மூட்டுவலி நீக்கும் உட்காட்டாசனம் (Utkatasana)
உட்காட்டாசனம் செய்முறை
உட்காட்டாசனம் (Utkatasana) செய்வதற்கு முதலில் நேராக நிமிர்ந்து நிற்க வேண்டும். பின் கால்களுக்கு இடையில், ஒரு அடி அகலம் இருக்குமாறு காலை விரித்து வைக்கவும். கைகளை நேராக தோள்பட்டை அளவிற்கு முன்னே நீட்ட வேண்டும்
உடம்பை மெதுவாக கீழே இறக்கி நாற்காலியின் மீது அமர்வது போல் உட்கார வேண்டும். தொடையின் மேல் பகுதி கிடைமட்டமாக இருக்க வேண்டும்.
ஆசனத்தின் இறுதி நிலையில் முதுகெலும்பு நேராக, 90 டிகிரியில் இருக்க வேண்டும்.
முன் பக்க உடம்பை வளைக்கக் கூடாது.20 அல்லது 30 வினாடிகள் வரை செய்ய வேண்டும். ஆரம்ப நாட்களில், 5 முதல் 10 வினாடிகள் வரை செய்யலாம்.
உட்காட்டாசனம் (Utkatasana) செய்வதால் கிடைக்கும் பலன்கள்
- 5 நிமிடம் உட்காட்டாசனம் (Utkatasana) செய்ய செய்தால் 5 கி.மீற்றர் தூரம் நடந்த பலன் கிடைப்பதோடு, மேலதிக பலன்களும் கிடைக்கும்.
- பிராண சக்தியினை உயர்த்தும்.
- மனம் அமைதி கிடைக்கும்.மனஅழுத்தம் நீங்க உதவும்.
உட்காட்டாசனம் எப்படி செய்வது என விரிவான விளக்கம் வீடியோவைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
குணமாகும் நோய்கள்
- மூட்டு வலி, கால் வலி, இடுப்பு வலி, முழங்கால் வலி, குதிகால் வலி, சர்க்கரை நோய், யானைக்கால் வியாதி போன்ற வியாதிகள் நீங்கும்.
- கணுக்கால் மூட்டு, கால் சதைகள் பலம் பெறும்.
- கால் முட்டி பலம் பெறும்.
- தோள்பட்டையில் உள்ள இறுக்கத்தை நீக்கும்.கால் மூட்டு வீக்கம் நீங்கும்.
ஒரே இடத்தில் பல மணி நேரம் அமர்ந்து வேலை செய்பவர்ககளுக்கு, இது ஓர் சிறந்த ஆசம். உட்காட்டாசனம் செய்வதால், இரத்த ஓட்டம் சீராக இருக்கும். மூட்டுவலி இருந்தால் அதுவும் நாளடைவில்குறைந்துவிடும்.
மூட்டில் நீர் தேங்கல், வலி, வாதம் போன்றவை இல்லாமல் போகும்.
சிறுவர் முதல் பெரியவர் வரை உட்கட்டாசனத்தை செய்யலாம். மிகுந்த பலன் கிடைக்கும்
பெண்கள் அவசியம் இந்த ஆசனத்தை செய்ய வேண்டும். குறிப்பாக குடும்பப் பெண்களுக்கு திருமணத்திற்கு பிறகு, குழந்தை பிறந்தவுடன் மூட்டில்வலி, வாதம் ஏற்படுகின்றது.இதனால் பெண்கள் காலை, மதியம், மாலை என மூன்று வேளையும் பயிற்சி செய்யலாம்.மூட்டு வலியும் மறையும். சுறுசுறுப்பாக வாழாம்.
மூட்டில் அறுவை சிகிச்சை செய்தவர்கள், மூட்டில் அதிகமான வீக்கம் உள்ளவர்கள், கண்டிப்பாக சரியான வழிகாட்டுதலுடன் செய்ய வேண்டும்.