சீனியைத் தவிர்த்து பனைவெல்லத்தை பயன்படுத்துவோம் (Use Palm sugar)
சாதாரணமாக பயன்படுத்தும் வெள்ளை சீனியை விட பனைவெல்லத்தை (Use Palm sugar) பயன்படுத்துவது மிகுந்த ஆரோக்கியம் தரும். அதில் கூடுதலான மருத்துவத் நன்மைகள் உள்ளன.
இதனாலேயே இதை இன்றும் கிராமங்களில் பயன்படுத்துகின்றனர். பனங்கருப்பட்டியை இனிப்புக்காக மட்டுமல்லாது, உடல் ஆரோக்கியம் கருதியுமே, கிராம பகுதிகளில் அதன் பயன்பாடு நிலைத்து நிற்கின்றது.
கிராமங்களில் எப்போதுமே பனங்கருப்பட்டி காபி என்றால் எக்ஸ்டிரா ஸ்பெஷல்தான். பதநீரை காய்ச்சி அதிலிருந்து பெறப்படும் கருப்பட்டிக்கு சுவை, மணம் இருப்பதோடு மட்டுமல்லாமல், மருத்துவ குணமும் அதிகம் இருக்கிறது.
கருப்பட்டி என்பது பனையில் செய்யப்படும் ஒரு இனிப்பு. இதை பனை வெல்லம் அல்லது பனங்கருப்பட்டி என்கிறோம்.
பனையின் முதன்மையான விளைபொருள் பதநீர்.பதநீரில் இருந்து கருப்பட்டி என்கிற வெல்லம் தயாரிக்கப்படுகிறது. இதனைப் பனைவெல்லம், பனங்கட்டி, பனங்கருப்பட்டி என்றும் அழைப்பர். பதநீரை எடுத்து அவற்றை நன்றாகக் காய்ச்சினால் கருப்பட்டி கிடைக்கும்.
பதநீரிலிருந்து பனங்கட்டி, பனம்பாணி, பனஞ்சீனி, பனங்கற்கண்டு, வெல்லம், பனம் மிட்டாய், பனங்கூழ் ஆகியவற்றைச் செய்வர்.
இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் பனங்கருப்பட்டியானது, நமது உடலை சுத்தப்படுத்தி செரிமானத்திற்கும் உதவிபுரிகிறது.

பனஞ்சீனியின் மருத்துவ பயன்கள்
- கருப்பட்டி ரத்தத்தை சுத்திகரித்து உடலுக்கு சுறுசுறுப்பைக் கொடுக்கும். மேலும் மேனி பளபளப்பு பெறும்.
- கருப்பட்டியில் சுண்ணாம்பைக் கலந்து சாப்பிட்டால் உடல் சுத்தம் அடையும்.
- சீரகத்தை வறுத்து சுக்குக்கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால், நன்கு பசி எடுக்கும்.
- ஓமத்தை, கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால், வாயுத் தொல்லை நீங்கும்.
- குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் வறட்டு இருமல், நாள்பட்ட சளித்தொல்லை நீங்கும்.
- சாதாரண சர்க்கரைக்குப் பதில் கருப்பட்டியைப் (Use Palm sugar ) பயன்படுத்தினால் பற்களும், எலும்புகளும் உறுதியாகும்.
பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத்தால், இடுப்பு வலுப்பெருவதுடன், கருப்பையும் ஆரோக்கியமாக இருக்கும்.
நீரிழிவு நோயாளிகள் கைக்குத்தல் அரிசி சாதத்துடன் கருப்பட்டியைக் கலந்து சாப்பிட்டு வந்தால், சர்க்கரையின் அளவு கட்டுபாட்டில் இருப்பதுடன் அடிக்கடி சிறுநீர் போவதும் குறையும்.
குழந்தைகள் முதல் பெரியவர் வரை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நமது உடலுக்கு தேவையான கல்சியம் இதில் கிடைக்கிறது. சுக்கு கருப்பட்டி பெண்களின் கர்ப்பப்பைக்கு மிகவும் ஏற்றது.
சுக்கு, மிளகு கலந்து கருப்பட்டியை குழந்தை பெற்ற பெண்கள் சாப்பிட்டால் பால் நன்றாக சுரக்கும். அந்தத் தாய்ப்பாலைக் குடிக்கும் குழந்தைகளுக்கு நல்ல ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.

காபியில் சர்க்கரைக்கு பதில் கருப்பட்டியை சேர்த்து குடித்தால், நமது உடலுக்கு சுண்ணாம்புச் சத்தும் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாக கிடைக்கிறது.சுவையும் அதிகமாக இருக்கும்.
காபிக்கு மட்டுமன்றி தேநீர், நெல்லிக்காய் ஜூஸ்,தேசிக்காய் ஜூஸ் போன்றவற்றிற்கும் அதி அற்புதமான சுவை கொடுக்கும்.
பயன்படுத்தி பாருங்கள் வேறுபாட்டை உணர்வீர்கள்!
சர்க்கரை நோயாளிகளும் பனைவெள்ளத்தை சாதாரணமாக பயன்படுத்தலாம்.