உத்தித பத்மாசனம் (Utthita padmasana)

உத்tiத பத்மாசனம் (Utthita padmasana) என்பது , முதலில் பத்மாசனம் நிலையில் அமர்ந்து கொண்டு,பின்னர் உள்ளங்கை இரண்டையும் கால்களில் பக்கத்தில் தரையில் படும்படி வைத்து உடலை மேலே தூக்குதலாகும்.

உத்தித என்றால் மேல் என்று பொருள். பத்மம் என்றால் தாமரை. மேல் உயர்த்திய தாமரை நிலை என்பது தான் உத்தீத பத்மாசனம் (Utthita padmasana) என்பதன் அர்த்தம் ஆகும்.

உத்தித பத்மாசனம் செய்யும் முறை

விரிப்பின் மேல் பத்மாசனம் நிலையில் அமர்ந்து கொள்ளவும்.

கைகளை பலமாக தரையில் பதித்துக் கொண்டு, பத்மாசனம் கலைந்துவிடாதவாறு  மெதுவாக உடலை மேலே தூக்க வேண்டும்.

இவ்வாறு செய்யும் போது உடலை ஆடாமலும் நடுக்கம் இல்லாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்.பார்வை நேராக  இருக்க வேண்டும்.அளவுக்கு உடல் நேராக நிமிர்ந்து இருக்க வேண்டும். சாதாரண மூச்சில்  செய்தால் போதுமானது.

உத்தித பத்மாசனத்தை 3 தடவை செய்தால் போதும்.

பத்மாசனம் போட முடியாதவர்கள் சாதாரண நிலையில் உட்கார்ந்து உடலை மேலே தூக்கலாம். ஆரம்பத்தில் மூச்சு பிடிக்கத் தோன்றும்.Utthita padmasana,annaimadi.com,yoga for diabetes,no gas trouble,yoga,strong shoulder,arm

சாதாரண மூச்சுடன் செய்வது நல்லது. ஒரு முறைக்கு 15 வினாடியாக 3 முறை செய்தால் போதுமானது. பார்வை நேராக இருக்க வேண்டும். கைகளைத் தங்கள் சௌகரியம் போல் வைத்துக் கொள்ளலாம். கால் மூட்டுகள் மேல் நோக்கிச் செல்ல முயற்சிக்கவும்.

உத்தித பத்மாசனத்தால் பெறும் (Utthita padmasana) பயன்கள்

தொப்பையை குறைக்க உதவுகிறது.

சீராக செய்து வந்தால் வயிற்றில் காணப்படும் தேவையற்ற சதைகள் காணாமல் போய்விடும்.

உடலில் வாய்வுத் தொல்லைகள் அகன்றுவிடும்.

புஜம்,தோள்பட்டை, மணிக்கட்டு மற்றும் அடிவயிற்று தசைகள் பலமடைகின்றன.

குடல் இறக்கம்  தடுக்கப்படுகிறது.Utita padmasana ,yoga pant,yoga.annaimadi.com

Check Price

உடல் எடை குறைகிறது.
கைகளுக்கு நன்கு பலம் கிடைக்கிறது.

 ஜுரண உறுப்புகள் நன்கு வேலை செய்யும்.

கணையம் நன்கு வேலை செய்வதால் , நீரழிவு நோய் நீங்கவும் வராமல் இருக்கவும் இவ்வாசனம் செய்வது ஆசனம் சிறந்தது.

நெஞ்சு விரிவடைவதால், ஆஸ்துமா நோயுள்ளவர்களுக்கு நுரையீரலில் அதிக காற்றை இழுக்கும் நிலை ஏற்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *