முதுகுவலி போக்கும் வஜ்ராசனம் செய்வோம் (Vajrasana)
வஜ்ராசனத்தை (Vajrasana) பயிற்சி செய்து வந்தால் உடல் பலப்பட்டு உறுதியாகும். வஜ்ராசனம் மிகவும் இலகுவான யோகாசனம் ஆகும்.
மிகுந்த சிரமப்பட்டுச் செய்கின்ற ஆசனங்களை விட இலகுவாகச் செய்கிற சில ஆசனங்கள் நல்ல பலனைத் தரும். அவற்றில் ஒன்றாக வஜ்ராசனத்தைக் (Vajrasana) கருதலாம்.
இதன் இன்னொரு சிறப்பு இந்த ஆசனத்தை எந்த நேரமும் செய்யக் கூடியதாக இருப்பது.
அதாவது சாப்பிட்ட பின்னரும் கூடச் செய்யக் கூடிய ஆசனம் இதுவாகும்.
பொதுவாக இறை பிரார்த்தனைகள் , தியானத்தின் போது வஜ்ராசனநிலையில் (Vajrasana pose) அமர்ந்து இருந்து செய்வதை அவதானித்திருப்பீர்கள்.இந்திரனின் வஜ்ராயுதத்தைப் போன்ற பலத்தை இது உடலுக்கு கொடுக்கும் என்ற கருத்தின் அடிப்படையில் இந்த பெயர் வந்திருக்கிறது.
வீடியோவைப் பார்த்து மிகவும் ஆறுதலாக வஜ்ராசனம் செய்ய பழகுங்கள். பயன் பெறுங்கள்.
வஜ்ராசனம் செய்யும் போது கைகள் இரண்டையும் இரு தொடைகளின் மேல் சின் முத்திரையில் வைத்திருக்கலாம். அல்லது சாதாரணமாக வைக்கலாம்.
செய்ய ஆரம்பிப்பவர்கள் முதலில் 5 நிமிடங்களுக்கு இதே நிலையில் இருக்கலாம். கால்களில் வழியை உணர்ந்தால் கலைத்து விட்டு ஆசனத்தை மீண்டும் தொடரவும்.
அதிக முதுகுவலி, மூட்டுவலி, முட்டி தேய்மானம் உள்ளவர்கள் இந்த ஆசனம் செய்வதைத் தவிர்க்கவும். அல்லது தகுந்த வழிகாட்டலுடன் மிக மெதுவாக செய்து பார்க்கலாம்.
வஜ்ராசனம் செய்வதால் கிடைக்கும் பலன்கள்( Vajrasana benefits)
செய்வதற்கும் பார்ப்பதற்கும் மிக எளிதாக இருக்கும் வஜ்ராசனம், உடலுக்கு அதி அற்புத பலன்களை தரும்.
வயிறு, இடுப்பு மற்றும் தொடைப் பகுதிகளில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்துவிடும்.
தொப்பையும் கரைந்து விடும். தினமும் 20 நிமிடங்கள் செய்தால் உடல் எடை குறையும்.