளிகள் தினமும் இதனை எடுத்துக் கொள்ளலாம்.முதுகுவலி, இடுப்புவலி இரண்டுமே இருக்காது.
மலையேற்றம் மேற்கொள்பவர்கள் இதனை உட்கொண்டால் உடல்சோர்வே இருக்காது.
பெண்களுக்கு கர்பப்பை மிகவும் வலுப்பெறும்.
தேவையான பொருட்கள் (Ingredients of Ulunthu kanji)
உளுத்தம் பருப்பு – ஒரு கப் (கறுப்பு உளுந்து நல்லது)
பச்சரிசி – அரை கப்
வெந்தயம் – ஒரு தேக்கரண்டி
பூண்டு- 20 பல்லு
பனை வெல்லம் அல்லது கருப்பட்டி- இனிப்புக்கு ஏற்றது போல்
தேங்காய் – ஒரு மூடி
செய்முறை (Ulunthu kanji recipe)
உளுத்தம்பருப்பு, பச்சரிசி, வெந்தயம், உரித்த பூண்டு அனைத்தையும் போட்டு ஆறு கப் தண்ணீர் ஊற்றி அவிய விடவும்.(குக்கரில் என்றால் 8 விசில் வைக்க வேண்டும்).
அப்படியே வைத்தால் அடிப்பிடித்துவிட வாய்ப்பு அதிகம். இது தயாராவதற்குள் பனை வெல்லம் அல்லது கருப்பட்டியை சிறிதளவு தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சி வைத்துக் கொள்ளவேண்டும். தேங்காய் அரைத்து பாலும் எடுத்து வைத்துக் கொள்ளவேண்டும்.
நன்றாக அவிந்ததும் சூடாக இருக்கும் போதே நன்கு மசித்துவிட்டு வெல்லப்பாகு, தேங்காய்ப் பால் இரண்டையும் ஊற்றி சூடாக சாப்பிடவும்.
தேங்காய் துருவியும் போடலாம். செரிமானப்பிரச்சனை உள்ளவர்கள் தேங்காயை மட்டும் தவிர்த்து விடலாம்.
