உடலைப் பாதுகாக்கும் உஸ்ட்ராசனம் (Ustrasana)
நோய்களுக்கு இடங்கொடுக்காமல் உடலைப் பாதுகாக்கும் ஆசனம் உஸ்ட்ராசனம் (Ustrasana) ஆகும். இடுப்பு, தோள்கள், கழுத்துக்கு வலிமை தரும் .பொதுவாக உடம்பை மிகவும் ஆரோக்கியமாக வைக்க உதவும்.
இந்த ஆசனம் செய்து வந்தால் கழுத்து, தோள்கள், முதுகெலும்பு, நுரையீரல், சுவாசக்குழாய், தொடைகள், இடுப்பு கைகள் வலுப்பெறும். இடுப்பு வலி, கழுத்து வலி, தொடைகள், மார்பு அழகான வடிவம் பெறும்.
உஷ்டிர என்றால் ஒட்டகம் என்று பொருள். இந்த ஆசனம் ஒட்டகம் போன்ற வடிவில் இருப்பதால் உஷ்டிராசனம் என்று அழைக்கப்படுகிறது.
உஸ்ட்ராசனம் செய்யும்முறை (Ustrasana)
- விரிப்பில் முட்டி போடவும். இரண்டு முட்டிகளுக்கு இடையே இடுப்பு அளவு இடைவெளி இருக்க வேண்டும். இரண்டு பாதங்களுக்கு இடையேயும் இடைவெளி இருக்க வேண்டும்.
- உங்கள் முட்டி இடுப்புக்கு நேர் கீழாக இருக்க வேண்டும்.
- மெதுவாக மூச்சை உள்ளிழுத்தவாறே பின்னால் சாயவும்.
- வலது கையால் வலது கணுக்காலையும் இடது கையால் இடது கணுக்காலையும் பிடிக்கவும். அல்லது, பாதங்களின் மீது உங்கள் உள்ளங்கைகளை வைக்கவும்.
- முடிந்த அளவு முதுகை வளைக்கவும். தொடை நேராக இருக்க வேண்டும்.
- தலையை பின்னால் சாய்க்கவும்.
- 20 வினாடிகள் இந்த நிலையில் இருந்த பின், உடலை தளர்த்தி அமரவும்.
- பின் இயல்பு நிலைக்குத் திரும்பவும். இரண்டு மூன்று முறை செய்யலாம்.
உஸ்ட்ராசனத்தின் பயன்கள்(Benefits of Ustrasana)
முதுகெலும்பை வலுப்படுத்தும்.முதுகுவலி, இடுப்பு வலி அனைத்தும் போக்கும்.தொந்தி குறையும்.மார்பு விரிவடையும்.கால்கள், கைகள், புஜங்கள் பலம் பெறும்.எவ்வித நோயும் உடலை அண்டாது.
வடமொழியில் உஸ்ட்ரா என்றால் ஒட்டகம். ஒட்டகங்கள் பாலைவனத்தில் பல மைல் தூரத்துக்கு ஓடுகின்றன என்றால் அதற்குக் காரணம் அதன் பலமான நுரையீரல்களே ஆகும். உஸ்ட்ராசனம் செய்யும் போது மார்பு பகுதி விரிந்து மூச்சு மண்டலம் நன்கு விரிவடைந்து நுரையீரலின் விரியும் தன்மையை ஒழுங்குப்படுத்துகிறது. அதன் மூலம், நுரையீரல்கள் பலமடைகின்றன. இதுதான் இந்த ஆசனத்தின் சிறப்பு.