வேலைகளை இலகுவாக்குவோம் (Useful kitchen tips)

எப்படி வேலைகளை  இலகுவாக்கி (Useful kitchen tips) சமையலறையை சுத்தமாக வைத்திருப்பது என்று பார்போம்.சமையலறையை சுத்தமாக வைத்திருக்க யாருக்கு தான் பிடிக்காது. சமையலறை சுத்தமாக இருந்தால், பார்ப்பதற்கு அழகாக மட்டும் அல்லாமல் ஆரோக்கியமும் அந்த வீட்டில் நிறைந்திருக்கும்.சந்தோசம்  நிலைத்திருக்கும்.

இப்போது  அநேகமான பெண்களுக்கு வேலை ,குடும்ப பராமரிப்பு, சமையல், பிள்ளைகள் கவனிப்பு, வீட்டு வேலை ….. என பட்டியல் நீண்டுகொண்டே போகும். இதனால் நேரம் என்பது பெரிய பிரச்சனையாக  உள்ளது.

உதாரணமாக தேங்காய் துருவி பிழிந்து பால் எடுத்து சமைக்க அதிக நேரம் பிடிக்கும். மின்சார தேங்காய் துருவியைப் (Electric coconut grater) பயன்படுத்திபாருங்கள். வேலையும் இலகு.நேரமும் மிச்சம்.

சமையலறையை சுத்தமாக வைத்துக்கொள்ள சில பயனுள்ள குறிப்புகள்(Useful kitchen tips)

இட்லி ஊற்றும் பாத்திரம் அடியில் எரியாமல் இருக்க தண்ணீரில் எலுமிச்சைத் தோல் அல்லது சிறிது புளியைப் போட்டு விட்டால் பாத்திரம் அடிப்பிடிக்காமல் இருப்பதோடு கறுக்காமலும் இருக்கும்.

சின்க்கின் அடியில் குப்பைத் தொட்டியை வைக்கும் பொழுது பக்கத்தில் பேக்கிங் சொடாவை ஒரு கிண்ணத்தில் போட்டு வைத்தால் துர்நாற்றம் வராது.

காய்கள், பழங்கள் வெட்டும் கத்தியில் இருக்கும் கறைகளை நீக்க அதன் மீது வெங்காயத்தை தேய்த்து துணியால் துடைத்தால் கத்தி சுத்தமாகி விடும்.

எலுமிச்சை சாறு அல்லது தோலைக் கொண்டு கிச்சன் சுவரைத் துடைத்தால் அதில் படிந்திருக்கும் எண்ணெய் கறை நீங்கி விடும்.
 
கண்ணாடிப் பாத்திரம் உடைந்து விட்டால் சிறிது அரிசி மாவைப் பிசைந்து அந்த இடத்தை ஒத்தி எடுத்தால் கண்ணாடித் துகள்கள் மாவில் ஒட்டிக் கொள்ளும்.

சமையலறையில் எறும்பு வராமல் இருக்க உப்பு கலந்த நீரை சமையல் மேடையின் நான்கு ஓரங்களிலும் தெளித்து விட்டால் எறும்புத் தொல்லை இருக்காது.

பால் பாத்திரத்தை குளிர்ந்த நீரில் கழுவிய பிறகு பாலை ஊற்றி அடுப்பில் வைத்தால் பால் அடியில் ஒட்டிக் கொள்ளாது.

இரவு உறங்குவதற்கு முன்பு கிச்சன் சின்கில் சிறிது பேக்கிங் சோடாவைத் தூவி விட்டு காலையில் பழைய டூத் ப்ரஸ்ஸால் தேய்த்துக் கழுவினால் சின்க் புதியது போல் மின்னும்.

எலுமிச்சைசாறுடன் பேக்கிங் சோடா கலந்து கிச்சன் குழாய்களை துடைத்தால் அவை பளிச்சென்று சுத்தமாகி விடும்.

காய் நறுக்கும் பலகையில் உப்பு தூவி அரை மூடி எலுமிச்சம் பழத்தைக் கொண்டு தேய்த்தால் பலகை சுத்தமாகி விடும்.

கண்ணாடியை துடைக்கும் போது பழைய செய்தித் தாளை தண்ணீரில் நனைத்து துடைத்தால் கண்ணாடி பளிச்சென்று இருக்கும்.

கீழேயுள்ள வீடியோ உங்களது நேரத்தை எப்படி மிச்சப்படுத்தலாம்,வேலைகளை இலகுவாக்கலாம் என்பதைக் காட்டுகின்றது (Useful kitchen tips). நீங்களும் உங்களுக்கென நேரம் இல்லாமல் கஸ்டப்படுகின்றீர்காளா. அப்பா வீடியோவை பாருங்கள்.

மேலும் சில பயனுள்ள குறிப்புகள்

பிஸ்கட்டுகளை டப்பாக்களில் அடைத்து வைக்கும் போது, டப்பாவிற்குள் டிஷ்யூ பேப்பரை வைத்துவிட்டால், பிஸ்கட்டுகள் நீண்ட நாட்களுக்கு ஃபிரஷ்ஷாக  இருக்கும்.
 
தயிர் புளித்துவிடும் என்ற நிலை வருகிறபோது அதில் ஒரு துண்டு தேங்காயைப் போட்டு வையுங்கள். தயிர் புளிக்காது.
 
கீரையை வேகவிடும் போது சிறிது எண்ணெய்யை அதனுடன் சேர்த்து வேகவைத்தால் கீரை பசுமையாக ருசியாக இருக்கும்.
 
முட்டைகளை 30-40 நாட்கள் வரை கெடாமல் வைப்பதற்கு, அதன் மேல் சமையல் எண்ணையை ஒரு பிரஷால் தடவவும்.
 
உருளைக்கிழங்குகளை வெங்காயங்களுடன் வைத்தால் அவை சீக்கிரமாக கெட்டுப்போய்விடும். அவ்வாறு அவை கெடாமல் இருப்பதற்கு, அந்த உருளைக்கிழங்குகள்  இருக்கும் பைக்குள் ஒரு ஆப்பிள் பழத்தை வைக்கவும்.
 
ஸ்வீட் செய்து இரும்பு அல்லது அலுமினியத் தட்டில் தான் கொட்டவேண்டும். எவர்சில்வர் தட்டு சரிப்படாது.
 
வெங்காயம் நறுக்கிய பிறகும், பூண்டு உரித்த பிறகும் கைகளில் ஏற்படும் வாடையை போக்க கைகளை ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ஸ்பூன்களில்(Stainless steel spoon) தேயுங்கள்.
 
பிரியாணி போன்ற மசாலா கலந்த அரிசி உணவுகளை செய்யும் போது, உணவு அடிப்பிடித்து விட்டால் உணவின் மீது ஒரு பிரெட் துண்டினை வையுங்கள், தீய்ந்த வாசனை காணாமல் போய்விடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *